200திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

 
பெருந்தகையார் மறையவர்தம் பேரருளின் றிறம்பேணி
நிரந்தபெருங் காதலினா னேர்தொழுது வாங்கினார்.
 

179

  (இ-ள்.) இரந்து...அளிப்ப - மறையவர்தாம் இரந்துகொண்டு வந்த இனிய சோறும் கறிகளுமாகிய அவற்றை "வருத்தம் செய்யும் பசி தீரும்படியாக உண்பீராக!" என்று அளிக்க; பெருந்தகையார்....வாங்கினார் - பெருந்தகையாராகிய நம்பிகள் அம்மறையவருடைய பெருங் கருணையின் திறத்தினைப் பாராட்டி வரன் முறையால் திருவுள்ளத்து எழுந்த பெரிய காதலினால் அவர் முன்பு வணங்கி வாங்கினார்.
  (வி-ரை.) இரந்து...கறியும் - இரந்து கொண்டுவந்தவை இனிய சோறும், அதற்கு வேண்டும் கறி முதலியவைகளும், உண்ணுதற்கு வேண்டும் பிற சாதனங்களுமாம் என்பது.
  அரந்தை தரும் பசி - அரந்தை - துன்பம்; முன்னர்த் "தணந்த பசி" (3329) "மெய்ப்பசியான் மிகவருந்தி" (3331) என்றவை காண்க.
  அரந்தை...அளிப்ப - கருணையுடன் இன்சொற் கூறிக் கொடுக்க என்றது குறிப்பு. அளியின்றித் தரும் பண்டம் எத்துணைச் சிறந்தனவாயினும், இன்றியமையாதனவுமாயினும் உயர்ந்தோர் விரும்பார்; அவை பயனும் படா.
  பேரருளின் றிறம்பேணி - வாங்கினார் - "மனைவியார் தாம் படைத்த மதுர மிகவாய்ந்த கனி" (1740) என்றவிடத் துரைத்தவை பார்க்க; "முகந்திரிந்து, நோக்கக் குழையும் விருந்து" "முகத்தா னமர்ந்தினிது நோக்கி யகத்தானா, மின்சொ லினதே யறம்" (குறள்) என்பன முதலிய நீதிநூல் வகுத்த உண்மைகள் காண்க; "கேளல் கேளிர் வேளாண் சிறுபத, மதுகை யின்றி வயிற்றுத்தீத் தணியத், தாமிரந் துண்ணுமளவை, யீன்ம ரோவிவ் வுலகத் தானே" (புறம் - 74) எனச், சிறையிற் கிடந்து, தண்ணீர் தாவென்று பெறாது, பெயர்த்துப்பெற்றுக், கைக்கொண்டிருந்து, உண்ணான் சொல்லித் துஞ்சிய சேரமான் கணைக்காலிரும் பொறையின் பாட்டின் உள்ளுறை ஈண்டுக் கருதத்தக்கது.
  பெருந்தகையார்....பேணி வாங்கினார் - அம்மறையவர் கொணர்ந்த இரப்புச் சோற்றைத் தமது பசிதீர்த்தல் கருதி வாங்கினாரல்லர்; அவரது பெருங் கருணையின் றிறம் பாராட்டி அவர்பொருட்டே வாங்கினார் என்பது குறிப்பு; தாமேயிரந்து பெறுதலும், தமக்காகச் சென்று பிறர் இரந்துபெறுதலும் தன்மையால் ஒன்றே யாமாதலின், "இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற், பரந்து கெடுக வுலகியற்றியான்" என்றபடி எமது பரமாசாரியராகிய தமிழ் நாவலர் பெருமான் இரப்புச் சோற்றினால் தம் பசிதீர வயிறு நிரப்பவேண்டி வாங்கினாரல்லர் என்பது பெறப்படும். பெருந்தகையார் - என்ற குறிப்புமது; முன்னரும் "மறைமுனிவர் பொதிசோறு - எதிர் விலக்கலாகாது" (3314) என்ற கருத்தினால் பொதிசோறு வாங்கி உண்ட நம்பிகளது செயல் ஈண்டு நினைவு கூர்தற்பாலது.
  நிரந்த பெருங்காதல் - இவ்வாறு வரும் நினைவுகளால் வரன்முறையே நம்பிகளது திருவுள்ளத் தெழுந்த பேரார்வம்.
 

179

3334
வாங்கியவத் திருவமுது வன்றொண்டர் மருங்கணைந்த
ஓங்குதவத் தொண்டருட னுண்டருளி யுவந்திருப்ப
ஆங்கருகு நின்றாற்போ லவர்தம்மை யறியாமே
நீங்கினா ரெப்பொருளு நீங்காத நிலைமையினார்.
 

180