|
| ஒருத்தியாம்; இவள் அவ்விருவருள்ளே மற்றையவள் போலும்" என்று மனமருட்சி யடைந்தனர். |
| 229 |
| இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 3381. (வி-ரை.) கோவா....அனையார் - சங்கிலியம்மையார்; கோவாமுத்து - முத்து இப்பிகள் - மூங்கில் முதலிய எந்தப் பிறப்பிடத்தினின்று பிறந்தாலும், பிறந்தபோது தொளையின்றி இயல்பாகிய ஒளிவீசி முழுமையாய் நிற்கும். அதன் பின்னரே தொளையிட்டுக் கோத்து மாலையாக்கி மக்கள் அணிகுவர்; கோவா (கோக்கப்படாத) என்றதனாலும் பிறரால் விரும்பி அணியப்படாத என்றவாறாம். |
| சுரும்பு ஏறுக் கொழுமென் முகை - வண்டுகள் மொய்த்து உண்ணாத கொழுவிய மெல்லிய அரும்பு. |
| கொழுமுகை - என்றதனால் அணிமையில் அலர்ந்து மணந்தரும் பருவம் குறித்தபடி; சுரும்பு ஏறா - என்றது பிறரால் மணநுகரப் படாமை குறித்தது; இவையிரண்டும் சங்கிலியாரது பெண்தண்மை நிறைந்த பருவமும் ஆயின், இன்னும் மணஞ் செய்யப்பெறாத கன்னியராம் நிலையும் குறித்தன; - இவ்வாறன்றி இவை, சங்கிலியாரின் தூய்மை குறித்தன என்பாருமுண்டு. |
| இவ்வொருபொருட்டு இரண்டு உவமைகள் கூறியது என்னையோ? எனிற் கூறுதும்:- |
| முத்து - "தொடுகடன் முத்தும்...எங்கும் - விரும்பினர்பாற் சென்று மெய்க்கணியாம்" (திருக்கோவை - 248) என்றபடி சென்று பிறர் மெய்க்கணி யாகாநிலை குறித்து நின்றது. |
| கொழுமுகை - தான் இருக்குமிடத்து வண்டு தேடிவந்து மணநுகர்ந்து அலர்த்தித் தேனுண்ணும் நிலை போல, இங்குப் பிறன் எவனும் மணந்த நிலையின்மை குறித்து நின்றது; எனவே அம்மையார் மனம் சென்று பிறர்க்குரிமை யாகாமையும், அம்மையார்பாற் பிறர் மனம் வந்து புகாமையும் ஆகிய நிலைகளுக்கு உவமையாயின; முத்து - தீட்டுதல் வேண்டாத இயல்பாகிய பிறப்பும் ஒளியும் குறித்தது; முகை - மணம் குறித்தது; மெய்யும் வினையும்பற்றி எழுந்த உவமைகள். |
| சுரும்பு ஏறாக் கொழுமென்முகை - ஈண்டு, முன்னர், ஒருவன் பரிசறியான் அம்மையாரது பெற்றோர்பால் மகட்பேசிய நிலையுளதே? எனின்; அஃது இருபாலினுமன்றி, ஒருபால் நிகழ்ந்த செயலாதலின் ஒன்றும் பயனிலதாய் வீணாயொழிந்தது என்க; கணக்கில் வாராதென்றொழிக; "எந்தையுமெம் மனையுமவர்க்கெனைக் கொடுக்க விசைந்தார்கள், அந்தமுறை யாலவர்க்கே யுரியதுநான்" (1297) என்ற திலகவதியம்மையார் வரலாற்றின் நுட்பத்தினை ஈண்டுவைத்து நோக்கி வேற்றுமை கண்டு கொள்க. பெற்றோர் பேசிய மணப்பேச்சுக் கேட்ட அளவிலே அம்மையார் அது தம்பாற் சாராது விலக்கித் தாம் அருள் செய்தார் ஒருவருக்கு முன்னரே உரிமைப்பட்டவராய் நின்ற நிலையை உணர்த்தி விட்டமையும் காண்க. அதன் பின்னர்ப் பரிசறியான் மகட்பேசவிட்ட வார்த்தை பெற்றவர்கள்பாலன்றி அம்மையார்பாற் சாராமையானும், அது கேட்ட பெற்றோர் மனத்தின்பாலும்அது உட்புகாமையானும் அஃது ஈண்டைக்கு எண்ணவரும் பொருளன்றென்று விடுக்க; "தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபாற், புகுமணக் காதலினால்...அருளாலிவ் வியனுலக, நகும்வழக் கேநன்மை யாப்புணர்ந்தான்" (திருத்தொண்டர் திருவந்தாதி - 69) - என்றது நம்பியாண்டார் நம்பிகள் திருவாக்கு; ஈண்டு, "மகட்பேசினோன் வீயவே நூல்போன" என்றது நூலிழந்தநிலை குறிக்கு மென்று |