| சிந்தா யெந்தைபிரான் றிருமேற் றளியுறையும் எந்தா யுன்னையல்லா லினியேத்த மாட்டேனே. | |
| (1) |
| பாரூர் பல்லவனூர் மதிற்காஞ்சி மாநகர்வாய்ச் சீரூ ரும்புறவிற் றிருமேற் றளிச்சிவனை ஆரூரன் னடியா னடித்தொண்ட னாரூரன் சொன்ன சீரூர் பாடல்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே. | |
| (10) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு:- நுந்தா வொண்சுடரே! எந்தாய்! ஏறே! ஐயா! மலையே! உன்னையல்லால் இனியேத்த மாட்டேனே. உனையே நினைந்திருந்தேன்; நினைதலும் இவ்வூனுடலம் புகுந்தாய்; போயறியாய்; நினையாதிருந்தாலும் வேறா வந்ததென்னுள்ளம் புகவல்ல மெய்ப்பொருள்; அடியார்க்குத் தொண்டுபட்டு இனிப் பிறவாமை கேட்டொழிந்தேன்; நுன் அடைந்தேன்; ஏற்றாலென்குறை? என்இடரைத் துறந்தொழிந்தேன்; நீ மாலாயின தீர்த்தருள் செய்யு மெய்ப்பொருள்; நின்னை நினைதலுமே நின்னினையப் பணித்தாய்; உன்னையல்லா லுடலில் உயிருள்ளளவும் நாவதனால் வேறுரையேன்=என்றிவ்வாறு இறைவனை நினையும்தன்மைகளும் அவர் அருளுந் தன்மைகளும் பயனும் தூக்கி உலகரை வழிப்படுத்தி உரைத்தது; இச்சிறப்புப் பற்றியே ஆசிரியர் இதனைப் பாரார் பெருமைத் திருப்பதிகம் என்றருளினார். |
| பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) நுந்துதல் - தூண்டுதல்; நுந்தா ஒண்சுடர் - தூண்டாவிளக்கு, சுயஞ்சோதி; "ஒண்சுடரே" (6) நுனையே நினைந்திருந்தேன் - வேறொன்றையும் எண்ணாது உன்னையே மனத்துட் கொண்டிருந்தேன்; "ஒன்றியிருந்து நினைமின்கள்" (தேவா); இது சிவயோக நிலை; வந்தாய் போயறியாய் - நிலையாகக் குடிகொண்டாய்; போயறிதல் - மறைதல்;- (2) ஆள்தான்....பட்டு - உனக்கு ஆளான காரணத்தால் உன் அடியார்க்குத் தொண்டு செய்யும் பெரும் பேறு பெற்றேன்; ஆண்டானுக்கு அடிமை செய்தலின் பயன் அடியார் பணி என்பதாம். "கும்பிட்ட பயன்" (2920); திருத்தொண்டத் தொகை பாடி அருளிய வரலாறு இங்கு நினைவு கூர்தற்பாலது; கேட்டேன்....ஒழிந்தேன் - இனிப்பிறவா வரம் ஒன்றையே கேட்டமைந்தேன்; வேறொரு வரமும் வேண்டுதலின்று; சேடு - ஆர் - சேடு - பெருமை; மாட்டே - மாடு - செல்வம்; எதுகை நோக்கி ஒற்றிரட்டித்தது;- (3) மோறாந்து - சோம்பியிருந்து; வேறா - தனியாக; அறியாவாறு; "நினையா வென்னெஞ்சை நினைப்பிப்பானை" (தேவா);- (4) உற்றார்...அடைந்தேன் - நம்பிகள் சரிதக் குறிப்பு; "ஆளாயினியல்லே னெனலாமே"; உலகியல் வாழ்வைத் துறந்து சிவனடிமையே செய்யப் புகுந்த நிலை; தவநெறி;- (5) மெய்ம்மால் - உடம்பு முதலியவற்றின் வைத்த மயக்கம்; ஆணவமல மறைப்பு; மெய்ப்பொருள் - மெய்யல்லாதவற்றை மெய்எனக் கொண்ட மாலினைத் தீர்த்து மெய் இது என்று உணர்த்தும் பொருள் என்றது; எம்மான்...ஒழிந்தார் - இது உலகரை நோக்கி உலகியல்பு கூறியது;- (6) நானேல்...புகுந்தாய் -1-ம் பாட்டுப் பார்க்க. ஊனாரிவ்வுடலம் புகுந்தாய் - ஊனுட் புகுந்தாய்; நினைவு - மாயையினாலான கரணம்; இவ்வாறு வருவது இறைவரது கருணைத்திறம் என்பது;- (7) செய் - வயல்; செய்யார் பைங்கமலம் - செய் - சிவந்த நிறமுடைய எனலுமாம்;- (8) இனி....உயிருள்ளளவும் - உலகரை வழிப்படுத்திக் காட்டிய அருளிப்பாடு;- (9) நிலையாய்....பணித்தாய் "பொதுநீக்கித் தனைநினைய வல்லார்க்கென்றும் பெருந்துணை" (தேவா); உலகப் பற்றுவிட்டுச் சிவனையே நினைவோர்க்கு அந்நினைவு மாறாதிருக்கும் சிவயோக |