| வதத்துடன் மயங்கா திருத்தற் பொருட்டு இது கச்சி யனேகதங்காவதம் என்று கச்சியுடன் சேர்த்துப் பெயர் வழங்கப்படும். |
3348 | செல்வ மல்கு திருப்பனங்காட் டூரிற் செம்பொற் செழுஞ்சுடரை அல்ல லறுக்கு மருமருந்தை வணங்கி யன்பு பொழிகண்ணீர் மல்க நின்று "விடையின்மேல் வருவா" ரெனும்வண்டமிழ்ப்பதிகம் நல்ல விசையி னுடன்பாடிப் போந்து புறம்பு நண்ணுவார், | |
| 194 |
3349 | மன்னு திருமாற் பேறணைந்து வணங்கிப் பரவித் திருவல்லந் தன்னுளெய்தி யிறைஞ்சிப்போய்ச் சாரு மேல்பாற் சடைக்கற்றைப் பின்னன் முடியா ரிடம்பலவும் பேணி வணங்கிப் பெருந்தொண்டர் சென்னி முகிறோய் தடங்குவட்டுத் திருக்கா ளத்தி மலைசேர்ந்தார். | |
| 195 |
| 3348. (இ-ள்.) செல்வ மல்கு...வணங்கி - செல்வம் நிறைந்த திருப்பனங்காட்டூரிலே எழுந்தருளிய செம்பொன் போன்ற ஒளியுடைய செழுஞ்சுடரைப், பிறவித் துன்பத்தினை அறுக்கும் அரிய மருந்துபோல்பவரைப் பணிந்து; அன்பு....நின்று - அன்பு மேலீட்டினாலே பொழியும் கண்ணீர் பெருக நின்று; விடையின் மேல்...பாடி - "விடையின்மேல் வருவானை" என்று தொடங்கும் வன்மையுடைய பதிகத்தினை நல்ல இசை பொருந்தப் பாடி; போந்து புறம்பு நண்ணுவார் - புறம்பு போந்து சேர்வாராகி, |
| 194 |
| 3349. (இ-ள்.) மன்னு...போய் - நிலைபெற்ற திருமாற் பேறு என்னும் பதியினை அணைந்து வணங்கிச் சென்று, திருவல்லத்தினைச் சேர்ந்து வணங்கிப் போய்; சாரும் மேல்பால்...வணங்கி - சார்கின்ற மேற்குப் பக்கத்தில் சடைக்கற்றை பின்னி விளங்கும் முடியினையுடைய இறைவர் எழுந்தருளிய இடங்கள் பலவற்றையும் விரும்பி வணங்கி; பெருந்தொண்டர்...சேர்ந்தார் - பெருந்தொண்டராகிய நம்பிகள் உச்சியில் மேகங்கள் தோய்கின்ற பெரிய முடிகளையுடைய திருக்காளத்தி மலையினைச் சேர்ந்தருளினர். |
| 195 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன |
| 3348. (வி-ரை.) செல்வம் - அருட் செல்வம்; திருப்பனங்காட்டூர் - திருவன்பார்த்தான் பனங்காட்டூர். |
| செம்பொற் செழுஞ்சுடர் - செம்பொன் போன்ற செழிய சுடர் போன்றவர். |
| அல்லல் - துன்பங்களுள் எல்லாம் மிக்க கொடுமையுடைய பிறவித் துன்பம்; மருந்து - மருந்து போன்றாரை மருந்தென்ற துபசாரம். |
| அன்பு பொழி - அன்பு காரணமாக வருகின்ற; "அன்பிற்கு முண்டோ வடைக்குந் தாழ்" (குறள்). |
| "விடையின்மேல் வருவான்" இது பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு. |
| வண் தமிழ்ப் பதிகம் - வண்மையாவது சிறந்த உறுதிப் பொருள் பயத்தல். சாராதார் சார்வென்னே - உணராதார் உணர்வென்னே - அறியாதார் அறிவென்னே - என்பன முதலிய உறுதிப் பொருள்களை உணர்த்துதல் காண்க. |
| நல்ல இசை - பதிகப் பண்ணாகிய இனிய சீகாமரப் பண். |
| செல்வச் செழுஞ்சுடர் - பிறவும் நண்ணுவார் - என்பனவும் பாடங்கள். |
| 194 |