[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்211

 
ஆரா வன்பிற் பணிந்தேத்தி யளவி "னுந்தா வொண்சுட"ராம்
பாரார் பெருமைத் திருப்பதிகம் பாடி மகிழ்ந்து பரவினார்.
 

190

  3343. (இ-ள்.) வீழ்ந்து....புறம்போந்து - முன்கூறியவாறு நிலமுற வீழ்ந்து துதித்துப் பரவசப்பட்டு விம்மி மேலெழுந்து மெய்யன்பினாலே வாழ்வடைந்த மன நிறைவுடனே பாடியருளியபின் மாறுதல் இல்லாத விருப்பினுடனே புறத்திலே போந்தருள; சூழ்ந்த...நாளில் - தம்மைச் சூழ்ந்த திருத்தொண்டர்களுடனே கூடியிருக்கும் நாள்களிலே; தொல்லை... வணங்குவார் - பழைமையாகிய கச்சிமா நகரத்திலே தாழ்ந்த சடையினையுடைய இறைவனார் எழுந்தருளியுள்ள ஆலயங்கள் பலவற்றையும் சார்ந்து வணங்குவாராகி,
 

189

  3344. (இ-ள்.) சீரார்...இறைஞ்சி - சிறப்புப் பொருந்திய திருக்காஞ்சி புரத்தில் நிலைபெற்ற திருக்காமக் கோட்டத்தில் அணைந்து பணிந்து; நீரார்...மேவி - கங்கையைச் சூடிய சடையினையுடைய இறைவர் விரும்பி எழுந்தருளியிருக்கும் நீடிய கச்சித் திருமேற்றளியினை அடைந்து; ஆரா....பரவினார் - நிறைவுபடாது பெருகும் அன்பினாலே பணிந்து துதித்து அளவற்ற பெருமையுடைய "நுந்தா வொண்சுடரே!" என்று தொடங்குகின்ற உலக நிறைந்த பெருமையுடைய திருப்பதிகத்தைப் பாடி மகிழ்ந்து போற்றினார்.
 

190

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
  3343. (வி-ரை.) வீழ்ந்து போற்றிப் பரவசமாய் விம்மி எழுந்து - அம்மையார் "என்றும் வழிபடுஞ் சேவடி"கள் என்ற எண்ணம் கொண்டு அத்திருவடிக் கீழ் வீழ்ந்தபோது அந்த அருளிப் பாட்டினை எண்ணப் பரவசமாய்க் கிடந்து விம்மினார்; அதன்பின் எழுந்து பாடினார்.
  மாறாவிருப்பிற் புறம்போந்து - புறம் போகுதல் விருப்பம் நிறைந்த பின்னர் நிகழ்தல் இயல்பாம். ஆயின் இங்கு நம்பிகள் விருப்பம் மாறாதவாறே - நிறைந்த விருப்பில் நின்றவாறே - புறம் போந்தனர் என்பது.
  சூழ்ந்த தொண்டர் - நம்பிகளுடன் வந்தாரும், அங்கு வந்து சூழ்ந்தாரும்.
  தொல்லை - மிகப் பழமை; கச்சிமா நகரின் அழியாத தொன்மை.
  ஆலயங்கள் பலவும் - கச்சியில் உள்ள எண்ணிறந்த சிவாலயங்கள்.
 

189

  3344. (வி-ரை.) திருக்காமக் கோட்டஞ் சென்றிறைஞ்சி - "அறப்பெருஞ் செல்வக் காமக் கோட்ட மணைந்திறைஞ்சினார்" (2896) எனப் பிள்ளையார் வழிபட்டமை கூறியது காண்க. ஆண்டுரைத்தவை பார்க்க. சத்திபீடம். கச்சி எல்லையில் எல்லாக் கோயில்களுக்கும் இஃதொன்றே அம்மை ஆலயம். அம்மையாரது தவத்திற் குறிக்கொண்ட பொருளாய் இறைவர் இருத்தலில் இதுவும் "சடையா ராலயமா"யிற்று.
  திருமேற்றளி - திருஏகம்பத்தின் மேற்றிசையில் உள்ள தனிக்கோயில்; முன் உரைத்தவை பார்க்க.
  "நுந்தா ஒண்சுடர்" ஆம் திருப்பதிகம் - பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு. பதிகமே கெடாத ஒள்ளிய ஞானச் சுடராம் என்றதும் குறிப்பு.
  ஆரா அன்பு - குறையாத அன்பு; பாரார் பெருமை - உலகம் போற்றும் பெருமை.
  பணிந்தேத்தும் அளவில் - என்பதும் பாடம்.
 

190

  திருக்கச்சிமேற்றளி
  திருச்சிற்றம்பலம்

பண் - நட்டராகம்

 
நுந்தா வொண்சுடரே நுனையே நினைத்திருந்தேன்
வந்தாய் போயறியாய் மனமே புகுந்துநின்ற