244திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  அவர்....சென்றாள் - விடுத்தார் தம்மை விடுத்தானிடம் சென்று சேர்ந்து சொல்வதன்முன் அவன் அவருடனே இறந்து பட்டான். அவர்கள் அங்குச் சேர்வதில்லையாதலின் எய்துமுன் என்னாது எய்தாமுன் என்றார்.
  ஆங்கு - விடுத்தானிடம்; இவ்வாறன்றி எய்த உடனே இறந்தான் என விரைவுப் பொருளில் வந்தது; மருந்து தின்னாமுன் நோய் தீர்ந்தது என்புழிப்போல - என்பர் ஆறுமுகத்தம்பிரானார்.
  தீது அங்கு இழைத்தான் போல் - அங்கு - சங்கிலியார் திறத்து; மிக்க தீதுபட ஒரு செயல் இழைத்தாரே மரண தண்டனைக்குள்ளாகுவர்; இங்கு அவன் மரணத்திற் குள்ளாயினமையால் தீதிழைத்ததன் பயனாக இறந்தான் என்னும்படி தோன்றிற்று என்பார் போல் என்றார்; இழைத்தான் போல் - அவன் செயல் அங்குச் சாராமையானும், தீமை என்று அறியாமையானும் போல் என்றார்; அறியாது உண்ணினும் நஞ்சு கொன்றே விடுமாதலின் தீமை இழைத்ததே போலப் பலன் தந்தது என்க.
  செல்ல விடுத்தாருடன் சென்றான் - விடுத்தார் - விடுக்கப்பட்டார்; தன்னால் விடுக்கப்பட்ட அச்சிலருடன் தானும், இறந்தான்; சென்றான் - இங்கு இயமனூருக்குச் சென்றான் - இறந்தான் - என்ற பொருளில் வந்தது; மங்கல வழக்கு; எண்ணத்தகாததை எண்ணியதும், அதனை ஏவல் வழி உடன்பட்டுச் சொல்லியதும் ஒன்று போலவே குற்றங்களாம்; ஈண்டுச் சிவாபராதமும் கற்புநிலை பற்றிய அபராதமும் கூடி உயிர் நீக்கும் தண்டத்திற் குள்ளாக்கின; பேசத்தகா வார்த்தை, உய்ய வேண்டு நினைவுடையா ருரையார்" என மேற்கூறுதல் குறிக்க.
  மாதரார் - சங்கிலியம்மையார்.
  உடன் சென்றார் - என்பதும் பாடம்.
 

215

3370
"தைய லார்சங் கிலியார்தந் திறத்துப் பேசத் தகாவார்த்தை
உய்ய வேண்டு நினைவுடையா ருரையா" ரென்றங் குலகறியச்
செய்த விதிபோ லிதுநிகழச், சிறந்தார்க் குள்ள படிசெப்பி,
நையு முள்ளத் துடனஞ்சி, நங்கை செயலே யுடன்படுவார்.
 

216

3371
"அணங்கே யாகு மிவள்செய்கை யறிந்தோர் பேச வஞ்சுவரால்;
வணங்கு மீசர் திறமன்றி வார்த்தை யறியாள் மற்றொன்றுங்;
குணங்க ளிவையா; மினியிவடான் குறித்தபடியேயொற்றிநகர்ப்
பணங்கொ ளரவச் சடையார்தம் பாற்கொண் டணைவோ" மெனப்பகர்வார்,
 

217

3372
ண்ணார்மொழிச்சங் கிலியாரை நோக்கிப்பயந்தாரொடுங்கிளைஞர்
"தெண்ணீர் முடியார் திருவொற்றி யூரிற் சேர்ந்து செல்கதியுங்
கண்ணார் நுதலார் திருவருளா லாகக் கன்னி மாடத்துத்
தண்ணார் தடஞ்சூ ழந்நகரிற் றங்கிப் புரிவீர் தவ" மென்று.
 

218

3373
பெற்ற தாதை சுற்றத்தார் பிறைசேர் முடியார் விதியாலே
மற்றுச் செயலொன் றறியாது மங்கை யார்சங் கிலியார்தாஞ்
சொற்ற வண்ணஞ் செயத்துணிந்து, துதைந்த செல்வத் தொடும், புரங்கள்
செற்ற சிலையார் திருவொற்றி யூரிற் கொண்டு சென்றணைந்தார்.
 

219