206திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  தலவிசேடம் :- திருக்கச்சூர் ஆலக்கோயில் - தொண்டை நாட்டு 26வது பதி. ஊர்ப்பெயரும் கோயிற்பெயரும் சேர்ந்து வழங்கும் பெயர்; நன்னிலத்துப் பெருங்கோயில், வைகன் மாடக்கோயில் என்பன போல. விட்டுணு அமுதம் பெறும்பொருட்டுக் கச்சபமாய். (ஆமை) - இருந்து வழிபட்ட ஊராதலின் கச்சூர் எனப்படும்; கோயிலினுள் ஆல் - தலமரம் ஆதலின் ஆலக்கோயில் எனப்படும்; கச்சப ஊர் என்பது கச்சூர் என்று மருவி வழங்கியது போலும்; தீர்த்தம் - கூர்ம தீர்த்தம் (கூர்மம் - ஆமை) எனப்படுதலும் காண்க; இங்கு ஆரூர் நம்பிகள் பொருட்டு இறைவர் அந்தணராய் வந்து ஊரில் அந்தணர் மனைதோறும் நண்பகற்போதில் சென்று சோறிரந்து கொண்டுவந்து ஊட்டி மறைந்த வரலாறு மேலே புராணத்திலுரைக்கப்பட்டது; பதிகம் அப்போது அருளப்பட்டது; கோயிலுக்கு மேற்கே மலையடிவாரத்தில் விட்டுணுவுக்கு (அமுதம்) மருந்தளித்த மருந்தீசர் எழுந்தருளியுள்ளார்; நம்பிகளுக்கு விருந்திட்ட இலிங்க மூர்த்தி கோயிலினுள் தரிசிக்க உள்ளார்; மலைமேல் விருந்திட்ட நாதர் கோயில்; மலைமேல் மருந்தே என்று நம்பிகளால் இவரும் மருந்து என்று போற்றப்பட்டனர்; தொண்டைநாட்டிலுள்ள தியாகராசர் சந்நிதிகள் பலவற்றுள் இஃது ஒன்று; சுவாமி - விருந்திட்ட நாதர்; அம்மை - உமையம்மை; தியாகர் - அமுதத்தியாகர்; தீர்த்தம் - கூர்மதீர்த்தம்; மரம் - ஆல்; பதிகம் 1.
  இப்பதி சிங்கப்பெருமாள் கோயில் நிலையத்தினின்றும் வடமேற்கில் 1 நாழிகையளவில் அடையத்தக்கது.
3337
ந்தித் திறைவ ரருளாற்போய் மங்கை பாகர் மகிழ்ந்தவிடம்
முந்தித் தொண்ட ரெதிர்கொள்ளப் புக்கு முக்கட் பெருமானைச்
சிந்தித் திடவந் தருள்செய்கழல் பணிந்துசெஞ்சொற்றொடைபுனைந்தே
அந்திச் செக்கர்ப் பெருகொளியா ரமருங் காஞ்சி மருங்கணைந்தார்.
 

183

  (இ-ள்.) வந்தித்து...போய் - வணங்கி இறைவரது அருள்விடை பெற்று அங்கு நின்றும் போய், மங்கை பாகர் மகிழ்ந்த இடம் - உமைபாகராகிய சிவபெருமான் மகிழ்ந்து எழுந்தருளியிருக்கும் பிறபிதிகளை; முந்தி...புக்கு - அங்கங்கும்முன்பு தொண்டர்கள் வந்து எதிர்கொண்டு அழைத்துச் செல்லப்புகுந்து; முக்கட் பெருமானைச் சிந்தித்திட...புனைந்தே - நினைக்க முன்வந்து அருள்புரியும் முக்கட்பெருமானது திருவடிகளைப் பணிந்து செஞ்சொற்றொடை மாலைகளாகிய திருப்பதிகங்களைப் பாடியருளி; அந்தி....மருங்கணைந்தார் - மாலைச் செவ்வந்தி போலும் பெருகும் ஒளி பொருந்திய திருமேனியினையுடைய திருவேகம்பவாணர் விரும்பி எழுந்தருளியுள்ள திருக்காஞ்சிபுரத்தின் பக்கம் வந்தணைந்தனர்.
  (வி-ரை.) வந்தித்து - முன் கூறியபடி வணங்கி; வந்தித்தல் - என்பது நன்றி பாராட்டும் வகையில் செய்யும் வணக்கம் என்ற குறிப்புடன் நின்றது; அருளால் - அருள் விடைபெற்று; போய் - மேலே மேற்றிசை நோக்கிச் சென்று.
  மங்கை பாகர் மகிழ்ந்த இடம் - இறைவர் மகிழ்ந்து அருளிய பிற பதிகள். இவை திருக்கச்சூராலக் கோயிலுக்கும்திருக்காஞ்சீபுரத்துக்கும் இடையில்பாலாற்றின் கரையிலும் கரை அணிமையிலும் உள்ளன; இவை பாலாறும் சேயாறும் கூடுதுறையில் உள்ள திருமுக்கூடல், திருவில்வலம், திருமாகறல், திருக்குரங்கணின் முட்டம் முதலியன என்பது கருதப்படும்.