[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்251

  உய்த்துணர்ந்து கொள்க. செய்ய - செய்யும் பொருட்டு; காரணப்பொருளில் வந்த வினையெச்சம்.
  செய்யச் - சென்றிருந்து - என்று கூட்டுக.
  சேர்ந்திருந்து - என்பதும் பாடம்.
 

222

  3377. (வி-ரை.) பண்டு...பான்மை - திருமலைச் சருக்கத்துட்கூறிய வரலாறுகள் பார்க்க. "யாளுடை நாயகி, கொங்கு சேர்குழற் காமலர் கொய்திட" (33) என்றது காண்க.
  பான்மை...உணர்வு - சங்கிலியார், திரு அருளாலே முன்னையுணர்வுடன் வந்துதித்து வளர்ந்தனர் என்பது முன் (3362) உரைக்கப்பட்டது; அவ்வுணர்வின் றொடர்ச்சியினாலே மனம் அதனை உட்கொண்டு விருப்பமீதூர்ந்தது; தலை நிற்றல் - சிறத்தல்; முன்னிற்றல்.
  மலர்மென் கொடியனையார் - மலர்களே அவயவங்களாகப் பூத்த கொடி போன்றவர்; "திருவளர்தாமரை...தெய்வ, மருவளர் மாலையோர் வல்லியினொல்கி" (திருக்கோவை - 1) என்றது காண்க.
  வண்டு மருவும் - புதிதின் மலரும் பூக்களாதலின் வண்டுகள் சூழ்ந்திருந்தன என்பது; "வம்பலர் நறுந்தொடையல் வண்டொடு தொடுப்பார்" (1936); இவ்வாறு வண்டுகள் மொய்க்கப் பூமாலை தொடுத்தல் இன்றும் திருவாலவாயில் மீனாட்சியம்மையார் சந்நிதியில் திருப்பூமண்டபத்தில் நேரே காணத் தக்கது.
  மலர் மென்மாலை காலங்களுக்கேற்பச் சாத்த - வைகறை முதலிய பூசைக் காலங்களில் அவ்வக்காலத்துக் கேற்றபடி மலர்கள் சாத்தும் விதிபற்றிப் புட்பவிதி முதலியவற்றுட் காண்க. சிவாகமங்கள் படிக்க. "அமைத்துச் சாத்தும்காலை" (560); "ஆங்கப் பணிக ளானவற்றுக் கமைத்த காலங் களிலமைத்து" (1026) என்றவையும், ஆங்காங்கு உரைத்தவையுங் காண்க.
  அமைத்துச் - சாத்தி - வணங்கி - என்க.
  தலைசிறப்ப - என்பதும் பாடம்.
 

223

  3378. (வி-ரை.) அந்தி வண்ணத் தொருவர் - சிவபெருமான்; அருளால் வந்த - அருளினாலே இவ் உலகில் திருநாவலூரில் வந்த - அவதரித்த - என்பது; திருவொற்றியூருக்கு வந்த என்ற குறிப்புமாம்.
  காதல் மணம் - இயற்கை மணம்; தமிழ் அகப்பொருள் நூல்களுட் பேசப்படும் களவு - கற்பு என்பவற்றுள் களவியலிலுட் கொண்ட இயற்கைப் புணர்ச்சியின் பகுதி; இது மனிதர் முயற்சியின்றி விதிகூட்ட வருவது; முந்தை விதியால் என்பது காண்க. விதிமணம் தந்தை தாயர் சடங்குகளுடன் கொடுப்பக்கொள்வது.
  பருவம் - நிகழ வேண்டும் காலம்.
  வகுத்த - இறைவனாணையால் வகுத்த; முந்தை விதியால் - திருமலைச் சிறப்பிற் கூறிய விதி.
  வகுத்த தன்மை வழுவாத - நியதி பிறழாத.
 

224

3379
ண்டர் பெருமா னந்தணரா யாண்ட நம்பி யங்கணரைப்
பண்டை முறைமை யாற்பணிந்து பாடிப் பரவிப் புறம்போந்து
தொண்டு செய்வார் திருத்தொழில்கள் கண்டு தொழுது செல்கின்றார்
புண்ட ரீகத் தடநிகர்பூந் திருமண் டபத்தி னுட்புகுந்தார்.
 

225