214 | திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்] |
|
| ஐயர் கொண்டிங் காட்ட வாடி யாழ்கு ழிப்பட் டழுந்து வேனுக் குய்யு மாறொன் றருளிச் செய்யீ ரோண காந்தன் றளியு ளீரே. | | | (1) | | ஓவ ணமே லெருதொன் றேறு மோண காந்தன் றளியு ளார்தா மாவ ணஞ்செய் தாளுங் கொண்டு வரைது கிலொடு பட்டு வீக்கிக் கோவ ணமேற் கொண்ட வேடங் கோவை யாகவா ரூரன் சொன்ன பாவ ணத்தமிழ் பத்தும் வல்லார் பறையுந் தாஞ்செய்த பாவந் தானே. | | | (10) | | திருச்சிற்றம்பலம் | | பதிகக் குறிப்பு :- காணமோடுபொன்வேண்டி எடுத்து உரிமையுடன் பேணியமைந்த தோழமையாற் பெருகும் அடிமைத்திறம் பேசியது; ஆசிரியர் காட்டியருளியபடி. (3345) | | பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) நெய்யும்...செய்யலுற்றால் - நெய், பால், தயிர் திருமஞ்சனப் பொருள்கள்; பூசனை - திருமஞ்சனம் பூசைத்தொடக்கம். தொடக்கம் கூறவே ஏனை அலங்காரம், திருவமுது, புகை, ஒளி, அருச்சனை முதலியவை எல்லாங் கொள்ளப்படும்; நித்தல் பூசனை - என்றதனால் நம்பிகள் நாடோறும் உடையவர் பூசையாகிய பெருந் தவநெறி கைக்கொண்டொழுகிய நிலை புலப்படும். "சந்தி மூன்றிலுந் தாபர நிறுத்திச் சகளி செய்திறைஞ்சு" (திருநின்றியூர் 5); "காலையிலு மாலையிலுங் கடவுளடி பணிந்து கசிந்தமனத் தவர் பயிலும்" கலயநல்லூர் (8); "வேண்டிக் கொள்வேன் றவநெறியே" (துறையூர்); "ஆகமசீலர்க் கருணல்கும் பெம்மானே" (பரவையுண் மண்டளி) முதலியனவாய் வரும் நம்பிகள் திருவாக்குக்கள் காண்க; நித்தல் பூசனை செய்யலுற்றால் கையிலொன்றும் காணமில்லை - நம்பிகள் பொன் வேண்டுவதெல்லாம் ஆண்டவரது சிவபூசைக்கும் அடியார் பூசைக்குமேயாம் என்பதற்கு அகச்சான்று;- (2) இப்பாட்டிலும் மேல்வருவனவற்றிலும் தோழமை உரிமையினாலே நிந்தைத் துதியாக வரும் தன்மை கண்டுகொள்க; வாய் திறவாள் - பேசமாட்டாள்; சிறு துளியாக வருதலின்றி, வாய் திறந்து பெருவெள்ளமாக ஆரவாரித்து வரமாட்டாள் என்பது சிலேடை; வயிறுதாரி - வயிறு பெருத்தவர்; பேருண்டி உண்பவர்; குமரன் பிள்ளை - சிறுவர்; சிறுபிள்ளை; தேவியார் கோற்றட்டி ஆளார் - பணியாளரின் தராதரம் தெரிந்து ஊட்டி உதவமாட்டார். உங்களுக்காட் செய்ய மாட்டோம் - ஒரு வீட்டில் ஆளாக நன்கு பணி செய்வதென்றால், அது, மனைவியர் பிள்ளைகள் என்றவர்களின் நலம் பற்றி நடைபெறல் வேண்டும்; இங்கு உமது வீட்டில் இருமனைவியருள் ஒருவர் வாய் திறவார்; மற்றொருவர் கோற்றட்டி ஆளார்; பிள்ளைகளுள் ஒருவர் மூத்தவர் பெருத்த பேருண்டியாளர்; ஏனையவர் சிறுபிள்ளை; இத்தகைய குடும்பமாகிய உங்களுக்கு ஆளாகப் பணிசெய்ய மாட்டோம் என்பது. இவ்வாறே மேல் "மதியுடையவர் செய்கை செய்யீர்" "ஆபத் காலத் தடிகே ளும்மை ஒற்றி வைத்திங் குண்ண லாமோ?" (3); "இல்லை யென்னனீர் - உண்டுமென்னீர்"(4) "ஓடிப் போகீர் பற்றுந்தாரீர்" (5); "உலகுய்ய வைத்த - காமக்கோட்ட முண்டாக நீர்போய் ஊரிடும் பிச்சை கொள்வ தென்னே?" (6); "மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர்; ஏதும் வேண்டீர் ஏதுந் தாரீர்; ஏது மோதீர்; உம்மை யன்றே" (7); "வாழ் வதாரூர்; ஒற்றியூரே லும்ம தன்று....ஊருங்காடு; உடையும் தோலே" (9); "கோவணமேற் கொண்ட வேடங் கோவையாக" (10) என்பவற்றின் பொருள்களும் கண்டுகொள்க;- (3) பெற்றபோதும் பெறாத போழ்தும் - இன்பத்திலும் துன்பத்திலும்; பேணி - ஒன்று போலவே விரும்பி; மற்றோர் பற்றிலர் - |
|
|
|
|