| (இ-ள்.) தடுக்கலாகா....கண்ணப்பார் - தடுக்கமுடியாத பெரிய காதலிற் றலை சிறந்து நிற்கும் கண்ணப்ப நாயனாரது; இடுக்கண்....அணைந்து - துன்பத்தை நீக்கி ஆட்கொண்டருளும் சிவபெருமான் மகிழ்ந்து எழுந்தருளிய திருக்காளத்தி மலையினைச் சாரஅணைந்து; பணிந்து...ஏறி - அம்மலையினை நிலமுற வணங்கித் திருவருள் பெற்று மேல் ஏறி; அன்பு ஆறு....வணங்கினார் - அன்பு ஆறாகப் பெருகி மூழ்குவிக்க இறைவர் திருமுன்பு சென்று சேர்ந்து மலைமேல் மருந்து போன்ற இறைவரை வணங்கினார். |
| (வி-ரை.) தடுக்கலாகாப் பெருங்காதற் றலைநின்றருளும் - அணையை முறித்தோடும் பெருவெள்ளம் போல முழுதும் இறைவர்பாற் பெருங்காதல் மயமேயாகி, அதனை அளவுபடுத்தித் தடைசெய்து நிற்கும் உடலும் உட்கரண புறக்கரணங்களும் உலகச் சார்புகளும் முதலாகிய யாவும் வலியற் றொழிந்து நிற்கும் நிலையில் முதல்வராகிய; "சிறை பெறா நீர்போல்" (திருவா); "அளவிறந்த காதலினா, லுண்ணிறையுங் குணநான்கு மொருபுடை சாய்ந்தன" (291) "மனக்காத லளவின்றி வளர்ந்து பொங்க, நின்றநிறை நாண்முதலாங் குணங்களுட னீங்கவுயி ரொன்றுந் தாங்கி" (318) முதலிய மன நிலைகள் காண்க. |
| தலை நின்றருளும் - ஒப்பாரும் மிக்காரு மின்றிச் சிறந்து மேனின்று; "கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை" (திருவா). |
| இடுக்கண் களைந்து - இறைவரது திருக்கண்களில் உதிரம் வடியக்கண்ட புண்ணினைப் பற்றிய துன்பம்; 814; 818-822; 825 பார்க்க. "அளவிலாப் பரிவில் வந்த இடுக்கண்" (597); இடுக்கண்- "நிலைதளர்ந்தெ, னத்தனுக் கடுத்ததெ னத்தனுக் கடுத்ததென்னென் றன்பொடுங் கனற்றி, யித்தனை தரிக்கிலன்" (நக்கீரதேவர் - திருக்கண்ணப்ப தேவர் திருமறம்); இடுக்கண் களைந்து - "ஒல்லை நம்புண் ணொழிந்தது பாராய்" (கல்லாட தேவர் - திருக்கண்ணப்ப தேவர் திருமறம்) ஆட்கொண்டருளுதல் - "நல்லை நல்லை" எனப் பெறுதல். (மேற்படி திருமறம்); "நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்பவென், னன்புடைத் தோன்ற னில்லு கண்ணப்பவென், றின்னுரை யதனொடும்" (நக் - திருமறம்);; "என் வலத்தில் மாறிலாய் நிற்க" (829) என்றருளியதும் ஆம். |
| அடுக்கல் - மலை; சேர அணைந்து - அருகிற் சார்ந்து; பணிந்து -மலையினை அடிபணிந்து; ஆளுடைய பிள்ளையார் திருமலையினைக் கண்டு கேட்டறிந்த இடத்திலேயே "அவனிமேற் பணிந்தெழுந் தஞ்சலி மேற்கொண்டு" திருப்பதிகம் பாடியருளியதும், (2918), "மலையடிவாரஞ் சாரவந்து தாழ்ந்தார்" (2919) என்றதும், ஆளுடைய அரசுகள் "காளத்தி மொய்வரையின் றாழ்வரையிற், சென்னியுறப் பணிந்தெழுந்து" (1609) என்றதும் காண்க. |
| அன்பு ஆறு மடுப்ப - "அன்பெனு மாறு கரையது புரள" (திருவா. போற்றித் திருவகவல் - 81) அன்பு ஆறு - உருவகம்; கரை கடந்தோடுதலால் ஆறு எனப்பட்டது; மடுத்தல் - அமிழ்த்துதல்; "ஞான வாரி மடுத்து"(சி. சி. 8-16); செலுத்துதல் என்று கொண்டு ஆறு பெருகி ஈர்த்துச் செல்ல என்றலுமாம். |
| மலைமேல் மருந்து - "மலையின்மேல் மருந்தானார்" (3330) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க; அங்கண் மாமலை மேல் மருந்தை" (1613). |
| 196 |
3351 | வணங்கி யுள்ளங் களிகூர மகிழ்ந்து போற்றி மதுரவிசை யணங்கு "செண்டா" டெனும்பதிகம் பாடி யன்பாற் கண்ணப்பர் | |