[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்217

  என்க; ஏகம்பரைப் பாடுதலில் அத்துணை விருப்பமும் ஆர்வமும் கொண்டிருந் தனர் என்பதாம். "பாட இசையும்" - பாடப் பணித்து ஆட்கொண்ட திறம் காண்க (216). அமர்கின்றார் - அமர்கின்றாராகிய நம்பிகள்; வினைப்பெயர்; அமர்தல் - விரும்பி வீற்றிருத்தல்.
  பாவை தழுவக் குழைகம்பர் ஆடல் மருவும் சேவடிகள் -கம்பர் - திருவேகம்பர்; ஏகம்பரின் கருணையின் எளிமை குறித்தது; ஆடல் - உலகை ஆளும் ஐந்தொழில் அருட்கூத்து; 1140 - 1141 பார்க்க.
  பரவி - அரிய இப்பதிகங்கள் கிடைத்தில!
  நீட மூதூர் - மிக நீண்டு செல்லும் பழமையுடைய கச்சிமாநகர். "தொல்லைக் கச்சிநகர்" (3343); தனது சூக்கும ரூபம் பிரளயங்களினும் அழியாதிருக்கும் நிலை; "பல வூழிக ணின்று நினைக்குமிடம் வினை தீருமிடம்" (10) என்ற பதிகம் பார்க்க; (நம்பி - அனேகதங் காவதம்)
  புறத்திறைவர் நிலவும் பதிகள் - இவை காஞ்சி நகருக்கு அப்பாற்பட்ட பல பதிகள்; முன் "பிறவும் தானங்கள்" (3346) என்றவை அவ்வெல்லைக்குட்பட்டவை; "திருந்து காதநான் குட்பட வகுத்து" (1162) என்று இதன் எல்லை வகுத்தது காண்க.
  பாடலிசையும் - புனற்புறத்தினிலவும் - என்பனவும் பாடங்கள்.
 

193

  திருக்கச்சி அனேகதங் காவதம்
  திருச்சிற்றம்பலம்

பண் - இந்தளம்

 
தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு மான திடந்திகழைங்கணையக்
கோனை யெரித்தெரி யாடி யிடங்குல வான திடங்குறை யாமறையா
மானை யிடத்ததோர் கைய னிடம்மத மாறு படப்பொழி யும்மலைபோல்
யானை யுரித்த பிரான திடங்கலிக் கச்சி யனேகதங் காவதமே.
 

(1)

 
வீடு பெறப்பல வூழிக ணின்று நினைக்கு மிடம்வினை தீருமிடம்
பீடு பெறப்பெரி யோர திடங்கலிக் கச்சி யனேகதங் காபனிடம்
பாடு மிடத்தடி யான்புக ழூர னுரைத்தவிம் மாலைகள் பத்தும்வல்லார்
கூடு மிடஞ்சிவ லோக னிடங்கலிக் கச்சி யனேகதங் காவதமே.
 

(10)

 

திருச்சிற்றம்பலம்

  பதிகக் குறிப்பு:- அனேகதங் காவதம் இறைவர் தங்குமிடமாம். ஆசிரியர் (3346) காட்டி யருளியவாறு. தங்குமிடம் என்று பாட்டுத்தோறும் பலபடப் பாராட்டிய தன்மை கண்டுகொள்க; குறிப்பு: இப்பதிகம் மிக எளிய இனிய தாள வொத்துடன் சிறுவர் சிறுமியர் பாடி யாடி மகிழத்தக்க சிறந்த அமைப்புடன் விளங்குகின்றது.
  பதிகப் பாட்டுக் குறிப்பு:- (1) புரிந்து உழல் - எம்பெருமான் - என்று கூட்டுக; தேன் - நெய் - திருமஞ்சனப் பண்டங்கள்; இனம் பற்றி ஏனைய எல்லாங்கொள்க. புரிந்து - இடைவிடாது எண்ணி; உழல் - என்ற இலேசால் மிகவிருப்ப முடைய செயல் குறிக்கப்பட்டது; ஐங்கணை அக்கோன் - மன்மதன்; குலவான் - மேன்மையுடையவர்; மறையாம் மானை - மறைஒலி செய்யும் மான்; மறைகள் துதிக்கும் என்றலுமாம்; மானை...கையன் - மானேந்திய கையினை உடையவர்; ஆறுபட - ஆறுபோற் பெருக; மலைபோல் - மலையினைப்போற் பெரிய கலி - ஆரவாரம்