224திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  இங்கே இருந்திறைஞ்சி - இங்குத் திருக்காளத்தியிலிருந்தவாறே வணங்கி; ஆளுடைய பிள்ளையாரும் இவ்வாறே வடநாட்டுத் தலங்களையும், திருக்கோகரணத்தையும் இங்கிருந்தே வணங்கிப் பாடி யருளியமை காண்க. 2924- 2925 பார்க்க. ஆளுடைய அரசுகளும் இங்கு வணங்கிய குறிப்பினாலே திருக்கயிலையினை நேரே கண்டு வணங்கக் காதலித்து வடநாட்டிற் சென்றருளியதும் நினைவுகூர்க. (1612)
  நண்ணினார்போல்....கருத்தில் - இத்துணை நெடுந்தூரத்தின் இடை பிரிந்திருப்பினும் மனக்கண்முன் தியானத்தில் நேரே கண்டவாறு உறுதிப்பட்ட எண்ணத்திற் கொண்டு; "பொருந்திய தேச கால இயல்பகல் பொருள் களெல்லாம், இருந்துணர் கின்ற ஞானம் யோகநற் காண்ட லாமே" (சித்தி. அளவை - 13) என்றபடி ஞானயோகக் காட்சியில், மானதமாக வன்றி, நேரே புலப்படக் கண்டு என்க.
  காதல் சிறத்தல் - மிக மகிழ்தல்.
  மலைமுதலாம் - தாமகிழ்ந்த - என்பனவும் பாடங்கள்.
 

198

  திருக்காளத்தி
  திருச்சிற்றம்பலம்

பண் - நட்டராகம்

 
செண்டா டும்விடையாய் சிவனேயென் செழுஞ்சுடரே
வண்டா ருங்குழலா ளுமைபாக மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்கும் கணநாதனெங் காளத்தியாய்
அண்டா வுன்னையல்லா லறிந்தேத்த மாட்டேனே.
 

(1)

 
காரா ரும்பொழில்சூழ் கணநாதனெங் காளத்தியுள்
ஆரா வின்னமுதை யணிநாவலா ரூரன்சொன்ன
சீரூர் செந்தமிழ்கள் செப்புவார்வினை யாயினபோய்ப்
பேரா விண்ணுலகம் பெறுவார்பிழைப் பொன்றிலரே.
 

(10)

 

திருச்சிற்றம்பலம்

  பதிகக் குறிப்பு :- காளத்திக் கணநாதரே! உம்மையல்லால் மற்றொருவரையும் அறிந்தேத்த மாட்டேன்!
  பதிகக் பாட்டுக் குறிப்பு:- (1) செண்டு ஆடும் - கையில் செண்டினையுடைய; "காளையாந் திருவடிவாற், செங்கையினிற் பொற்செண்டும்" (கழறிற். புரா - 112); செண்டினால் ஏவல் பெறும் (விடை) என்றலுமாம்; வண்டாருங் குழலாள் - இயற்கை மணமுடைய கூந்தலாதலின் சூடும் மலர்களானன்றி இயல்பாகவே வண்டுகள் நிறையும் என்க; "கொங்குதேர் வாழ்க்கை" என்ற இறைவரது பாட்டும், அதுபற்றிய திருவிளையாடற் சரித வரலாறும், அஃது இத்தல அம்மையின் கூந்தலின் இயற்கை மணத்தைப் பற்றி யெழுந்தமையும் ஈண்டு நினைவு கூர்தற்பாலன; கண்டார் காதலிக்கும் - "மேவினார் பிரிய மாட்டா விமலனார்" (818) என்று கண்ணப்ப நாயனார் கூறும் கருத்து; ஆண்டுரைத்தவை பார்க்க. மேவினார் பிரியாமைக்குக் காரணம் கண்டார் காதல் கொள்ளுதல்; கண்டார் - இரவது பரங்கருணைத் திறத்தினை உணர்ந்த பக்குவர்; இவரால் முன்பே காணப்பட்டவர் என்ற குறிப்புமாம். "இவர் காணா முன்னே அங்கணர் கருணை கூர்ந்த வருட்டிரு நோக்க மெய்த" (753) என்றும், அதன்பின் "ஏகநா யகரைக் கண்டார்" (754) என்றும் வந்த கருத்துக்கள் காண்க. இங்குக் கண்டார் என்பது கண்ணப்பர் என்ற குறிப்புடன் நிற்பதும் கண்டுகொள்க; "வந்தவர் குருதி கண்டார்" (814); "ஊனுக் கூனெனு முரைமுன் கண்டார்" (821);