[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும் | 227 |
| ழிந்தாற், றினைப்போ தளவு நில்லாது"; அறமுளதால் - அந்நாள் வருமுன் செய்து கோடற்குரிய சிவதருமங்கள் உள்ளன; அறிவானிலுமறிவான் - அறம் செய்ய அறிவோர்களுள்ளத்தினின்று அவ்விருப்பத்தினை அறிபவன்; "அறஞ் செய விரும்பு;" நல்நீரொடு....இடுவார் - அன்னதானம் செய்வோர்; நல் நறு நீரொடு - உண்பதற்கு நல்ல நறுநீர் தருதலின் இன்றியமையாமை கருதி வேறு பிரித்தும், முதலில் வைத்தும், சிறப்புக்காட்டும் ஒடு வுருபு தந்தும் ஓதினார்;- (3) ஒருக்காலர் - தேவச்சாதியர்களில் ஒரு வகையினர்; கொம்பு - ஊன்றுகோல்; இருக்கு - வேதப் பொதுமை குறித்தது; இருக்கால் - வேத மந்திரங்களுடன்; ஒருக்கால் - இருக்கால் சொல்லணி; பொற்பொடி - பொற்சுண்ணம்; பொன் கலந்த சுண்ணம் என்றலுமாம்;- (4) உழக்கே உண்டு - ஓருழக்கு அரிசி யளவு உணவு கொண்டு; உணவின் அளவு குறித்தது; "உண்பது நாழி"; ஏகாரம் உலோபத்தினால் உணவும் குறைத்துண்டு என்ற குறிப்புப்படவும் நின்றது; படைத்தீட்டி வைத்திழப்பார்கள் - படைத்தல் - தேடுதல்; வைத்தல் - சேமித்து வைத்தல்; இழப்பார் - கள்வர் அரசர் மரணம் முதலிய பல வகைகளால், தேடிய செல்வப்பயனை அனுபவியாமல் இழக்கும் உலோபியர்; வழக்கே எனில் - செல்வமுள்ளவர் அறமியற்றுதல் வேண்டுமென்பது அறநூல் விதித்த வழக்கே என்று சொன்னால்; பிழைக்கேம் - உயிர் வாழேம்; இறப்பேம்; மதி மாந்திய - மந்தமதியுடைய; சழக்கு - துன்பம்; கிழக்கே சலமிடுதல் - கிழக்கு நோக்கி நின்று உரிய மந்திரங்களுடன் சூரியனுக்கு அரக்கிய நீர் இறைத்தல்; மறைவழி ஒழுகுவோர்;- (5) நாளோடிய - ஆயுள் நாள் கண்டு உயிர்கொள்ள விரைந்து வருகின்ற; நமனார்தமர் - இயமன்றூதுவர்; அதுவே எனில் இதுவே - அது எனச் சேய்மையில் உள்ளது சொல்லும்போது இதுவே என அணிமைக்கண் வருவதாகும் என்பதாம். நம்பிகள் இப்பதிகத்தை இப்பதியினிற் செல்லாது இங்குத் திருக்காளத்தியினின்று கண்டவாறே அருளினர் என்ற வரலாற்றின் அகச்சான்று; கீளோடு அரவு அசைத்தான் - அரவைக் கோவணமாகக் கீளுடனே சேர்த்துப் பூண்டவர்;- (6) தவமாவது தம்மைப் பெறிலன்றே - "தன்னைப் பெறுவதன் மேற் றவமில்லை"; தம்மைப் பெறுவதாவது ஆன்ம தத்துவ இயல்பினையுள்ளபடி அறிந்து சாதனை வழியில் நிற்றல்; ஆன்மரூபம், ஆன்மசுத்தி, ஆன்மதரிசனம் என்ற மூன்று காரியங்கள். குளியீர்....குமரி - குருக்ஷேத்திரம், கோதாவரி, குமரி இவற்றில் மானசீகமாகக் கண்டு நீராடுங்கள்; தெளியீர் உளம் - உள்ளத்திற் றெளியுங்கள். கோதாவிரி, தெற்கும் குருக்கேத்திரம் சீபர்ப்பதம் வடக்கும் எல்லையாகக் கொண்டு; "நண்ணி னார்போ லுண்ணிறைந்து திடமாங் கருத்தில்" (3352);- (7) பண்ணின் தமிழ் - "பண்ணிடைத் தமிழொப்பாய்" (தேவா) என்றபடி தமிழுக்குச் சிறப்பாயுரியது பண்ணமைதி என்றதாம்; கண்ணின் - கண்களுக்கு உரிய; கிண் என்று - ஒலிக்குறிப்பு;- (8) இனமாய் நின்று - யானைகள் கூட்டமாய் நின்று ஒருமித்த கருத்துடன் தொழில் செய்யு நிலை; (3)ம் பாட்டும் பார்க்க;- (9) பொதி - உடலாகிய சுமை; அவம் - வீண்; அவமாவது - இறப்பது; மதிமாந்திய 4-வது பாட்டுப் பார்க்க; குழி - பாசத் தழுக்குக்குழி;- (10) இப்பாட்டில் தேவாரம் பாடி அருளிய மூவர் முதலிகள் பெயரும் வருதல் இதன் சிறப்பு; நாவின்....சம்பந்தன் - முதன்மை பற்றி இவ்விருவரையும் கூறி, அவர் முதலாக யாவர் - (யாவராயினும்). | | தலவிசேடம் :- திருக்கேதாரம் - முன் 2925-ல் உரைத்தவை பார்க்க. | | குறிப்பு:- இந்த இரண்டு பதிகங்களும் அங்குச் சென்று கண்டவாறே இங்கே மனத்தால் கண்டு அருளப்பட்டன என்பது இவற்றின் அகச்சான்றுகளினால் நன்கு |
|
|
|
|