[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்215

  உம்மையன்றி வேறொருவரையும் பற்றாகக் கொள்ளார்; மதியுடையவர் செய்கை செய்யீர் - இப்போது வேண்டியது தாராது நீர் வாளா இருப்பது மதியுடையவர் செய்கையன்று என்பது; சொல்லாமற் சொல்லியபடி; அற்ற - செல்வமற்ற; அலந்த - துன்பப்பட்ட; ஆபத்(துக்) காலத்து...உண்ணலாமோ - நீர் தாராவிடில் உம்மை ஒற்றிவைத்துப் பொருள் பெற்றுச் சீவிக்கலாமோ? ஒற்றி - கடன் பெறவைக்கும் ஈடு - பணயம்;- (5) பாணி - தாள ஒத்து;- (6) உலகுய்யவைத்த காமக்கோட்ட முண்டாக - காமக் கோட்டத்தினுள் அம்மையார் 32 அறங்களையும் செய்து உலகு புரக்கும் நிலை குறித்தது; காமக்கோட்டம் போற்றிய நிலை- 3344 பார்க்க; மார்பு நீங்கா - மேனியில் ஒரு கூறுகொண்ட; உண்டாக - உம்முடையதாயிருக்கவும்;சிறப்பு உம்மை தொக்கது;- (7) பொய்ம்மையாலே போது போக்கி - அழியுந் தன்மையுடைய மாயை காரியங்களைத் தந்து காலம் பார்த்திருந்து; புறத்துமில்லை அகத்துமில்லை - அகம்புற மென்னாதே நிற்கு நிலை - மெய்ம்மை சொல்லி - மெய்ப்பொருளை உபதேசித்து; ஏதும் வேண்டீர் - எம்மிடத்தில் எதனையும் விரும்புவதில்லை; உம்மையன்றே - பாராமுகமாய் வாளா இருப்பாரைமுகத்தில் இடித்துக் காட்டிக்கூறும் மொழி; "உம்மைத்தானே:" என்பது;- (8) வலையம் - உயிர்கொள்ளும் பாசம்; ஈவரன் - மரணத்தைக் கொடுக்கும் பொருட்டு; ஈதல் - செய்தல் என்னும் பொருளில் வந்தது; ஈர்வான் -என்பது ஈவான் என நின்ற தெனினுமாம். சிலையமைத்த - சிலை - கல்; சிலை அமைத்த - கல்போன்று இளகுதலில்லாத; சிலை - சிலையின்றன்மை குறித்தது. ஆகுபெயர்; கலையமைத்த - கலைகளில் விலக்குக என்று கூறப்பட்ட, வருடை - மரச்சரியம்; பொறாமை; உலையமைத்து - கொதிக்கும்படி வைத்துக்கொண்டு;- (9) வாரம் - அன்பு; ஒற்றியூர் - ஒற்றி - பணயம் வைத்த ஊர்; ஆரூர் - யாருடைய ஊர்; இவை சிலேடை. ஊரும் காடு - ஊர் ஊராதலின்றிக் காடாயிற்று; ஊர் - உறையும் இடம்;- (10) ஓவணம் - பேரழகு; ஆவணஞ்செய் தாளுங் கொண்டு - ஆவணம் - ஓலை; அடிமையோலை; தடுத்தாட்கொண்ட சரிதக் குறிப்பாகிய அகச்சான்று; கோவண மேற்கொண்ட - வேடம் - பலிக்குச் செல்லும் பிச்சை வேடம்; கோவையாக - அதனையே பொருளாகக்கொண்டு.
  தலவிசேடம் :- திருஓணகாந்தன்றளி - தொண்டை நாட்டு 3-வது பதி; ஓணன் காந்தன் என்னும் அசுரர்கள் பூசித்தமையால் இப்பெயர் பெற்றது; இரண்டு சந்நிதிகள் தனித்தனியாய்த் தனிப்பிரகாரத்துடன் ஒரே ஆலயத்துள் உள்ளன. "அருளிச்செய்யீர்; தளியுளீரே!" என்ற பன்மைகள் இக்குறிப்புடையனபோலும்; (கச்சி ஏனைய பதிகங்கள் பார்க்க); ஆளுடைய நம்பிகள் இங்குப் பதிகம் பாடிப் பொன் பெற்ற வரலாறு புராணத்துட் காண்க. சுவாமி - ஓணேசுவரர் - காந்தேசுவரர்; அம்மை - காமாட்சி யம்மை; பதிகம் 1; இத்தலத்துள் சலந்தரன் பூசித்த மூர்த்தி தென்புறம் தனியாலயத்தில் உள்ளார். நம்பிகள் பதிகம் பாடியபின் சந்நிதியின் முன்புறமுள்ள மாமரத்தினின்றும் பொன் உதிர்ந்ததாக ஐதிகம் கூறுவர்.
  இத்தலம் திருக்கச்சி யேகம்பத்துக்கு மேற்கில் சர்வ தீர்த்தத்திலிருந்து சிறிது வடமேற்காக ? நாழிகை யளவில் உள்ளது.
3346
ங்க ணமர்வா ரனேகதங்கா பதத்தை யெய்தி யுள்ளணைந்து
செங்கண்விடையார் தமைப்பணிந்து "தேனெய்புரிந்"தென்றெடுத்த தமிழ்
"தங்கு மிடமா" மெனப்பாடித் தாழ்ந்து பிறவுந் தானங்கள்
பொங்கு காத லுடன்போற்றிப் புரிந்தப் பதியிற் பொருந்துநாள்;
 

192