| சிந்தித்திட வந்து அருள்செய் பெருமானைக் கழல்பணிந்து - என்று கூட்டுக. |
| சிந்தித்திட வந்தருளும் கழல் - என்று வருதல் திருவடியின் செயலாகவைத்து உரைப்பினுமமையும்; சிந்தித்திட - நினைத்த அளவில்; திருவருளின் விரைவு குறித்தது; சிந்தித்தல் - ஒன்றே திருவருள் பெறுதற்கு மூலம் என்பதாம். சிந்தித்திடவே என்க; "ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன்றே - அடித்தாமரை சென்று சேர்வதற்கே" (கழுமல - மும்- கோவை 12.) |
| செஞ்சொற்றொடை - திருப்பதிகங்கள்; இவை கிடைத்தில. |
| அந்திச் செக்கர்ப் பெருகு ஒளியார் - அந்திச் செக்கர் வானம்போலும் திருமேனியின் பெருகும் ஒளி; பெருகும் - அந்திச் செக்கர் ஒளி காலம் செல்லச் செல்லச் சிறுகிக் கழிந்து இருள் பரவும்; இறைவர் திருமேனி செக்கர்அவ்வாறன்றி நினைப்பின் அளவுக்கேற்பப் பெருகும் என்பதாம். |
| 183 |
3338 | "அன்று வெண்ணெய் நல்லூரி லரியு மயனுந் தொடர்வரிய வென்றி மழவெள் விடையுயர்த்தார் வேத முதல்வ ராய்வந்து நின்று சபைமுன் வழக்குரைத்து நேரே தொடர்ந்தாட்கொண்டவர்தாம் இன்றிங்கெய்தப்பெற்றோ"மென்றெயில்சூழ்காஞ்சிநகர்வாழ்வார், | |
| 184 |
3339 | மல்கு மகிழ்ச்சி மிகப்பெருக, மருகு மணித்தோ ரணநாட்டி அல்கு தீப நிறைகுடங்க ளகிலின் றூபங் கொடியெடுத்துப் செல்வ மனைக ளலங்கரித்துத் தெற்றி யாடன் முழவதிரப் பல்குதொண்டருடன்கூடிப் பதியின்புறம்போயெதிர்கொண்டார். | |
| 185 |
| 3338. (இ-ள்.) வெளிப்படை. திருமாலும் பிரமதேவனும் தொடர்ந்து அறிதற்கரியவராய் நீண்டு நின்ற வெற்றியுடைய இளைய இடபத்தைக் கொடிமேல் உயர்த்திய இறைவர் முன்னாளில் அன்று திருவெண்ணெய் நல்லூரிலே வேதியர் தலைவராக வெளிவந்து நின்று சபையார் முன்பு வழக்குப் பேசி, நேரே முன்னைத் தொடர்புபடத் தடுத்து ஆட்கொள்ளப் பெற்றவராகிய நம்பிகள் தாமே இன்று இப்பதியினில் எழுந்தருளும் பெரும்பேறு பெற்றோம்" என்று உட்கொண்டு மதில் சூழ்ந்த காஞ்சிபுர நகரில் வாழ்வார்கள், |
| 184 |
| 3339. (இ-ள்.) வெளிப்படை. பொருந்திய மகிழ்ச்சி மேலும் மிகப்பெருக வீதிகளில் அழகிய தோரணங்களை நாட்டியும், பெருகும் தீபங்களும் நிறைகுடங்களையும் அகிலின் தூபங்களையும் கொடிகளையும் ஏந்தியும், செல்வமுடைய மனைகளை அலங்கரித்தும், தெற்றிகளில் ஆடல் முழவுகள் சத்திக்கப், பெருகியதொண்டர்களுடனே கூடி அப்பதியின் புறத்திலே போய் நம்பிகளை எதிர்கொண்டனர். |
| 185 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 3338. (வி-ரை.) இப்பாட்டினால் நம்பிகளின் நல்வரவு கேட்ட காஞ்சிபுர நகர மாந்தரின் மிக்க மன மகிழ்ச்சியும் அதன் காரணமும் கூறப்பட்டது. மேல் வரும் பாட்டினால் அம்மகிழ்ச்சியாகிய மனநிலை புறச் செயல்களாக உருப்பட்ட நிலை கூறப்பட்டது. |
| "அன்று....பெற்றோம்" என்று - இது காஞ்சி நகர வாணர்கள் மனத்துள் எண்ணி மகிழ்ந்த கருத்து. |
| அன்று - உலக மறியவந்த முன்னை ஒரு நாள்; உலகமறிசுட்டு; நாடிக்காணமாட்டாப் பொருள் நேரில் தாமே உலகர் யாவரும் காணும்படி வந்து; நம்பிகளது |