|
  |  | கூடும் காலங்கள் - வழிபாட்டுக் குரிய பூசைக்காலங்கள். | 
  |  | காலங்களிலணைந்து கும்பிட்டு - பூசைக்காலங்களில் எல்லாம் திருக்கோயிலில் அணைந்து வழிபட்டு. | 
  |  | இனிது இருந்தார் - மன ஒருமைப்பாட்டினில் மகிழ்ந்து அமர்ந்தருளினர். | 
  |  | பரவசமாய் - என்பதும் பாடம். | 
  |  | 205 | 
  |  | I. திருவொற்றியூர் | 
  |  | திருச்சிற்றம்பலம் | பண் - குறிஞ்சி | 
  |  |                       | பாட்டும் பாடிப் பரவித் திரிவார், ஈட்டும் வினைக         டீர்ப்பார் கோயில், காட்டுங் கலமுந் திமிலுங் கரைக்கே, ஓட்டுந் திரைவா யொற்றி யூரே.
 |  | 
  |  | (1) | 
  |  |                       | ஒற்றி யூரு மரவும் பிறையும், பற்றி யூரும் பவளச்         சடையார் ஒற்றி யூர்மே லூர னுரைத்த, கற்றுப் பாடக் கழியும் வினையே.
 |  | 
  |  | (10) | 
  |  | திருச்சிற்றம்பலம் | 
  |  | பதிகக் குறிப்பு :- வினைகள் தீர்ப்பார் கோயில் திருவொற்றியூரே. பாடிப் பரவித்   திரிவார் ஈட்டும் வினைகள் தீர்ப்பார் (1); தன்னை முன்னம் நினைக்கத் தருவான் (4); வினையை   வீட்ட (7) என்பன நம்பிகளது முன்னை நிலைச் சரிதக் குறிப்பும், அதனைத் தொடர்ந்து இனிஇங்கு   நிகழவுள்ள நிகழ்ச்சிகளின் குறிப்பும் பட நிற்கின்றமை காண்க. | 
  |  | பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) பாட்டும் பாடிப் பரவித் திரிவார் - பாட்டும் -   சொலவல கீதம் பாடுதலன்றிப் பாட்டும் பாடி; பரவி - பாட்டினாலும் உரையினாலும் துதித்து;  திரிவார் - அதுவன்றி வேறு தொழில் செய்யாது அதுவே தொழிலாய்த் தலங்கள் தோறும்   திரிபவர்; இது நம்பிகள் சரிதக் குறிப்புப்பட நிற்றல் காண்க; ஈட்டும் வினைகள் -   முன் ஈட்டியவையும் இனி ஈட்டப்படுவனவும் ஆகிய வினைகள்; இதுவும் நம்பிகள் சரிதக் குறிப்புப்பட   நிற்றல் கண்டுகொள்க; கயிலையில் பெற்ற இறைவராணையின் வழிவந்த இப்பிறவியின் எஞ்சிய   பகுதி இங்கு அனுபவித்துத் தீரநின்றதும் காண்க. இக்கருத்தினை மேல் (3383-ல்) நம்பிகள் திருவாக்கில்   வைத்து ஆசிரியர் விரித்தலும் காண்க. காட்டும் கலமும் திமிலும் கரைக்கே ஓட்டும் திரை   - கலம் - மரக்கலம்; திமில் - சிறு படகு; திரை - இவற்றைச் கரையிற்   செலுத்தும் அலைகள்; காட்டும் - உலக அண்டம்; கோள வடிவினதாதலால் கடல் வளைவுக்குள்   நின்று மேலேறி வரவர முதலில் உச்சிமட்டும் தோன்றிப், பின்னர்ச் சிறிது சிறிதாக முழுமையும்   தோன்றும் நிலைகுறித்தது. "விடுங்கலங்க ணெடுங்கடலி னின்று தோன்றும்" (ஒற்றி - தாண் 4);  ஓட்டும் - செலுத்தும்; கரைக்கே திரை ஓட்டும் - பிறவிக்கடலுட்பட்டு அலையும்   உயிர்களைக் கரைசேர்த்தும் குறிப்பு; திரையின்மேல் வைத்துக் கூறப்பட்டது. "மனமெனுந் தோணிபற்றி....கடலோடும்போது   - உனையுனு முணர்வை நல்கா யொற்றியூருடைய கோவே" என்ற திருநேரிசை ஈண்டுக் கருதத்தக்கது;-   (2) பந்தும்....பாவை சிந்தை கவர்வார் - அகப்பொருட்டுறை; தாய்கூற்று; பந்தும்   கிளியும் பயிலுதல் - இளமங்கைப் பருவம் குறித்தது; "பூவை தந் தாள்பொன்னம் பந்து தந்தா   ளென்னைப் புல்லிக் கொண்டு, பாவைதந் தாள்பைங் கிளியளித் தாளென்றன் பைந்தொடியே" (திருக்கோவை   - 200); "கருந்தடங்கண் ணார்கழல்பந் தம்மானைப் பாட்டயரும்" (தேவா); "மாதராள், பொற்கூட்டிற்   பூவையை வாங்கியதனோடுஞ், சொற்கோட்டிக் கொண்டிருந்த வேல்வைக்கண்-" (ஞானவுலா); பாவை -   பாவைபோன்ற பெண்; பாவை சிந்தை கவர்வார் - எந்தம் |