26திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

நிறைந்த திருவாரூரினைக் காவல் பூண்டு தனியரசாளுகின்ற புற்றிடங் கொண்ட பெருமானது திருவடிகளை வணங்கித் திருநாவலூரராகிய நம்பிகள் அருள்விடை பெற்றுக்கொண்டு; நம்பர்...அணைவார் - சிவபெருமானது பிற பதிகளிலும் சென்று உமைபங்கரைப் பணிந்து பாடும் விருப்பினாலே சென்றணைவாராகி;

32

3187. (இ-ள்) மாலும்...வணங்கி - விட்டுணுமூர்த்தியும் பிரமதேவனும் அறிதற்கரிய இறைவர் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள பதிகள் பலவற்றையும் வணங்கிச் சென்று; ஞாலம்...நண்ண - உலகிற் பரவிய புகழுடைய கோட்புலியாரது திருநாட்டியத்தான்குடியினைச் சென்று சேர; ஏலும்...கொடுபுக்கார் - பொருந்தும் வகையினால் பதியினை அலங்காரம் செய்து அவரும் வரவு எதிர்கொண்டு மகிழ்ச்சியோடும் வந்து பணிந்து, அழகிய மணிகளையுடைய தமது திருமாளிகையினிடத்து ஆசை மீக்கூரக் (நம்பிகளை உடன்) கொண்டு உட்புகுந்தனர்.

33

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.
3186. (வி-ரை) தேவரொதுங்க...மிடையும் - தேவர்கள் உட்புகும் காலம் பார்த்துத் திருநந்திதேவ ராணையின்படி புறவாயிலிற் காத்திருப்ப, அவர்களை விலக்கித் தொண்டர்கள் எக்காலமும் தடையின்றிப் பணி செய்ய உட்செல்ல உள்ள; இஃது எல்லாப் பகுதிகளுக்கும் பொதுவாயினும் திருவாரூருக்குரிய சிறப்புத் தன்மை. 137 முதலியவை பார்க்க.
திருவாரூர் காவல்கொண்டு தனியாளும் - "அயிரா வணமேறா தானே றேறி யமரர்நா டாளாதே யாரூ ராண்ட" (தேவா).
கடவுட் பெருமான் - தேவதேவர்; புற்றிடங்கொண்டார்; தியாகேசர் என்றலுமாம்.
வணங்கி அருள் பெற்று - பிறபதிகளுக்குச் செல்லும்போது விடைபெற்றுச் செல்லும் மரபு.
நம்பர்...விருப்பில் - கோட்புலியாரது வேண்டுதலுக்கிரங்கி அங்குச் செல்வாரேனும் அங்குமட்டுமன்றி அதனோடு இடையிற் காணும் பிறபதிகளிலும் வணங்கிச் செல்லும் மரபும் விருப்பமும் குறித்தது; சிவன் கோயில் வழிபாட்டின் ஆர்வமிகுதல் பக்குவமுடைய உயிர்களின்மாட்டு நிகழ்வது.
அணைவார் வணங்கி நண்ண - என மேல் வரும் பாட்டுடன் கூட்டி முடிக்க.

32

3187. (வி-ரை) பதிகள் பல - இவை திருவாரூரினின்றும் திருநாட்டியத் தான்குடிக்குச் செல்லும் வழியில் இடையிலும் அருகிலும் உள்ளன. இவை திருவிளமர், திருஏமப்பேறூர், மாவூர் முதலாயின என்பது கருதப்படும்.
ஞாலம் நிகழ் - உலகில் புகழ் பரவி நிகழும்; ஞால நிகழ் நாட்டியத்தான்குடி என்று கூட்டி உரைக்கவும் நின்றது.
ஏலும் வகையால் - நம்பியாரூரரது நல்வரவின் சிறப்பினுக்குத் தகுதியாகப் பொருந்தும் அளவினாலே; தமது என்றலுமாம்.
அவரும் - அந்தக் கோட்புலியாரும் என முன்னறி சுட்டு.

33

3188
தூய மணிப்பொற் றவிசிலெழுந் தருளி யிருக்கத் தூநீராற்
சேயமலர்ச்சேவடிவிளக்கித்தெளித்துக்கொண்டச்செழும்புனலான்
மேய சுடர்மா ளிகையெங்கும் விளங்க வீசி யுளங்களிப்ப
ஏய சிறப்பி லர்ச்சனைக ளெல்லா மியல்பின் முறைபுரிவார்,

34