| தாகவும் குறுகாராயினர் எனவரும் மேற் சரித வரலாற்றுக்குக் காரணம் உணர்த்தப்பட்டது; நம்பிகள் உலகை மறந்த யோகத்திற் சிவனைக் கண்டுகொண்டவாறே விரைவிற் சென்றருளினர் என்பதாம். |
| ஆடகம் - பொன்னாலியன்ற வேலைப்பாடுடைய மதிற் பகுதிகள். |
| ஆலக்கோயிலின் அமுதை - கச்சூர் - ஊர்ப்பெயரும், ஆலக்கோயில் - கோயிலின் பெயருமாம்; பூங்கோயில், பெருங்கோயில் என்றாற்போல்; அமுது - என்றது பின்னர்ப் பசிதீர நம்பிகளுக்குக் கருணையினால் அமுதளித்தருளும் வரலாற்றுக் குறிப்புப்படக் கூறியதாம். ஆலக்கோயிலுளிருப்பினும் அவர் அமுதமேயாவர் என்ற நயம்படக் கூறியதுமாம். (ஆலம் - விடம்.) |
| கூடிய - மனத்துள்ளே கண்டவாறே புறத்திலும் கிடைக்கும்படி வந்துகூடிய. |
3329 | அணைந்தருளு மவ்வேலை யமுதுசெயும் பொழுதாகக் கொணர்ந்தமுது சமைத்தளிக்கும் பரிசனமுங் குறுகாமைத் தணந்தபசி வருத்தத்தாற் றம்பிரான் றிருவாயிற் புணர்ந்தமதிற் புறத்திருந்தார் முனைப்பாடிப் புரவலனார். | |
| 175 |
| (இ-ள்.) அணைந்தருளும்...பொழுதாக - கும்பிட்ட பின் திருக்கோயிற்புறத்தில் அணைந்த அந்நேரத்தில் திருவமுது செய்தருளும் காலம் ஆயிடவும்; கொணர்ந்து...குறுகாமை - கொண்டுவந்து திருவமுது ஆக்கி உதவும் பரிசனங்களும் வந்து சேராமையினாலே; முனைப்பாடிப் புரவலனார் - திருமுனைப்பாடி நாட்டின் தலைவராகிய நம்பிகள்; தணந்த....புறத்திருந்தார் - நீக்கிய பசியினால் வந்த வருத்தத்தினாலே தமது பெருமானது திருவாயிலினுடன்கூடிய திருமதிலின் புறத்தே தங்கியருளினர். |
| (வி-ரை.) அமுது செயும் பொழுது ஆக - அமுது செய்தற்குரிய காலம்; இது "கடும்பகற்போது" (3332) என்றும், "உச்சம்போது" (பதிகம்) என்றும் ஈண்டு அறியப்படும். காலைக் கடன்களும், இறைவர் வழிபாடும் முடித்தபின் நண்பகல் என்னும் உச்சிப்போதி லன்றி உணவு கொள்ளாமை நமது முந்தையோர் கொண்ட நல்வழக்கு என்பது ஈண்டு அறிவிக்கப்பட்டமை காண்க; இஃது உடலுக்கு நல்வாழ்வும் நீடிய ஆயுளும் தருவது என்பது மருத்துவ நூலோர் கண்ட உண்மை.
Noon break fast System- நண்பகலுக்கு முன் உண்ணாமை - என்று இதனைப் புதியதோர் முறையாகக்கொண்டு கையாளுவர் சில நவீனர். ஆக - ஆகவும்; சாரவும்; சிறப்பு உம்மை தொக்கது. |
| கொணர்ந்து அமுது சமைத்து அளிக்கும் பரிசனமும் குறுகாமை - அமுது கொணர்ந்தாயினும் சமைத்தாயினும் அளிக்கும் என்க; சமைத்தளித்தற்குப் போதிய இடையிருப்பின் சமைத்தும், அஃதில்லையேல் கொணர்ந்தும் அளிக்கும் என்க; கொணர்தல் - பின்னர் இறைவர் செய்தருளியபடி அந்தணர் மனைகளிலிருந்து வேண்டிப் பெற்றுக் கொணர்தல். உணவு அமைத்தற்குரிய சாதனங்களைக் கொண்டுவந்து என்றலுமாம்.சோறு விலைக்கு வாங்கிக் கொணர்தல் என்பது முந்நாளில் இல்லை; சோற்று வாணிபம் பிற்காலத்தில் வந்து முளைத்துப் பரவிக் கேடுகள் பலவற்றுக்கும் காரணமாகும் தீய வழக்கங்களுள் ஒன்று; பரிசனம் - நம்பிகளுடனே தலயாத்திரையில் இத்தகைய சமையற் பரிசனமும் ஏவலாளரும் உடன் சென்றனர்; ஆளுடைய பிள்ளையாருடன் பல்லாயிரம் பரிசனமும் பிறரும் உடன் சென்றமையும், |