236திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  னூடி விடும்" (குறள்). இப்பெயர் பெரும்பாலும் ஊர்பற்றியே வழங்கப்படும்; செங்குன்றூர்கிழார் - கோவூர்கிழார் - குண்டையூர்கிழார் முதலியவை காண்க; அவ்வூரில் முதன்மைபெற்று எல்லாராலும் விளக்கமாயறியப்படுதல் கருத்து. ஞாயிறு என்னுமூரின் முதன்மையடையோர் என்பதாம்.
  ஆதரவு தரு மகளாராகி - ஆதரவு - அன்பு - மேம்பாடு என்றலுமாம். தரும் - அவரால் ஆதரவு பெறும் மகளார் என்பதன்றி, அவருக்கு ஆதரவு - பெருமை - சிறப்பு - தரும் மகளாராயினார் என்பதாம்.
  பார் மேல் - கன்மபூமியாகிய நிலவுலகத்தில்; புவனியில்.
  அருளால் முன்னை அநிந்திதையார் - முன்னர்த் திருமலைச்சருக்கத்திற் போந்த முன்னை வரலாற்றின் றொடர்பு முற்றும் அறிவித்த கவிநயம் கண்டுகொள்க (33-37); இப்பாட்டால் ஊரும், மரபும், பெற்றோரும், முன்சரிதமும் கூறியவாறு.
 

207

3362
மலையான் மடந்தை மலர்ப்பாத மறவா வன்பின் வந்தநெறி
தலையா முணர்வு வந்தணையத் தாமே யறிந்த சங்கிலியார்
அலையார் வேற்கட் சிறுமகளி ராயத் தோடும் விளையாட்டு
நிலையா யினவப் பருவங்க டோறு நிகழ நிரம்புவார்,
 

208

3363
சீர்கொண் மரபில் வருஞ்செயலே யன்றித் தெய்வ நிகழ்தன்மை
பாரி லெவரு மதிசயிக்கும் பண்பில் வளரும் பைந்தொடியார்
வாரு மணிய வணியவாம் வளர்மென் முலைக ளிடைவருத்தச்
சாரும் பதத்திற் றந்தையார் தங்கண் மனைவி யார்க்குரைப்பார்.
 

209

3364
"வடிவுங் குணமு நம்முடைய மகட்கு மண்ணு ளோர்க்கிசையும்
படிவ மன்றி மேம்பட்ட பரிசாம் பான்மை யறிகிலோம்;
கடிசேர் மணமு மினிநிகழுங் கால" மென்னக் கற்புவளர்
கொடியே யனைய மனைவியா "ரேற்கு மாற்றாற் கொடு" மென்றார்.
 

210

  3362. (இ-ள்.) மலையான்....நெறி - மலையரசன் மகளாராகிய உமையம்மையாரது மலர் போன்ற பாதங்களை மறவாத அன்பு பூண்டுவந்த ஒழுக்கத்தின்; தலையாம்...அணைய - முன்னை யுணர்வு வந்து பொருந்த; தாமே அறிந்த சங்கிலியார் - அதனைத்தாமே இயல்பில் அறிந்தவாறே வந்தவதரித்துச் சங்கிலியார் என்னும் திருநாமம் பூண்ட அம்மையார்; அலையார்...நிகழ - அலைத்தற்றொழில் பொருந்திய வேல் போன்ற கண்களையுடைய சிறு மகளிர் கூட்டத்தோடும் விளையாட்டுக்களின் நிலைமைகள் அவ்வப் பருவங்கள் முறையே வந்து நிகழ; நிரம்புவார் - வயது நிரம்புவாராக,
 

208

  3363. (இ-ள்.) சீர்கொள்...அன்றி - (அவ்வாறு பருவ நிரம்புநாளில்) சிறப்புக்கொண்ட குல வொழுக்க நெறியில் வரும் செயல்களே யல்லாமல்; தெய்வ நிகழ் தன்மை - தெய்வத்தன்மை விளங்கும் பண்புகளும் (விளங்க); பாரில்....பைந்தொடியார் - உலகில் எல்லாரும் அதிசயப்படும் பண்பிலே வளர்ந்து வருகின்ற பைந்தொடியாராகிய சங்கிலியம்மையார்; வாரும்....பதத்தில் - கச்சுமணியும்படி சமீபித்த பருவமுடைய வளர்கின்ற தனங்கள் இடையினை அலைக்கும் படி சார்கின்ற பருவத்தில்; தந்தையார்....உரைப்பார் - அவரது தந்தையார் தமது மனைவியாருக்கு எடுத்துச் சொல்லுவாராய்,
 

209