| |
| 3188. (வி-ரை) எழுந்தருளியிருக்க - நம்பியாரூரர் என்ற எழுவாய் வருவிக்க. |
| (நம்பி) எழுந்தருளியிருக்க - (கோட்புலியார் அவரது) சேவடி விளக்கித் - தெளித்துக்கொண்டு - வீசி - புரிவார் - ஏந்தி (3189) - எடுத்துத் - தாங்கி - நிரைத்தே - இறைஞ்சி - அளித்தார் (3190) என இம்மூன்று பாட்டுக்களையும் தொடர்ந்து முடித்துக்கொள்க. கோட்புலியார் என்ற எழுவாய் தொக்கு நின்றது. |
| தெளித்துக் கொண்டு - தம் மேனிமேல் தெளித்துக் கொள்ளுதல் அதனுட் குளித்துத் தூய்மை பெறும் நிலை. |
| செழும் புனல் - செழுமை - நம்பிகளின் திருவடிச் சம்பந்தத்தாற்போந்தது. |
| மாளிகை எங்கும் புனல் வீசுதல் - மாளிகையினைப் புனிதமாக்கும் பொருட்டு. |
| சிறப்பிற் - புரிவார் - என்க. அர்ச்சனைகள் - இங்கு வழிபாட்டு முறைகளைக் குறித்து நின்றன. அவை மேற்கூறப்பட்டுள்ளன. |
| இயல்பின் முறை - இயல்பாவது வலிந்து மேற்கோடலின்றி உள்ளூர எழும் அன்பினால் தன் இயல்பாக வருவது; முறை - நூல் விதி முறை. |
| புரிவார் - புரிவாராகி; முற்றெச்சம். |
| 34 |
| 3189. (வி-ரை) பூந்தண் பனிநீர் - பூ - பூவினின்றும் எடுக்கப்படும்; தண்மை குளிர்ந்த; பரிசம். குணமுமாக. சமைத்தல் - பனிநீர் கூட்டி அமைத்தல். |
| மான்மதம் - கத்தூரி. தோய்ந்த புகை - புகை தோய்ந்தாற் போலும்; புகைத் தெடுக்கும் வாசனைக் கூட்டுப் பண்டமுமுண்டு. நாவி - புனுகு. |
| பசுங்கர்ப்பூரமுடன் - உடன் என்ற உருபு தந்து, இதுவரை கூறிவந்த வாசனைப் பண்டங்களின் வகைகளை வேறு பிரித்தார். |
| அடைக்காயமுது - தாம்பூலம்; அடைக்காயமுது என்பது பழங்காலக் கல்வெட்டுக்களிற் காணும் சொற்றொடர். |
| எண்ணில் மணிப்பாசனத்து ஏந்தி - பாசனம் - தட்டு - பாத்திரம்; எண்ணில் என்றார் வகைகள் பலவாதலின் தனித்தனி ஏந்துதற் பொருட்டு; ஏந்துதல் - எடுத்தல். |
| சந்தனமெனவே - கர்ப்பூரமுதல் - என்பனவும் பாடங்கள். |
| 35 |
| 3190. (வி-ரை) வேறு...பணிகள் - திருப்பள்ளித்தாமப் பணிகள் - மாலை - கண்ணி - இண்டை முதலாகிய மலர் மாலை அணிவகைகள். |
| மாறிலாத மணித் திருவாபரண வருக்கம் பல - இவை பொன் - மணி - இவற்றாலாகியவை. வருக்கம் - வகையினையும், பல - தொகையினையுங் குறித்தன; மாறு - ஒப்பு. "மாறன்மையின்....இளையாரையு மெறியான்" (சீவகசிந். 2261); மாறில் - ஒளி மாறுதல் இல்லாத என்றலுமாம். |
| பரிவட்டம் துகில் - உத்தரியம் முதலாயின. இறைவருக்கும் அடியார்க்கும் சாத்துவன பரிவட்டமெனப்படுதல் மரபு; ஊழின் - முறைப்படி; நிரைத்தல் - வரிசைபெற அமைத்தல். |
| அடித்தொண்டர் - நம்பியாரூரர்; தொண்டர் பூசைகொள - என்க. கொள்ளுதல் - ஏற்றுக்கொள்ளுதல். |
| 36 |
3191 | செங்கோ லரச னருளுரிமைச் சேனா பதியாங் கோட்புலியார் நங்கோ மானை நாவலூர் நகரார் வேந்தை நண்பினாற் றங்கோ மனையிற் றிருவமுது செய்வித் திறைஞ்சித் தலைசிறந்த பொங்கோ தம்போற்பெருங்காதல்புரிந்தார்; பின்னும்போற்றுவார், | |
| 37 |