[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்261

  எனது கட்டுடனின்ற உள்ளமாகிய தொடையினை அவிழ்த்தும் செயல்புரிந்த சந்திரன் போன்ற முகமுடைய சங்கிலியாரை; அடியேனுக்கு - அடியேனாகிய எனக்கு; தந்து...என - தந்தருளி எனது வருத்தத்தினைத் தீரும் என்று கூறி,
 

232

  3387. (இ-ள்.) அண்ணலார்முன்....புறத்தணைந்தே - இவ்வாறு இறைவரது திருமுன் பலவற்றையும் அவர் அறியும்படி உணரச் செய்து புறத்திற் போந்து; எண்ணமெல்லாம்....அருளும் எனத்தளர்வார் - நான் எண்ணுகின்ற எண்ணங்கள் எல்லாம் உமக்கு அடிமையே யாகும் நிலைகளையே எண்ணுகின்ற எனது நெஞ்சினது உறுதிப்பாடாகிய வலிமை எல்லாமும் உடையும்படி செய்தனள்; மேற் செய்யக்கடவது ஒன்றினையும் யான் அறியேன்; குளிர்ந்த பிறைச் சந்திரன் விளங்குகின்ற பவளம் போன்ற சடையினை உடையவரே! அருள் செய்யும் என்று எண்ணித் தளர்வாராய்,
 

233

  3388. (இ-ள்.) மதிவாள் முடியார்...இருப்ப - சந்திரனது ஒளி வீசும் முடியினையுடைய இறைவர் மகிழும் திருக்கோயிலின் புறத்தே ஒருபக்கத்தில் (நம்பிகள்) தங்கியிருக்க; கதிரோன்....அயர்வார் - சூரியன் மேல் கடலைச்சேரும் காலமாகிய அப்போது மாலையாகிய கடலினைத் தாம் கண்டுஅயர்வாராய்; முதிரா....வேண்டி - முதிராத இளமுலையவராகிய சங்கிலியாரை மணம் புணர்தலை விரும்பி; முளரி....நினைந்துஅழிய - பதுமநிதியும் சங்கநிதியும் உடைய குபேரனது நண்பராகிய சிவபெருமான் தமக்கு அருள்புரியும் தோழமையாகிய உரிமையினாலே நினைந்து நினைந்து மனமழிய,
 

234

  3389. (இ-ள்.) உம்பர்...எய்தி - தேவர்கள் உய்யவும் உலகம் உய்யவும் ஒலிபொருந்திய கடலினின்றும் எழுந்த விடத்தை உண்டருளிய தமது பெருமானார் (தாமே ஆட்கொண்டருளிய) வன்றொண்டரிடத்தில் எழுந்தருளி; இம்பர்...ஒண்ணா - இவ்வுலகில் எத்தன்மையாருக்கும் அடைய முடியாத; இருந்தவத்துக் கொம்பைச் சங்கிலியை - பெரியதவமுடைய கொம்பு போன்ற சங்கிலியை; உனக்கு...ஒழிக என்ன - உனக்குத் தருகின்றோம்; நீ மனத்துக்கொண்ட கவலையினை ஒழிவாயாக; என்று கூறியருள,
 

235

  3390. (இ-ள்.) அன்று....உறுதியளித்தீர் - முன்னைநாளில் அன்று திருவெண்ணெய் நல்லூரிலே நீரேவந்து வலிய ஆட்கொண்டருளி ஒன்றும் அறியாத நாயினேனுக்கும் உறுதிதந்தருளினீர்; உயிர்காக்க - எனது உயிரினைப் போகாமே காக்கும் பொருட்டு; இன்றும்...நின்றீர் - (அதுபோலவே) இன்றும் இவளை எனக்கு மணம் புணரச் செய்ய ஏற்றுக்கொண்டீர்; எனப் போற்றி - என்று துதித்து; மன்றல்...வன்றொண்டர் - (அவரது) மணங்கமழும் தாமரை மலர்போன்றசேவடிக் கீழே வீழ்ந்து வணங்கி மகிழ்ந்தனர் வன்றொண்டர்.
 

236

  இந்த ஆறுபாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  3385. (வி-ரை.) அயனும் மாலும் - முறையே - வானும் நிலனும் நினைத்து அறியா முடியும் கழலும் என்று நிரனிறையாகக் கொள்க; கழல் - காலணி மணிவடம்; அஃதணியும் திருவடிக்காகி வந்தது.
  உலகமெல்லாம் - உடையாராயும் - ஒற்றிஊர் அமர்ந்த - ஒற்றிஊர் - ஒற்றி வைக்கப்பட்ட ஊர் என்ற சொற்பொருட் சிலேடை நயம்படக் கூறியது; உம்மை உயர்வு சிறப்பும்மை; உலகமுழுதும் உடையராயிருந்தும் திருவொற்றியூரினை விரும்பியருளினார் என்பது திருவொற்றியூரது தனிச் சிறப்பு உணர்த்திற்று. உலக முழுவதி