|
  |  | அருள்கூர - அருள் மிகத் தோன்ற; "ஓதக்கண்டேன்" (9) என்றது பதிகக் குறிப்பு;   ஓதல் - அருள்மொழி கூறல். | 
  |  | செப்புவார் - செப்புவாராகி; முற்றெச்சம்; செப்புவார் - செப்பி - இரப்பார் -   புக்கு - கொண்டு - கொண்டுவந்தார் என்று இம்மூன்று பாட்டுக்களையும் சேர்த்து வினைமுடிபு   கொள்க. | 
  |  | ஒரு வேற்றோடு - என்பதும் பாடம். | 
  |  | 176 | 
  |  | 3331. (வி-ரை.) "மெய்ப்பசியால்...அமரும்" என - இஃது இறைவர் நம்பிகளை முகநோக்கிக்   கூறியது; நம்பிகளது பசியின் முடுகிய நிலையினைத் தாம் அறிந்துகொண்ட தன்மையினையும், ஆதலின்   அதற்கேற்பச் சோறு கொணர்தல் மிக விரைவில் நிகழும் நிலையினையும், வேறெங்கும் போந்தால்   தாமதமும் மேலும் இளைப்பும் உளதாம் என்று தாம் அளிகூரும் தன்மையினையும் புலப்படுத்தக் கூறியபடி   காண்க. | 
  |  | மெய்ப்பசி - மெய் - உடம்பு; உடம்பின் உபாதிகளுள் ஒன்றாகிய பசி; நோய் கொண்டார்பால்   சிலபோது பசியெனப் போலித்தோற்ற முண்டாவது போலன்றி, உண்மையான பசியின் நிலை; இப்பொழுதே   - விரைவு, நம்பிகளை ஆற்றுவிக்கும் குறிப்பு. | 
  |  | சோறு இரந்து - அந்தணர் மனைகளில் உச்சிப்போதிற் பிரமசாரிகள் முதலாயினோர்   சோறு இரக்கும் வழக்குண்மை புலப்படுத்துதல் காண்க; வழக்குண்மையாலே தான் நம்பிகள் ஐயப்படாது   உடன்பட்டிருந்தருளினர் என்க. | 
  |  | அகலாதே....அமரும் - சிறிது பொழுது - தாம் தாமதமின்றி விரைவில் வரும் குறிப்பு;  அப்புறம் அகலாது - என்றதும் வேகமாய் வந்துஅவரைக் கண்டுகொள்ளுதல் பிழையாத இடம்   குறித்தன. | 
  |  | மனைதோறும் சென்றிரப்பார் - அந்தணர்கள் மனைகள்தோறும் என்க; "ஊரூர்திரிய" -   பதிகம். | 
  |  | வேட்கைவிட - வேட்கை - சோற்றின் விருப்பம்; விட - நீங்க. | 
  |  | 177 | 
  |  | 3332. (வி-ரை.) வெண் திரு நீற்று...துளங்க - திருநீறும் புரிநூலும் சைவ அந்தணரின்   தோற்றமாகிய அடையாளம்; திகழ - துளங்க - மிக விளக்கமாகக் கண்டோர் மனங் கவர;  துளங்குதல் - உடலசையுந்தோறும் பூணூலும் துவண்டு அசைதல். | 
  |  | கண்டவர்கள் மனமுருக - "கண்டா லடியார் கவலாரே" "ஊரூர் திரியக் கண்டா லடியார்   உருகாரே"- (பதிகம்) | 
  |  | கடும் பகற்போது - "உச்சம்போது" - (பதிகம்) | 
  |  | கடும் பகற்போது இடும்பலிக்கு - மனை வாழ்வினர், ஒருவர் வந்து கேளாமல்தாமாகவே உச்சிப்போதில்   பலியிடும் மரபும் குறித்தது. | 
  |  | புண்டரிகக் கழல் புவிமேற் பொருந்த - வெயிலில் கால்தேய நடந்து சென்று. | 
  |  | புக்கு கொண்டு - (வீடுதோறும்) உள்ளே புகுந்து இடும் பலியினை ஓட்டிற் கொண்டு. | 
  |  | தாம்   விரும்பி யாட்கொண்டவர்பாற் கொடுவந்தார் - சோறிரந்தும் கொடுவந்ததன் காரணம் தாம்   விரும்பி வலிய ஆட்கொண்டமையால் எனக் கூறியபடி. | 
  |  | 178 | 
  | 3333 |                       | இரந்துதாங் கொடுவந்த வின்னடிசி லுங்கறியும் "அரந்தைதரும் பசிதீர வருந்துவீ" ரெனவளிப்பப்
 |  |