| துறவற நிலையின ராதலின் ஆளுடைய அரசுகளுடன் அவ்வாறு பரிசனங்கள் தொடராமையும் கண்டு நினைவுகூர்க. குறுகாமை - குறுகாமையால்; வராத காரணத்தால். |
| தணந்த பசி வருத்தம் - தணந்த - நீக்கிய; சிவயோகத்தின் நிலைத்த காரணத்தால் முன்னர்த் தம்மை அணையாது நீக்கிய என்பதாம். "பசி வந்திடப் பறந்துபோம்" என்ற உலகியல் நீதிக்கு மாறாக நீக்கிய என்க; "கனல்வாதை வந்தெய்தி னள்ளிப் புசித்துநான் கண்மூடி மவுனியாகித், தனியே யிருப்பதற் கெண்ணினேன்" (தாயுமானார்) என்று யோகிகள் பாலும் ஓரோர்கால் வந்து வருத்தம் செய்வது பசிநோய் என்று காட்டியநிலை காண்க; "பசிநோய் செய்த பறிதான்" "பாடுவார் பசிதீர்ப்பாய்" (நம்பி. தேவா.) என்று நம்பிகள் இதனை எடுத்துக் கூறுதல் காண்க. "வழி போம் பொழுது மிக விளைத்து வருத்த முறநீர் வேட்கையொடும், அழிவாம் பசிவந்தணைந்திடவு மதற்குச் சித்த மலையாதே, மொழிவேந் தருமுன் னெழுந்தருள" (1569) என்ற அரசுகள் வரலாறும் காண்க; "ஓவா - தழுவான் பசித்தானென் றாங்கிறைவன் காட்டத், தொழுவான் றுயர் தீர்க்குந் தோகை....அப்ப, னருளாலே, யூட்டுதலும்" (ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை), "தாதையொடு வந்த வேதியச் சிறுவன், றளர்நடைப் பருவத்து வளர்பசி வருத்த, வன்னா யோவென் றழைப்ப" (கழுமல மும்மணிக்கோவை - 1) என்று வரும் ஆளுடைய பிள்ளையார் வரலாறுகளும் கருதுக; (குறிப்பு - ஈண்டுக் குறித்த பசி வேறு என்பது.) |
| திருவாயிற் புணர்ந்த மதிற் புறத்திருந்தார் - உச்சிக்கால வழிபாடு முடிந்தவுடன் கோயில் திருக்கதவம் திருக்காப்பிடும் நிலையும், அதன்பின் பசி முதலிய வேட்கையுடையோர் மற்றெவரும் திருக்கோயிலினுள்ளே தங்கலாகாத நிலையும் காரணமாக மதிற்புறத்தே திருவாயிலில் இருந்தனர் என்பதாம். |
| முனைப்பாடிப் புரவலனார் - புரவலனாரேனும் என்று சிறப்பும்மை விரித்துரைத்துக் கொள்க; புரவலனாராயினும் தமக்குப் பசி வந்தடரும் நியதியின்பாற் படுவர் என்பதும், எவ்வுயிரினுள்ளும் உயிர்க்குயிராய் நிற்கும் இறைவர் அதனை அறிந்து ஊட்டினாலன்றி உயிர்கட்குச் செயலில்லை என்பதும், புரவலனார் என்று குறிப்பாகோடி, தொகுத்தார்க்குந் துய்த்த லரிது" (குறள்); ஈண்டு நம்பிகள் பரிசன முதலியனவாகிய அரசர் திருவெல்லா முடையாராயினும் பசியால் வருந்தியிருக்க நேர்ந்தது திருவருள் புலப்படுக்கும் நியதி. |
| 175 |
3330 | வன்றொண்டர் பசிதீர்க்க மலையின்மேல் மருந்தானார் மின்றங்கு வெண்டலையோ டொழிந்தொருவெற் றோடேந்தி அன்றங்கு வாழ்வாரோ ரந்தணராய்ப் புறப்பட்டுச் சென்றன்பர் முகநோக்கி யருள்கூரச் செப்புவார், | |
| 176 |
3331 | "மெய்ப்பசியான் மிகவருந்தி யிளைத்திருந்தீர்; வேட்கைவிட இப்பொழுதே சோறிரந்திங் கியானுமக்குக் கொணர்கின்றேன்; அப்புறநீ ரகலாதே சிறிதுபொழு தமரு"மெனச் செப்பியவர் திருக்கச்சூர் மனைதோறுஞ் சென்றிரப்பார், | |
| 177 |
3332 | வெண்டிருநீற் றணிதிகழ விளங்குநூ லொளிதுளங்கக் கண்டவர்கண் மனமுருகக் கடும்பகற்போ திடும்பலிக்குப் | |