| தெய்வ நிகழ் தன்மை - தெய்வத்தன்மை வெளிப்படுதல். உலகியலில் நீங்கி இறைவன் பற்றாகிய செயல்கள் விளங்குதல். |
| அதிசயிக்கும் - இப்பருவத்துக்கு மேற்பட்ட முதுக்குறைவும் இறைபாலன்பும் கண்டு உலகில் எவரும் பெருமிதப்பட்டு வியக்கத்தக்க. |
| வாரும் அணிய அணிய ஆம் - வார் - கச்சு; வாரும் - மேலாடையே யன்றிக் கச்சும் என்று உம்மை எதிரது தழுவிய எச்சவும்மை; வாரும் அணிய - மேலாடையும் கச்சும் அணியும்படி. |
| அணியஆம் - பருவ நெருங்கிய - சமீபித்த - நிலையினவாகிய; அணிய ஆம் - முலைகள் - என்று கூட்டுக; வளர் - பூரித்துப் பெருக்கும். |
| முலைகள் இடைவருத்தச் சாரும்பதம் - முலைகள் பெருந்து வளர்தலால் அப்பாரம் தாங்க மாட்டாது இடை துவளச் சாரும்; இடை - இடையை; இரண்டனுருபு தொக்கது. "துணைமுலைகள் கொண்டநுசுப் பொதுங்குபதம்" (1721) |
| உரைப்பார் - உரைப்பாராகி; உரைப்பார் - என்ன - என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க. |
| 209 |
| 3364. (வி-ரை.) வடிவும்...அறிகிலோம் - இது தந்தையார் தமது மனைவியாருக் குரைத்தது. |
| வடிவும் குணமும் - புறமும் அகமும் ஒன்று போலவே; வடிவம் - திருமேனிவனப்பின் சிறப்பு. குணம் - உட்பெருமை; குணம் - நற்குணம். |
| மண்ணுளோர் - மண்ணுலகத்தோராகிய ஏனைப் பெண்கள். |
| மேற்பட்ட பரிசாம் பான்மை - மானிடத்தன்மையின் மேம்பாடு; தெய்வப்பண்பு நிகழவுள்ள தன்மை;
Superhuman என்பர் நவீனர்; பரிசும் ஆம் - பரிசு - புறத்திற் காண உள்ளது. பான்மை - அதற்குக் காரணமாகிய உள்நிலை; முன் (3363ல்) தன்மை - பண்பு என்பனவும் இக்கருத்தன. |
| அறிகிலோம் - அதன் காரணம் அறியகில்லோம். |
| கடிசேர்...காலம் - மணம் செய்தற்குரிய காலம்; ஆதலின் மண்ணுளோரின் மேம்பட்ட பரிசாயினமையால் அதற்கேற்றபடி உள்ள மணமகனைத் தேடி மணஞ்செய்து கொடுத்தல் வேண்டும்; உனது கருத்து என்னை? என்பது குறிப்பெச்சத்தாற் கொள்க. இதையறிந்த மனைவியார் "ஏற்குமாற்றால் கொடு" என்றது காண்க. |
| ஏற்குமாறு - குலநலத்துக்கும் பண்புக்கும் குணநலத்துக்கும் ஏற்றபடி; கொடும் - மணஞ்செய்து கொடுங்கள். கடிசேர்காலம் - பன்னீராட்டைப் பிராயம். |
| 210 |
3365 | தாய ரோடு தந்தையார் பேசக் கேட்ட சங்கிலியார் "ஏயு மாற்ற மன்றிது; வெம் பெருமா னீசன் றிருவருளே மேய வொருவர்க் குரியதியான்; வேறென் விளையு?" மெனவெருவுற் றாய வுணர்வு மயங்கிமிக வயர்ந்தே யவனி மிசைவிழுந்தார். | |
| 211 |
| (இ-ள்.) தாயரோடு....சங்கிலியார் - தமது தாயாரும் தந்தையாரும் இவ்வாறு பேசுதலைக் கேட்ட சங்கிலியார்; ஏயும்....வினையும்? என - இது என்பாற் பொருந்தும் பேச்சன்று; எம்பெருமானது திருவருளே முற்றும் பொருந்திய ஒருவருக்கு நான் உரியது; இதனின் வேறாக இவர்கள் நினைப்பது என்னாய் வினையுமோ என்று; வெருவுற்று....விழுந்தார் - வெருக்கொண்டு ஆகிய உணர்வு மயங்கி மிகவும் மூர்ச்சித்து நிலத்தின்மேல் விழுந்தார். |