22திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

யன்றி, அவை போந்தவாறும், வகையும், பிறவும் அறியமுடியாதபடி உள்ளத்தெழும் பெருமித உணர்ச்சி. "அற்புத மறியேனே" (திருவா). மேற்பாட்டுப் பார்க்க.

25

3180
வ்விரவு புலர்காலை யாரூரில் வாழ்வார்கண்
"டெவ்வுலகில் விளைந்தனநென் மலையிவை"யென் றதிசயித்து
"நவ்விமதர்த் திருநோக்கி னங்கைபுகழ்ப் பரவையார்க்
கிவ்வுலகு வாழவரு நம்பியளித் தன"வென்பார்,

26

3181
நீக்கரிய நெற்குன்று தனைநோக்கி நெறிபலவும்
போக்கரிதா யிடக்கண்டு மீண்டுந்தம் மில்புகுவார்
"பாக்கியத்தின் றிருவடிவாம் பரவையார்க் கிந்நெல்லும்
போக்குமிட மரிதாகு"மெனப்பலவும் புகல்கின்றார்;

27

3182
ன்றொண்டர் தமக்களித்த நெற்கண்டு மகிழ்சிறப்பார்
"இன்றுங்கண் மனையெல்லைக் குட்படுநெற் குன்றெல்லாம்
பொன்றங்கு மாளிகையிற் புகப்பெய்து கொள்க"வென
வென்றிமுர சறைவித்தார் மிக்கபுகழ்ப் பரவையார்.

28

3180. (இ-ள்) அவ்விரவு புலர்காலை - பூதங்கள் அவ்வாறு ஆரூர் அடங்க நென்மலையாக்கிய அந்த இரவு விடியும் காலையில்; ஆரூரில்...அதிசயித்து - திருவாரூரில் வாழ்வார்கள் பார்த்து "இந்நெல் மலைகள் எவ்வுலகில் விளைந்தன?" என்று அதிசயப்பட்டு; நவ்வி...என்பார் - "மானின் கண்போன்ற மதர்த்த திருநோக்கினை உடைய நங்கையாராகிய புகழினை உடைய பரவையாருக்கு இவ்வுலகம் வாழும் பொருட்டு வந்தருளிய நம்பிகள் அளித்தன இவை" என்று பற்பலவும் சொல்வார்களாகி;

26

3181. (இ-ள்) நீக்கரிய...நோக்கி - விலக்குதற்கு அரிதாகிய நெற்குன்றினை நோக்கி; நெறிபலவும்...புகுவார் - வழிகள் பலவும் போதற்கு அரியன வாயிடலான் அதனைக் கண்டு மீளவும் தமது வீடுகளிற் புகுவார்களாய்; பாக்கியத்தின்....புகல்கின்றார் - "பாக்கியத்தின் திருவுருவேயாகிய பரவையாருக்கும் இந்த நெல்லினைக் கொண்டு சேர்க்கும் இடம் அரிதாகும்" என்று இவ்வாறு பலவும் சொல்வார்களாக;

27

3182. (இ-ள்) மிக்கபுகழ்ப் பரவையார் - மிகுந்த புகழினையுடைய பரவையார்; வன்றொண்டர்....சிறப்பார் - தமக்கு வன்றொண்டராகிய நம்பிகள் அளித்த நெல்லினைக் கண்டு மிக்க மகிழ்ச்சி பொருந்தியவராய்; "இன்று...அறைவித்தார் - "இன்று உங்கள் மனைகளின் எல்லைக்குட்படும் நெல் எல்லாம் அவ்வவரும் தத்தம் செல்வமிக்க மாளிகைகளினுட் புகும்படி எடுத்துப் பெய்து கொள்க" என்று வெற்றி முரசம் அறையும்படி செய்வித்தார்.

28

இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டுரைக்க நின்றன.
3180. (வி-ரை) அவ்விரவு - இறைவரது ஏவலினால் பூதங்கள் நெல்லினைக் குண்டையூரினின்றும் திருவாரூரின்கண் கொண்டுய்த்த அந்த இரவு என அகரம் முன்னறிசுட்டு. "அவ்விரவு" (3178). புலர்காலை - இரவு நீங்கி விடியும் நேரத்தில்.
எவ்வுலகின்...அதிசயித்து - இது திருவாரூர் வாழ்வார்கள் நெல்லினைக் கண்டபோது முதலில் எழுந்த அவர்களது மன நிகழ்ச்சி; கண்டு அதிசயித்து - கண்டதனால் அதிசயமடைந்து; "அதிசயம் கண்டாமே" (திருவா).