246திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  அறியச் செய்த விதிபோல் இது நிகழ - இது நிகழ்ந்தது அவ்வவர் கன்மானுபவமேயன்றி உலகை அறிவுறுத்தற் பொருட்டன்று; ஆனால் அதனால் உலகறிவுறுத்தப்பட்டது; ஆதலின் அறியச் செய்த விதி போல நிகழ என்றார்.
  சிறந்தார் - குல மரபிற் சிறந்த பெருமக்களும் அறிவின் முதியோர்களும்; அந்நாளில் இவ்வாறு சிறந்தோர்களின் வழி உலகம் நடந்ததாதலின் அவர்க்குச் சொல்லின் அவரால் உலகம் வழிப்படும் என்பது கருதி அவர்க்குச் செப்பினார் என்க; அன்றியும் குலமரபிற் சிறந்தோர்க்கு அந்நாளில் இத்தகைய மணப்பேச்சு முதலிய மரபுச் செயல்களை முறைப்படுத்தத் தக்க சில உரிமைகளுமிருந்தன. உள்ளபடி - இதுகாறும் நிகழ்ந்தவற்றை எல்லாம் உள்ளவாறு; முன்னர் "மறைத்தொழுக" (3368) என்றும், "விளம்பத் தகாமையினால் ஏதமெய்தா வகை மொழிந்து" (3369) என்றும் கூறியபடிக்கன்றி உள்ளதனை உள்ளபடியே செப்பினார் என்க.
  நங்கை செயலே - முன்னர் நிகழ்ச்சிகளில் தம் எண்ணப்படி செய்தனர்; இங்கு அவ்வாறன்றி நங்கை செயலே உடன்பட்டனர்; ஏகாரம் பிரிநிலை; தேற்றமுமாம். நங்கை - பெண்ணிற் சிறந்தாரைக் கூறும் வழக்கு.
  உடன் படுவார் - முற்றெச்சம்; உடன்படுவார் - (3370) பகர்வார் (3371) என்று (3372) சென்றணைந்தார் (3373) என மேல்வரும் பாட்டுக்களுடன் முடிக்க.
  செய்த விதுபோலது - உள்ளத்தினராகி - என்பனவும் பாடங்கள்.
 

216

  3371. (வி-ரை.) அணங்கே - தெய்வமே; ஏகாரம் தேற்றம். மானுடமன்றி அணங்கே என்றலுமாம்; இப்பொருளில் ஏகாரம் பிரிநிலை.
  அறிந்தோர் இவள் செய்கை பேச அஞ்சுவர் - அறிந்தோர் - அவ்வாறுள்ள இவரது தெய்வத் தன்மையினை அறிந்தவர்கள்; பேச - பேசவும்; உம்மை தொக்கது; பேச அஞ்சுதலாவது - பேச ஒண்ணாப் பெருமை யாதலின் பேசினால் தவறு நேர்ந்து தீமைபயக்குமென்று கருதி அச்சங் கொள்ளுதல்.
  ஈசர் திறமன்றி மற்றொன்றும் வார்த்தை அறியாள் - என்க; "வண்டல் பயில்வனவெல்லாம், - அண்டர்பிரான் றிருவார்த்தை யணையவரு வனபயின்று" (1721).
  குணங்கள் இவை - அறிந்தோர் இவளைப்பற்றி பேச அஞ்சுவர்; இவள் பேசுவது ஈசர்திறம்; இவையே இவளது குணங்களாம்; ஆதலின் இவள் குறித்த படியே கொண்டணைவோம் என்று தம் துணிபுக்குக் காரணங் கண்டவாறு.
  குறித்தபடி - குறி வைத்துக் கூறியபடி; குறித்த திறம் (3367) முன் உரைத்தவாறு.
  என - என்று துணிந்து; இப்பாட்டிற் கூறியவை தாதையரும் கிளைஞரும் துணிபு கொள்வதற் காதரவாய் எழுந்த குறிப்புக்கள்.
  வணங்க - வணங்கி - என்பனவும் பாடங்கள்.
 

217

  3372. (வி-ரை.) பயந்தார் பெற்றோர். பயத்தல் - ஈனுதல்; மகவுபெறுதல்; பயந்தார் - அஞ்சினார் என்ற பொருளும் படநின்றது; "நையுமுள்ளத்துடனஞ்சி" (3370).
  செல்கதியும் திருவருளால் (அதுவே) ஆக - என்க.
  செல்கதியும் - பெறவேண்டிய உறுதிப்பொருளும்; வீடு பேறு; மக்கள் கருதியடையச் செல்லும் முடிந்த நிலையதுவே யாதலின் வீடுபேறே கதி எனப்பட்டது. "செல்கதி முன்னளிப்பவர்" (1608).
  கதியும் - மணமகனை யடையச் சாரும் நிலையே யன்றி, உயிர்க்கு உறுதியாகச் சாரும் நிலையும் என உம்மை இறந்தது தழுவிற்று. செல்கதியும் திருவருளாலாக