[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும் | 205 |
| வயல் சூழ்ந்த சோலை;- (5) விதி - வினையின் பயன் - விதி - நியதி; விதிப்பவர் பயனை ஊட்டுபவர் என்க; விரவார் - பகைவர்; எழுந்து - எழுந்தவுடன் முதற்கடமையாக; காலை - அதிகாலை; புலர்காலை; மாலை மதியே - இன்பப் பொருள் என்றது. "மாசில் வீணையும் மாலை மதியமும்" (தேவா); மலைமேல் மருந்தே - "வன்றொண்டர் பசி தீர்க்க மலையின்மேன் மருந்தானார்" (3330) என்று ஆசிரியர் இதனை எடுத்தாண்டு இதன் அருமைப் பாட்டினைக் காட்டி யருளுதல் காண்க; மறவேன் அடியேன் - அடியான் பொருட்டு ஆண்டவன் செய்த இவ்வருளிப்பாடு எந்நாளும் மறக்க முடியாதது என்றதாம்;- (6) பிறவாய்...மறவாய் - சிவபெருமானது இறைமைக் குணங்கள்; பேணாய் - விருப்பு வெறுப்பில்லாதவர்; மறவாய் உயிர்களுக்கு ஆவனவற்றையே எப்போதும் செய்தலை மறவாய்; ஒறுவாய்த்தலை - ஒறு - செத்த; வாய் - பிளந்த வாய்; அற - அறுதல்; நீங்குதல்; அறவே - நீங்குதலை; ஒழியாய் - நீங்கமாட்டாய்; இங்கு இறைவர் வந்து உடனாகி இருந்து காட்சி தந்தும் செய்துமிருந்தவர் காணாது நீங்கினாராதலின் அதுபற்றி உடனாயிருந்து நீங்கிவேறாக உள்ள நிலையினையும் நீங்கமாட்டாய் என்றபடி. அறவே - முற்றும் என்றலுமாம்; கண்ணாற் காணாவிடினும் வந்தநீ இறைவன் என்றுகாட்டி நிற்கின்றவதனால் முற்றும் நீங்காய் என்க; இக்கருத்தை "நீங்கினா பெரப்பொருளு நீங்காத நிலைமையினார்" (3334) என்று ஆசிரியர் முன் விரித்துக் காட்டியருளியமை காண்க;- (7) பொய்யே.... கொள்வானே - பாசாங்கு செய்து பொய்யாகப் புகழ்ந்தாலும் அப்புகழ்ச்சிக்குரிய அம்மட்டில் பயன் தருபவர்; இது நம்பிகள் தம்மைப் பற்றிக் கூறிய நிலைக்குறிப்பு; மெய்யே...நினைகண்டாய் - அவ்வாறிருப்பவும் மெய்யாக நினைக்கும் மெய்யடியார்களை நினைப்பினுள் நின்று அருளவேண்டுமென்பது மிகையன்றோ? என்றபடி; இஃது அடியார் பொருட்டுச் செய்துகொண்ட விண்ணப்பம்; அரசுகளது "பசுபதி"த் திருவிருத்தப் பதிகம் பார்க்க; நினை கண்டாய் - இறைவர் நினைப்பதுவே அருள் செய்தலாம் என்பது; செய்யாய் - செம்மையுடையவன்; வெளியாய் - ஞானவெளியில் இருப்பவன்;- (8) ஊனை...உணர்வில்லேன் - பசியே பெரிதாக எண்ணிச்சோற்றினை உண்டேன்; அதனைத் தந்தவனை இன்னவனென்று நினைவுகொள்ளும் உணர்வில்லாதவனானேன் என்ற சரிதக் குறிப்பும் காண்க; நாறு - நாற்றம்; மணம்; மானை - மான்விழியினை; மறைத்திட்ட - மேனியை மறையப் போர்த்த;- (9) காதல்...அடியார் - உண்மையடியா ரிலக்கணம்; சரிதஆதரவாகிய அகச்சான்று; ஆதல் - ஏவலாகும் தொழில்கள்; ஓதக்கண்டேன் - நீ சொல்லியசொற்களை; இன்மொழிகள் ஓதுதலை; (3331) (3333); இதனை "அருள்கூரச் செப்புவார்" (3330) என்றருளினர் ஆசிரியர். ஆதல் - விளைவு; மிகுதியும் ஆக்கமுடைய; எனை ஆள்வாய் - சரிதக் குறிப்பு;- (10) அன்ன மன்னும் - நீர்வளம் குறித்தது; உன்ன முன்னும் -நினைக்க முற்படும்; ஆரூரன்பேர் முடிவைத்த - ஆரூரர்என்ற பேரைத்தாய் தந்தையராற் சூட்டப்பெற்ற; பேர் முடிவைத்தல் - பெயர் சூட்டல்; நாமகரணம் செய்தல்; குலதெய்வமாகிய திருவாரூர்ப் பெருமானது பெயராதலின் அதனை முடியில் சூட்ட என்றார்; ஆரூரர் என்ற பெயர்க் காரணம் கூறியவாறு; "அடிப் பேராரூரன்" (தேவா); புலவன் செஞ்சொல் - தமிழ்நூல்; நண்பகற் பொழிதினைப் பற்றிப் பாலைத்திணையைக் கொண்டு தமிழ் வளம் பற்றி இறைவர் தன்மைகளை அவர் செய்த பேரருள் விளங்கப் பாடிய திறம்; வன்றொண்டன் - இப்பெயரையே குறிக்கொண்டு ஈண்டு "வன்றொண்டர் பசிதீர்க்க" (3330) என்று இவ்வருளின் பகுதியினைத் தொடக்கம் செய்து காட்டிய திறம் காண்க: மாலை வல்லார் அவர் எம்தலைமேற் பயில்வாரே - இது அன்பர்கள் பொருட்டுப் பயன் கூறியமொழி. |
|
|
|
|