| புண்டரிகக் கழல்புவிமேற் பொருந்தமனை தொறும்புக்குக் கொண்டுதாம் விரும்பியாட் கொண்டவர்முன் கொடுவந்தார். | |
| 178 |
| 3330. (இ-ள்.) வன்றொண்டர் பசிதீர்க்க - வன்றொண்டரது பசியினைத் தீர்க்கும் பொருட்டு மலையின்மேல் மருந்தானார் - மலையின்மேல் உள்ள மருந்து ஆகிய இறைவர்; மின்தங்கு...புறப்பட்டுச் சென்று - ஒளியுடைய வெண்டலையாகிய கபாலமாகிய பலிப்பாத்திரத்தை ஒழித்து வெறும் ஒரு திருவோட்டினை ஏந்திக் கொண்டு அன்று அவ்வூரில் வாழ்பவராகிய ஒரு அந்தணர்போலக் கோலங் கொண்டு புறப்பட்டுப் போய்; அன்பர்முக நோக்கிச் செப்புவார் - அன்பராகிய நம்பிகளது முகத்தைப் பார்த்துச் சொல்லுவாராய், |
| 176 |
| 3331. (இ-ள்.) மெய்ப்பசியால்...இளைத்திருந்தீர்; மெய்யால் வரும் பசியினால் மிகவருந்தி இளைப்படைந்திருந்தீர்; வேட்கைவிட...கொணர்கின்றேன் - உமது பசித்தாபம் நீங்கும்படி இப்பொழுதே சோறு இரந்து இங்கு உமக்குக் கொண்டு வருகின்றேன்; அப்புறநீர்...அமரும் எனச்செப்பி - நீர் இங்கு நின்றும் அப்புறம் நீங்காமல் சிறிது நேரம் இங்கு அமர்ந்திரும்ழு என்று சொல்லி; அவர்....இரப்பார் - அவ்வந்தணர் திருக்கச்சூரின் மனைகள் தொறும் போய் இரப்பாராகி; |
| 177 |
| 3332. (இ-ள்.) வெண்திருநீற்று....துளங்க - வெள்ளிய திருநீற்றின்அழகு விளங்கவும், விளங்கிய முந்நூலின் ஒளி அசைந்து வீசவும்; கண்டவர்கள் மனமுருக - காணப்பெற்றவர்கள் மனமெல்லாம் உருகவும்; கடும் பகற்போது....பொருந்த - கடிய உச்சிப்போதில் இடப்பெறும் பிச்சைக்காகத் தாமரைபோன்ற திருப்பாதங்கள் நிலத்தின்மேற் பொருந்தவும்; மனைதொறும் புக்குக்கொண்டு - வீடுகள்தோறும் சென்று சென்று இரந்த சோற்றினை எடுத்துக்கொண்டு; தாம்...கொடுவந்தார் - தாமே விரும்பித் தடுத்து ஆட்கொண்டருளிய நம்பிகள் முன்கொண்டுவந்தருளினர். |
| 178 |
| இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. இறைவர் ஓர் அந்தணராய் வந்ததும், நம்பிகளிடம் சொல்லிச் சென்றதும், சோறிரந்து கொடு வந்ததும் விரைந்து தொடர்ந்து நிகழ்ந்த செய்திகளாதலின் இம்மூன்று பாட்டுக்களையும் ஒரு முடிபுபடக் கூறிய கவிநயம் கண்டுகொள்க. |
| 3330. (வி-ரை.) மலையின்மேல் மருந்தானார் - மலைகளில் உள்ள மருந்துகள் சிறந்த குணமுடையவை எனப்படும். இங்குப் பசிநோய் தீர்த்தலின் இறைவரை மருந்தென்ற துருவகம். முன்னர் அமுது - (மரணந் தவிர்ப்பது) (3328) என்றதும் காண்க; இங்கு இறைவர் மலையின்மேல் எழுந்தருளியிருப்பதும் குறிப்பு; மருந்தானார் - ஆக்கச்சொல் இயல்புகுறித்த அளவில் நின்றது. "மலையின்மேல் மருந்தே" (பதிகம். 5) என்ற பதிக ஆட்சி போற்றப்பட்டது. |
| வெண் தலை ஓடு ஒழிந்து - இறைவர் பலியேற்கும் பலிப்பாத்திரம் பிரம கபாலமாகிய மண்டையோடு என்பர்; இங்கு அதனை விட்டு என்க. |
| ஒரு வெற்று ஓடு - வெறும் ஓர் ஓடு; உலகர் அறியாமைப் பொருட்டு வெற்றோடேந்தி வந்தார். |
| அன்று அங்கு வாழ்வார் ஓர் அந்தணராய் - அன்று - காலம்; அங்கு - இடம். வாழ்வார் - வாழ்பவராகிய; அவ்வூராராகிய; அந்தணராய் - அந்தணர் வேடம்பூண்டு; அந்தணர் போல. புறப்படுதல் - மறைந்த நிலையினின்றும் வெளிப்படுதல்; 3334-ம் பார்க்க. |
| முக நோக்கி - பசியின் வருத்தமும் இளைப்பும் முகத்தின் பொலிவினாற் றெரிந்தார் போன்று நோக்கிக் கூறுவார். |