|
  |  | சூழுமணி மாளிகை பலவும் தொழுது வணங்கி - கச்சித் திருக்கோயிலினுள் புறச்சுற்றிலே திருக்கச்சி   மயானம் முதலாகிய பல திருமாளிகைகள் உள்ளனவாதலின் அவற்றைத் தனித்தனி வணங்கிக்கொண்டு திருக்கோயிலை   அவ்வாறு வலமாக வந்தருளினர் என்பதாம். | 
  |  | மணிப்பொற் கோயில் - திருவேகம்பர் திருமாளிகை. | 
  |  | வாழி - வாழ்வு தருவது என்ற பொருளில் நின்றது; அசையெனினுமாம். | 
|  | அணுக்க வன்றொண்டர் - முன்னைய நிலையிற் றிருக்கயிலையினும், இந்நிலையில் வழியடிமை   செய்யும் வேதிர் குலத்துட் டோன்றிய நிலையினும் அணுக்கன் றொழில் செய்யும் உரிமையுடையவர்   என்பதாம். | 
  |  | வந்தார் - பயனிலை முன்வந்தது விரைவு குறித்தது. | 
|  | 187 | 
  | 3342 |                       | கைகள் கூப்பி முன்னணைவார் கம்பை யாறு         பெருகிவர ஐயர் தமக்கு மிகவஞ்சி யாரத் தழுவிக் கொண்டிருந்த
 மையு லாவுங் கருநெடுங்கண் மலையா ளென்றும் வழிபடுபூஞ்
 செய்ய கமலச் சேவடிக்கீழ்த் திருந்து காத லுடன்வீழ்ந்தார்.
 |  | 
  |  | 188 | 
  |  | (இ-ள்.) கைகள்...அணைவார் - கைகளை சிரமேற் கூப்பிக் கொண்டு திருமுன்பு அணைவாராகிய   நம்பிகள்; கம்பையாறு....சேவடிக்கீழ் - கம்பை நதி பெருக்கெடுத்து வரக்கண்டு இறைவரது திருமேனிக்காக   மிகவும் பயந்து தமது திருஉடம்பு நிறையத் தழுவிக்கொண்டிருந்த மை பொருந்திய கரிய நீண்ட கண்களையுடைய   மலைமகளாகிய அம்மையார் நித்தமாக வழிபடுகின்ற செம்மையுடைய தாமரை போலும் சேவடிகளின்   கீழே; திருந்து....வீழ்ந்தார் - திருந்தும் பெருவிருப்புடனே வீழ்ந்தனர். | 
  |  | (வி-ரை.) முன் - திருமுன்பு; திருஏகம்பர் சந்நதியின் முன்பு. | 
  |  | அணைவார் வீழ்ந்தார் - என்று கூட்டி முடிக்க; அணைவார் - அணைவாராகிய நம்பிகள்;   வினைப்பெயர். | 
  |  | பெருகிவர ஐயர் தமக்கு மிக அஞ்சி - பெருகி வருதலால் இறைவர் திருமேனிக்கு வெள்ளத்தாற்   பழுது நேரும் என அஞ்சி; ஐயர் தமக்கு - ஐயரது திருமேனிக்காக. | 
  |  | ஆரத் தழுவிக்கொண்டிருந்த - ஆர - நிறைய; முழுதும். | 
  |  | தழுவிக்கொள்ளுதல் - வெள்ளத்தால் அலைக்கப்படாதபடி காக்கத் தாமே தழுவிக் காவலாக   மறைத்துக் கொள்ளுதல். | 
  |  | என்றும் வழிபாடு - சேவடி - உன் பூசை எப்போதும் நம்பால் முடிவதில்லை என்று பெருமான்   அருளியபடி நித்தமாக நிகழும் பூசை; இவ்வரலாற்றைத் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்துட்   (1134 - 1145) காண்க. | 
  |  | 188 | 
  | 3343 |                       | வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மி யெழுந்து         மெய்யன்பால் வாழ்ந்த சிந்தை யுடன்பாடி மாறா விருப்பிற் புறம்போந்து
 சூழ்ந்த தொண்ட ருடன்மருவு நாளிற் றொல்லைக் கச்சிநகர்த்
 தாழ்ந்த சடையா ராலயங்கள் பலவுஞ் சார்ந்து வணங்குவார்.
 |  | 
  |  | 189 | 
  | 3344 |                       | சீரார் காஞ்சி மன்னுதிருக் காமக்         கோட்டஞ் சென்றிறைஞ்சி, நீரார் சடையா ரமர்ந்தருளு நீடு திருமேற் றளிமேவி
 |  |