218 | திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்] |
| மிக்க;- (2) ஓரி - நரி; குடகத் தி(ல்)லை - மேலைச் சிதம்பரம் என்னும் பேரூர்; இத்தலம் கொங்கு நாட்டில் கோவன்புத்தூருக் கருகில் உள்ளது; 3242-3245 பாட்டுக்களும், ஆண்டுரைத்தவையும் பார்க்க;- (3) கொடிகள் - மல்லிகை முல்லை முதலிய பூங்கொடிகள் நெறிந்த சோலையகம்; கொடி - காக்கை என்று கொண்டு, "குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைகள் கூட்டிட்டால், அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின் றதுபோல்" (திருமந்திரம் - 2- 152) என்றபடி, காக்கையின் கூட்டில் இனம் பிரித்தறிய வராத பருவத்தே அக்காக்கைகளிடையே குயில் (குஞ்சு) கூவும் என்றுரைத்தலுமாம்; செடி கொள் - தீமைமிக்க; தீய; வினைப்பகை தீரும் என்றது பாச நீக்கமும், திருவாகும் என்றது சிவப்பேறும் குறித்தன; திருமார்பு அகலத்து - உமை அம்மை கூறுகொண்ட மார்புடைய; வரும் பாட்டுப் பார்க்க; அம்மையின் முலைச் சுவடணிந்த மார்புடைய என்றலும் ஆம்;- (4) கொங்கு - மணம்; சங்கு...கொண்டு - சங்கக் குழையணிந்த செவிபோன்ற சங்கங்களைக் கொண்டு; கொண்ட அருவி என்றது கொண்டருவி என நின்றது. அருவித் திரள்பாய வியர்த்து அழல் போலுடைத்து - அம் மழு - அழல்போல எரித்தலால் அருவிபோல வியர்வை பாய;- (5) பயில...வைத்தவிடம் பயிலப் புகுதல் - சிவன் பணி - சிவயோகம் - நெறி பயிலத் தொடங்குதல்: ஒருநெறி சித்தம் வைத்த - என்க; மனம் ஒன்றிய - வேறொன்றிலும் செல்லாத - நெறி; திருவான் - முத்தித் திருவின் தலைவர் - சிவபெருமான்; மனங்கொள வைத்தவிடம் - மனம் பதிந்து நிற்கும் பண்பு கொளச் செய்த;- (6) தண்டமுடை...துயர் தீர்க்கும் - இறப்பின் (மரணம்) துன்பம் போக்கும்; தண்டம் - தண்டு ஆயுதம்; தண்டனை என்றலுமாம்; "இவர் செய்திக்குத்தக்க செயலுறுத்துவீர் என்று, வெய்துற்றுரைக்க.....மறம் போற்றி (போற்றிப் பஃறொடை - 40 - 53); தமர் - இயமன் தூதர்; "கால பாசம் பிடித்தெழுதூதுவர்" (தேவா); அமரைச் செய்யும் வன்றுயர் - அமரிற் செய்வதுபோன்ற வலியதுன்பம். பிண்டமுடை...ஆக்கையை நீக்குமிடம் - ஆக்கை - உடல்; நீக்கும் - மேல் வாராமற் செய்யும் -பிறவியில் வாராமே தடுக்கும் - இடம் என்றபடி; அண்டமுடை - எல்லா அண்டங்களையும் உடைமையாக;- (7) கட்டு மயக்கம் - மலத்தினால் வரும் அறியாமை; "பொருளல் லவற்றைப் பொருளென் றுணரும், மருள்" (குறள்) வீட்டும் என்பது எதுகை நோக்கி விட்டும் என நின்றது; வீட்டும் - இருளைப் போக்கும்; குயிற்பேடை...மணம்புணரும் - நிலவளம் குறித்தது; வரும் பாட்டும் பார்க்க;- (8) புல்லி - பெயர்; எல்லா வுயிர்களுள்ளும் "தாவியவ னுடனிருந்தும்" (தேவா) என்றபடி தழுவியவன்; புல்லியிருப்பவர்; புல்லியிடமாதலின் நாம் தொழுது உய்வோ மென்னாது பகைத்தவர் என்க; வில்லி - வில்லை ஏந்தியவர்; கொல்லி - கொன்றவர்; (9) சங்கையர் - சிவனே பதி என்ற உறுதியறி வில்லாதவர்; சங்கை - ஐயப்பாடு;- (10) பலவூழிகள் நின்று - பலவூழிகளிலும் அழியாது நிலைபெற்று. | | தலவிசேடம்:- திருக்கச்சி அனேகதங் காவதம் - தொண்டை நாட்டு 4வது பதி; திருக்கச்சியிலுள்ள (அனேகதம் - யானை) விநாயகர் பூசித்த தலம் என்பது பொருள்: இங்குக் குபேரன் முதலியோரும் வழிபட்டுப் பேறு பெற்றனர்; "ஆனையுரித்த பிரான திடம்" (பதிகம்) என்றதற்கேற்ப "ஆனையுரித்தான் வயல்" என்று பெயர் வழங்கும் வயல்கள் கோயிலுக்கு மேற்கே உள்ளன; சுவாமி - அனேகதங்காபதேசுரர்; அம்மை - காமாட்சியம்மையார்; பதிகம் 1. | | இது திருக்கச்சி யேகம்பத்திற்குத் தென்மேற்காய்ப் புத்தேரித் தெருவுக்கு மேற்கில் வயல் வெளியில் உள்ளது; வடநாட்டு இப்பெயருள்ள திரு அனேகதங்கா |
|
|
|
|