[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்203

  எழுந்தருளிற்று - எழுந்தருளிய பெரிய அருள் இருந்தவாறு தானென்னே என்று அதிசயப்பட்டது.
  என் பொருட்டாம் - மிக எளியவனாகிய என் பொருட்டு என்பது.
 

என் பொருட்டா மெனவுருகி - அவரது அளவிடற்கரிய பெருமையும் தமது அளவிடற்கரிய சிறுமையும் எண்ணவே மனமுருகி; "இத்தனையு மெம்பரமோவைய வையோ வெம்பெருமான் றிருக்கருணை யிருந்தவாறே" (தேவா).

 

181

  3336. (வி-ரை.) "முதுவாய் ஓரி" என எடுத்து - இது பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு.
  "முதல்வனார்தம்...இது" என்று - இது பதிகக்கருத்தாகிய குறிப்பு. "அதுவேயாமா றிதுவோ" என்ற பதிகத்துப் பொருள் காட்டியவாறு.
  பெருங்கருணை - முன் பாட்டிற் கூறிய செயல்கள் கருணைத் திறத்தை எடுத்துக் காட்டின; சேவடி வருந்த வருதல், உருவெடுத்து வருதல், பெரும் பகற்கண்வருதல், மனைதோறும் சென்று வருதல், மிகப் பசித்தீர் என்று இன்மொழிகூறிச்சோறு கொண்டுவந்து ஊட்டுதல், "ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற், கிரப்பி னிளிவந்த தில்" (குறள்) என்று வகுத்த இழிவுபடும் இரப்புத் தொழிலும் செய்தல் முதலாயின.
  அதிசயம் - இத்துணையும் அடியான் பொருட்டு ஆண்டான் செய்தமை உணர்ந்ததனால் வரும் பெருமிதமாகிய மனநிலை.
  கண்ணீர் மழையருவிப் புதுவார் புனலின் - மிக்க கண்ணீர் பொழிதலினால் உடல் முழுதும் நனைதல் குறித்தது.
  புனலின் மயிர்ப்புளகம் புதைய - புளகம்படச் சிலிர்த்துநின்ற மயிர், கண்ணீர் அருவியினால் நனைந்து கவிய.
  கண்ணீர் மழையும் புளகமும் - அதியத்தின்கண் வந்த மெய்ப்பாடுகள்.
  போற்றிசைத்து - வாக்கின் றொழில். மகிழ்ந்து - இவ்வாறு மன மெய்ம்மொழி என்ற மூன்றினாலும் வழிபட்டதனால் வரும் ஆனந்தம்.
 

182

  திருக்கக்சூர் ஆலக்கோயில்
  திருச்சிற்றம்பலம்

பண் - கொல்லிக் கௌவாணம்

 
முதுவா யோரி கதற முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வானே
மதுவார் கொன்றைப் புதுவீ சூடு மலையான் மகடன் மணவாளா
கதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டா லடியார் கவலாரே
அதுவே யாமா றிதுவோ! கச்சூ ராலக் கோயி லம்மானே.
 

(1)

 
கச்சே ராவொன் றரையி லசைத்துக் கழலுஞ் சிலம்புங் கலிக்கப்பலிக்கென்
றுச்சம் போதா லூரூர் திரியக் கண்டா லடியா ருருகாரே
இச்சை யறியோ மெங்கள் பெருமா னேழேழ் பிறப்பு மெனையாள்வாய்
அச்ச மில்லாக் கச்சூர் வடபா லாலக் கோயி லம்மானே.
 

(2)

 
பிறவா யிறவாய் பேணாய் மூவாய் பெற்ற மேறிப் பேய்சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகா டென்று மிடமாக் கொண்டு நடமாடி
ஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டா லடியா ருருகாரே
அறவே யொழியாக் கச்சூர் வடபா லாலக் கோயி லம்மானே.
 

(6)

 
காதல் செய்து களித்துப் பிதற்றிக் கடிமா மலரிட் டுனையேத்தி
யாதல் செய்யு மடியா ரிருக்க வையங் கொள்ள வழகிதே