260திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  முறையே தமது ஆருயிர்த் தோழராகிய சிவன் பாற் பெறுவேன் என்று போனார் என்ற குறிப்புப்பட நிற்றலும் காண்க. மேல் "நண்பா னினைந்து" (3388) என்பதும் கருதுக.
 

230

3385
லர்மே லயனு நெடுமாலும் வானு நிலனுங் கிளைத்தறியா
நிலவு மலருந் திருமுடியு நீடுங் கழலு முடையாரை
உலக மெல்லாந் தாமுடையா ராயு மொற்றி யூரமர்ந்த
இலகு சோதிப் பரம்பொருளை யிறைஞ்சி முன்னின் றேத்துவார்,
 

231

3386
"மங்கை யொருபான் மகிழ்ந்ததுவு மன்றி மணிநீண் முடியின்கட்
கங்கை தன்னைக் காத்தருளுங் காத லுடையீ! ரடியேனுக்
கிங்கு நுமக்குத் திருமாலை தொடுத்தென் னுள்ளத் தொடைவிழ்த்த
திங்கள் வதனச் சங்கிலியைத் தந்தென் வருத்தந் தீரு"மென,
 

232

3387
ண்ண லார்முன் பலவுமவ ரறிய வுணர்த்திப் புறம்பணைந்தே,
"எண்ண மெல்லா முமக்கடிமை யாமா றெண்ணு மென்னெஞ்சிற்
றிண்ண மெல்லாமுடைவித்தாள்; செய்வ தொன்று மறியேனியான்
தண்ணிலாமின் னொளிர்பவளச்சடையீ! ரருளு"மெனத்தளர்வார்,
 

233

3388
திவாண்முடியார்மகிழ்கோயிற் புறத்தோர் மருங்கு வந்திருப்பக்,
கதிரோன் மேலைக் கடல்காண மாலைக் கடலைக் கண்டயர்வார்,
முதிரா முலையார் தம்மைமணம் புணர்க்க வேண்டி முளரிவளை
நிதியா னண்பர் தமக்கருளு நண்பா னினைந்து நினைந்தழிய,
 

234

3389
ம்ப ருய்ய வுலகுய்ய வோல வேலை விட முண்ட
தம்பி ரானார் வன்றொண்டர் தம்பா லெய்திச் "சங்கிலியை
இம்ப ருலகி லியாவர்க்கு மெய்த வொண்ணா விருந்தவத்துக்
கொம்பையுனக்குத்தருகின்றோங்; கொண்டகவலையொழி"கென்ன,
 

235

3390
"அன்று வெண்ணெய் நல்லூரில் வலிய வாண்டு கொண்டருளி
ஒன்று மறியா நாயேனுக் குறுதி யளித்தீ ருயிர்காக்க,
இன்று மிவளை மணம்புணர்க்க வேன்று நின்றீ!" ரெனப்போற்றி
மன்றன்மலர்ச்சேவடியிணைக்கீழ்வணங்கிமகிழ்ந்தார்வன்றொண்டர்.
 

236

  3385. (இ-ள்.) மலர்மேல்...உடையாரை - தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமதேவனும் நெடிய விட்டுணுவும் முறையே ஆகாயத்தினும் நிலத்தின் கீழும் கிளைத்து அறியமாட்டாத, பிறைவளர்கின்ற திருமுடியினையும் நீடிய கழலினையும் உடைய இறைவரை; உலகமெல்லாம்......ஏத்துவார் - உலகங்களை யெல்லாம் தாம் உடையவராயிருந்தும் ஒற்றிஊரில் விரும்பி எழுந்தருளிய விளங்குகின்ற ஒளிப்பிழம்பாகிய பரம்பொருளை வணங்கித் திருமுன்பு நின்று துதிப்பாராகி,
 

231

  3386. (இ-ள்.) மங்கை...உடையீர்! - மலை மங்கையாராகிய உமையம்மை யாரை ஒரு பாகத்தில் மகிழ்ந்து வைத்ததுமல்லாமல் அழகிய நீண்ட திருமுடியினிடத்தே கங்கை யம்மையாரையும் மறைத்து வைத்தருளும் பெரு விருப்ப முடையீரே!; இங்கு....சங்கிலியை - இங்கு உமக்குத் திருமாலையினைத் தொடுத்துக் கட்டியும்