[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்263

  3387. (வி-ரை.) எண்ண மெல்லாம்...அருளும் - என்று இப்பாட்டிற் கூறியது கோயிலின் புறத்தணைந்தே நம்பிகள் எண்ணமிட்டுச் சொன்னது.
  அவர் அறிய உணர்த்தி - இறைவர் எல்லாவற்றையும் இருந்தாங்கு ஒருங்கே அறிபவர்; ஆயினும் இவ்வாறு எடுத்து அவர் அறியும்படி உணர்த்துதல்அவர்பாற் கொண்ட அன்பினை உறுதிப்படுத்திப் பக்குவப் படுத்தும் பயன் தருவதாம் என்க. நம்பிகள் அவர்பாற் சென்று முறைப்பாடு சொல்லுதல் உலகினை அறிவுறுத்தும் பயன் கருதியதுமாம்; அறிய உணர்த்தி - என்றதுபசாரம்; "உணர்வினா லுணர வொண்ணா வொருவரை யுணர்த்த வேண்டி" (462)
  புறத்தணைந்தே - புறம் - இறைவரது திருமாளிகையின் புறம்; புறமுன்றில்; இதன்மேல் மாலையில் நம்பிகள் சென்று ஒருமருங்கு இருந்து நினைந்து மனம் அழிந்தது கோயிலின் புறத்து உள்ள வேறிடம்.
  எண்ண மெல்லாம்...என்நெஞ்சு - "நெஞ்சம் முமக்கே யிட மாகவைத்தேன்", "வைத்தனன் றனக்கே தலையுமென் னாவும் நெஞ்சமும் வஞ்சமொன் றின்றி" (நம்பி - தேவா) முதலியவை காண்க. எண்ணமெல்லாம் அடிமையாமாறு எண்ணுதலாவது இடையறாது சிவயோக நிலையில்நெஞ்சை நிறுத்துதல்; "நான்மறக்கினுஞ் சொல்லுநா நமச்சிவாயவே" என்று இந்நிலையினைப் புறக்கருவிகளும் பயின்ற பண்பினை நம்பிகள் கூறுவது காண்க; "நாடுவன் நாடுவன் மரபிக்கு மேலேயோர் நால்விரல்" என்ற திருவாமாத்தூர்த் திருப்பதிகமும் கருதுக; "மறக்குமா றிலாத வென்னை" (விள்.) "எண்ணுகே னென்சொல்லி எண்ணுகேனோ, எம்பெருமான் திருவடியே யெண்ணில்லால் கண்ணிலேன்ழு (அரசுகள்); ழுஎண்ணா திரவும் பகலுநா னவையே யெண்ணு மதுவல்லால்" (திருவா) என்றிவ்வாறே எந்தம் பரமாசாரியர்கள் அருளியனவும் கருதுக; எக்காலமும் இடையறாது சிவபெருமானே நமது தலைவர் என்பதும் அவருக்கு நாம் மீளா அடிமைகள் என்பதும், நாம் பிழையே செய்யினும் அவர் கணந்தோறும் நம்பால்அருளே செய்து வரும்பெருங் கருணையாளர் என்பதும், எண்ணிக்கொண்டவாறே வாழ்தல் உய்யும் வழியாமென்பது காட்டப்பட்டவாறு.
  திண்ணம் - திண்மை; உறுதிப்பாடு; சிவனையின்றிப் பிறிதொன்றிலும் எவ்வாற்றாலும் மனம் புகாத உறைப்பு; நிறைகாவாது (3381) என்றது காண்க. உடைவித்தாள் - தீங்குநெறியடையாத தடையாய்க் காவல்புரிந்த நிறை என்னும் மதிலைத் தகர்த்தாள்; சிவனடிமையே நினையும் நம்பிகள்மனம் இங்குப் பிறிதொன்றினிற் செல்ல வழியுண்டாயினதை நிறையாகிய மதில் உடைந்ததனாலாகியது என்றார். ஆயின், இது சிவனருளாகிய நியதியால் விளைந்தமையின் சிவனையன்றி நம்பிகள் மனம் ஈண்டும் புறத்திற் சென்றிலது என்பது உய்த்துணரத் தக்கது. சிவன்பாற் பெறுவேன் என்ற துணிபும், அவ்வாறே வேண்டி நின்றமையும் இந்நிலையினை மாறுபடுத்துவதன்றி அதனையே உறுதிப்படுத்துவதும் காண்க. நிறையின் றிண்மையினை மதிலாக வைத்து உரைத்தது உருவகம்.
  நிலா - மின் ஒளிர் - சடையீர் - வருந்தி வந்தடைந்தாரைக் காத்து வளரச் செய்யும் அருட்டிறம் குறிப்பு; நிலாவும் நெஞ்சமுடைந்து குறைந்தடைந்தனன் என்பது வரலாறு; ஈண்டு நம்பிகளும் அந்நிலையின் அடைந்தனர் என்பது மேல் உயிர்காக்க (3390) என்றதனாற் பெறப்படும்.
  புறம்பணைவார் - என்பதும் பாடம்.
 

223

  3388. (வி-ரை.) மதிவாண் முடியார் - முன்பாட்டிற் கூறிய குறிப்பு.