216திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

3347
பாட விசையும் பணியினாற் பாவை தழுவக் குழைகம்பர்
ஆடன் மருவுஞ் சேவடிகள் பரவிப் பிரியா தமர்கின்றார்
நீட மூதூர்ப் புறத்திறைவர் நிலவும் பதிக டொழவிருப்பால்
மாட நெருங்கு வன்பார்த்தான் பனங்காட் டூரில் வந்தடைந்தார்.
 

193

  3346. (இ-ள்.) அங்கண் அமர்வார் - அப்பதியில் விரும்பி எழுந்தருளி யிருப்பவராகிய நம்பிகள்; அனேகதங்காபத்தை...தாழ்ந்து - திருக்கச்சி அனேகதங் காபதத்தினைச் சேர்ந்து திருக்கோயிலினுள்ளே அணைந்து சிவந்த கண்ணையுடைய இடபத்தை உடையாராகிய இறைவரை வணங்கித் "தேனெய் புரிந்து" என்று தொடங்கிய திருப்பதிகத்தினை "இறைவர் தங்குமிடமா மிது" என்ற கருத்துப் போதப் பாடியருளி வணங்கி; பிறவும்...போற்றி - இறைவரது தானங்கள் பிறவற்றையும் மேன்மேல் அதிகரிக்கும் பெருவிருப்புடன் சென்று துதித்து; புரிந்து...பொருந்தும் நாள் - இடைவிடாத நினைவுடனே அந்தக் கச்சித் திருப்பதியிலே பொருந்த வீற்றிருக்கும் நாள்களில்.
 

192

  3347. (இ-ள்.) பாட இசையும் பணியினால் - பாடுதற்கு இசைகின்ற பணி செய்யப் பெற்றதனால்; பாவை தழுவ....அமர்கின்றார் - அம்மையார் தழுவக்குழைந்து காட்டிய திருவேகம்பரது அருட்கூத்தாடுந் திருவடிகளைத் துதித்துப் பிரியாது விரும்பி எழுந்தருளி யிருக்கின்ற நம்பிகள்; நீட...விருப்பால் - மிகப் பழமையாகிய அந்தக் கச்சிமூதூரின் புறத்திலே நிலவுகின்ற பதிகளைத் தொழும் விருப்பத்தினாலே சென்று; மாடம்...வந்தடைந்தார் - மாடங்கள் நெருங்கி விளங்கும் வன்பார்த்தான் பனங்காட்டூரிலே வந்தடைந்தருளினர்.
 

193

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  3346. (வி-ரை.) அங்கண் - கச்சிமா நகரத்திலே; அனேகதங்காபதம் - இது திருக்கச்சி அனேகதங் காபதம் என்ற தலம்; வடநாட்டில் உள்ள இப்பெயர் கொண்ட பதியுடன் மயங்கற்பாலதன்று; "கச்சி யனேகதங்காபதமே" என்ற பதிக மகுடம் பார்க்க.
  "தேனெய் புரிந்து" என்றெடுத்த தமிழ் - இப்பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு; எடுத்த - தொடங்கிய.
  "தங்குமிடமாம்" எனப் பாடி - இப்பதிகக்கருத்தும் குறிப்புமாம்; எம்பெருமானதிடம் - எரியாடியிடம் என்பன வாதியாகப் பதிகப் பாட்டுக்களில் வருவன காண்க; இறைவரது "இடம் திருக்கச்சி யனேகதங்காபதமே" என்பது.
  பிறவும்...போற்றி - இவை கச்சி யெல்லையில் உள்ளஅளவில்லாத தானங்கள். பதிகள்; தானங்கள் - கச்சிப் பதியில் உள்ள தனிப் பதிகளின் பெயர் வழக்குப் பார்க்க. காஞ்சித்தானம், இறவாத்தானம், முதலியவை காண்க; "இறைவர் தாமகிழ்ந் தருளிய பதிக ளெண்ணி றந்தவத் திருநக ரெல்லை" (1153) என்றது பார்க்க.
  அப்பதி - திருக்கச்சிப்பதி; பொருந்தும் - விரும்பி அமர்ந்த.
  பொருந்துநாள் - அமர்கின்றார் - வந்தடைந்தார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க.
 

192

  3347. (வி-ரை.) பாடவிசையும் பண்பினால் - பிரியா தமர்கின்றார் - என்று கூட்டுக. அங்குப் பிரியாதமர்கின்ற நிலை பாட்டுப்பாடப் பொருந்தும் தன்மை காரணமாம். பாடும் பண்பு பெறப்பட்டமையாலே அங்குநின்றும் பிரியாது தங்கியருளினார்.