| "நின்றசெங் குருதி கண்டார்" (823); "குருதிபாயக் கண்டனர்" (824); மருந்து கைகண்டேன்" (825) "காணும் நேர்பாடு"(826) என்பன முதலியவை காண்க. காணப்பட்ட "கணநாதன்" என்றது திருத்தாண்டகம். கணநாதன் - காளத்தி இறைவரது பெயர் கணநாதன் என்பது திருத்தாண்டகம். கணநாதனெங் காளத்தியாய் - "காளத்தி காணப்பட்ட கணநாதன்காண்" (காண்); இப்பெயர் இன்றும் இத்தலத்தில் வழக்கில் உள்ளது; - (2) இடர்த்துணை - இடர் நீக்கும் துணை; "நோய் மருந்து" என்றாற்போல; நான்கனுருபு தொக்கது;-(3) படை - படையின் தன்மை; பகலோன் - சூரியர்களுள் ஒருவன்; "சூரிய னார்தொண்டை வாயினிற் பற்களை, வாரி நெரித்தவா றுந்தீபற" (திருவா); இது தக்கயாகத்தில் சிவனேவலால் வீரபத்திரர் செய்த வீரங்களுள் ஒன்று; - (4) மறி - மான்; குறி - குறிக்கோள்; குரு - அறிவுச் சுடர் கொளுத்தி அஞ்ஞானத்தைப் போக்குபவன்; அறிவே - ஞானமே திருமேனியாக உடையவர்; -(5) நஞ்சேன் - நைந்தேன் என்பது எதுகை நோக்கி நின்றது; துஞ்சேன் - இறவியில்லேன்; நம்பிகள் திருக்கயிலைக்குச் சென்ற வரலாறு கருதுக; ஒருகாற் றிருக்காளத்தியுட் டொழுதே (னாதலின்) துஞ்சேன் எனக் காரணக் குறிப்பும் தந்து நின்றது;- (6) செய்யவன் - செம்மை செய்பவன்;- (7) காதன்மையால் - காதல் கொண்டு - அறியேன் - என்று கூட்டுக; காதன்மையால் அறியேனாயிடினும் குடியாக் கொண்ட என்று இறைவரது கருணைத்திறம் போற்றியவாறு; முடியால் முயங்கும் - முடிசாய்த்து அடி கூடுதல்; முயங்குதல் - பொருந்துதல்;- (10) பேராவிண்ணுலகம் - சிவனுலகம்; ஏனை விண்ணவருலகம் புக்கவர் பேர்தல் (பிறத்தல்) உடையவர்கள் என்பது குறித்தலின் பேரா என்பது பிறிதினியைபு நீக்கிய விசேடணம். |
| குறிப்பு :- இப்பதிகத்து உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே என்பன வாதியாக வரும் மகுடங்களில் எதிர்மறையாற் கூறியன உறுதி குறித்தன. |
| தலவிசேடம் :- திருக்காளத்தி - II - பக்கம் -1060 பார்க்க. தொண்டை நாட்டின் 19-வது பதி. |
| சீபர்ப்பதம் |
| திருச்சிற்றம்பலம் | பண் - நட்டபாடை |
| மானும்மரை யினமும்மயி லினமுங்கலந் தெங்குந் தாமேமிக மேய்ந்துதடஞ் சுனைநீர்களைப் பருகிப் பூமாமர முரிஞ்சிப்பொழி லூடேசென்று புக்குத் தேமாம்பொழி னீழற்றுயில் சீபர்ப்பத மலையே. | |
| (1) |
| நல்லாரவர் பலர்வாழ்தரு வயனாவல வூரன் செல்லலுற வரியசிவன் சீபர்ப்பத மலையை யல்லலவை தீரச்சொன்ன தமிழ்மாலைகள் வல்லார் ஒல்லைச்செல வுயர்வானக மாண்டங்கிருப் பாரே. | |
| (10) |
| திருச்சிற்றம்பலம் |
| பதிகக் குறிப்பு:- இயற்கை வளங்கள் பலவற்றாலும் நிறைந்து மனிதர் செல்லதற்கரியதாய்ச் சிவன் உறைகின்ற பதி சீபர்ப்பத மலையே. இப்பதிகத்துள் இங்கு வாழும் மான், யானை, கிளி, ஏனம் முதலிய பிராணிகளின் செயல்கள் பற்றியே பதியின் வளம் போற்றப்பட்டிருத்தல், ஓர் ஆண்டின் பெரும் பாகமும் இங்கு மனித சஞ்சாரமின்றி இப்பிராணிகளே வாழ்தற்கிடமாவது இது என்ற குறிப்புத் தருவதாம். தலவிசேடம் பார்க்க. |