| ஓதக் கண்டே னுன்னை மறவே னுமையாள்கணவா வெனையாள்வாய் ஆதற் பழனக் கழனிக் கச்சூ ராலக் கோயி லம்மானே. | |
| (9) |
| அன்ன மன்னும் வயல்சூழ் கச்சூ ராலக் கோயி லம்மானை யுன்ன முன்னு மனத்தா ரூர னாரூ ரன்பேர் முடிவைத்த மன்னு புலவன் வயனா வலர்கோன் செஞ்சொ னாவன் வன்றொண்டன் பன்னு தமிழ்நூன் மாலை வல்லா ரவரெந் தலைமேற் பயில்வாரே. | |
| (10) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு :- முன்னர் (3336) ஆசிரியர் காட்டி யருளியவாறு. இறைவர் தம்பாற் செய்த பெருங் கருணையிற் றிளைத்து மகிழ்ந்து வணங்கியது. |
| பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) முதுவாய் ஓரி கதற முதுகாட் டெரிகொண்டாடல் முயல்வானே - ஓரி - குள்ளநரி. நண் பகற்பொழுது பாலைக்குரியது; "காலவேனிலிற் கடும்பகற் பொழுதினைப் பற்றிப், பாலையுஞ் சொலாவன" (1092). இங்கு நண்பகற் பொழுதின்கண் இறைவர் போந்து திருவருட்செய்கை செய்கின்றாராதலின் அந்நிகழ்ச்சிக்குரிய எரிகாடு - ஓரி - பேய் (6) முதலியவை பற்றிக் கூறுகின்ற தமிழ்மணமும், இறைவரையேபற்றிக் கூறுகின்ற சிவமணமும் கண்டுகொள்க. புலவன் - செஞ்சொல்" "தமிழ்நூல் மாலை" (10) புதுவீ - புதிய பூ; முயலுதல் - ஈண்டுச் செய்தல் என்னும் பொருளில் வந்தது; கதுவாய் - விரிந்தகன்ற வாய்; அடியார் கவலாரே - ஏகாரம் வினா; கவல்வார் என உடன்பாடு குறித்தது; இரக்கச் சுவை; உருகாரே (2); (6); அடியாரிருக்க ஐயங்கொள்வதழகிதே (9); இப்பதிகம் இச்சரிதப் பகுதிக்கு மிக்க அகச்சான்றாகிய ஆதரவு தருவது; "அதுவே யாமா றிதுவோ?" பெருங்கருணை யதுவாம் இது (3336) என்று ஆசிரியர் இதன் பொருளை விரித்துக் காட்டி யருளினர்; மேற்பாட்டிலு மிவ்வாறே; அது - கருணை; இது - காட்டிச் செய்த செயல்; கச்சூர் - ஊர்ப் பெயர்; ஆலக்கோயில் - கேயிலின் பெயர்; 3-ம் பாட்டுப் பார்க்க;- (2) கச்சேர் அரவு - கச்சாகிய அழகிய பாம்பு; கழலும் சிலம்பும் கலிக்க - "உருநாதச் சிலம்பணி சேவடி" (3335); உச்சம் போதால் - இறைவர் போந்து மனைதோறும் சோறிரந்த நேரம்; ஊரூர் - மனைதோறும்; உருகாரே - மனமுருகி வருந்தாரோ; இச்சை - இவ்வாறு செய்யலாகாத செயலை அருள் பற்றிச் செய்வதற்குரிய உமது இச்சாசத்தி; ஏழேழ் பிறப்பு - ஏழுலகத்தும் வரும் ஏழ்வகைப் பிறப்பு; எழுகின்ற எழுவகை என்றலுமாம்; எழுதல் - பிறத்தல். வடபால் - கோயில் ஊரின் வடக்கிருப்பது. "வடபாலை"- (3) சால - மிகுதியாக; அவை...துரந்தேன் - திருக்கோயில்களின் வழிபாட்டினால் வரும் பயன் கூறப்பட்டது; மால் - மயக்கம்; ஆணவ மறைப்பு; வினை - கன்மமலம்; வாசனா மலமும் மூலகன்மமும் உள்ளிட்டுக் கூறியவாறு; கோலக் கோயில்....ஆலக்கோயில் - இக்கோயிலின் அழகும் சிறப்பும் எடுத்துப் போற்றியனுபவித்தவாறு; கல்லால் - இத்தல மரம் ஆல்; அதனால் இப்பெயர் பெற்ற தென்பர். ஆல் நிழற்கீழ் அறங்களுரைத்த - தலம் பற்றிய இக்குறிப்புப்படக் கூறியருளியது;- (4) சடையும்...ஒளியானே - இறைவரைப் போற்றியது; கடையும்...கலந்தெங்கும் நகரச் சிறப்பினையும், புடையும்...சழனி - நாட்டு வளத்தினையும் போற்றியபடி; மேல் 5-9-10- பார்க்க. திருமாமகள் புல்கியடையும் - இவ்வளங்களை இந்நாட்டுக்கும் நகருக்குத் தருவதற்கன்றி, அவ்வாறு தந்து தழுவித் தான் பயன் பெறுதற்குத் திருமகள் வந்தடைகின்ற என்பதாம்; கழனி - வயல்; பழனம் - |