266திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  ஏத்துவாராய் (3385);- என (3386) - உணர்த்தி - தளர்வார் (3387) - இருப்ப - அயர்வார் - அழிய - (3388) - எய்தி - என்ன (3389) - எனப்போற்றி - மகிழ்ந்தார் - வன்றொண்டர் (3390) என்று இந்த ஆறு பாட்டுக்களையும் கூட்டி முடிபுபடுத்திக் கொள்க. மருண்டார் - (3383) - புக்கார் (3384) என்று மனமருட்சியுடன் புக்க நம்பிகள்பால் அம்மருட்சி நீங்கி மகிழ்வுண்டாம்வரை இடையீடின்றி ஒரே தொடர்பாய்க் கூறும் கவிமரபும் நயமும் கண்டுகொள்க.
 

236

3391
ண்டு கொண்ட வந்தணனா ரவருக் கருளிக், கருணையினால்,
நீண்ட கங்குல் யாமத்து நீங்கி, வானில் நிறைமதியந்
தீண்டு கன்னி மாடத்துச் சென்று, திகழ்சங் கிலியாராந்
தூண்டு சோதி விளக்கனையார் தம்பாற் கனவிற் றோன்றினார்.
 

237

  (இ-ள்.) ஆண்டு.....அருளி - ஆளாகக் கொண்டருளிய அந்தணனாராகிய இறைவர் அவருக்கு அவ்வாறு அருளிச் செய்து; கருணையினால் - பேரருளினாலே; நீண்ட....நீங்கி - பொழுது நீண்ட இரவிடையே யாமத்தில் நீங்கி வானில்...சென்று - ஆகாயத்தில் நிறைந்த மதி தீண்டுகின்ற உயர்ந்த கன்னிமாடத்திலே சென்று; சங்கிலியாராம்....தோன்றினார் - சங்கிலியாராகிய தூண்டும் சோதியினை உடைய விளக்குப் போன்ற அம்மையார்பால் கனாவிலே தோன்றியருளினார்.
  (வி-ரை.) கருணையினால் - அருளி என்றும், கருணையினால் - நீங்கிச் - சென்று என்றும், கருணையினால் - தோன்றினார் என்றும் மூன்றிடத்தும் கூட்டுக.
  நீங்கி - சென்று - நீங்குதலும் செல்லுதலும், இறைவர்பாற் கூறுவது உபசாரம்; அவர் எங்கும் நீக்கமற நிற்கின்றவர்; போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியர். இவை, வெளிப்படாது மறைதல் வெளிப்படுதல் என்ற பொருள் அளவில் கொள்ளத்தக்கன.
  தூண்டு சோதி விளக்கு அனையார் - "தூண்டா விளக்கன்ன சோதி" (1488 - III - பக் - 357) என்ற விடத்துரைத்தவையும், "தூண்டு சுடரனைய சோதி" (III - பக் - 487) என்றதும் பார்க்க; தூண்டுசோதி - விட்டு ஒளிவிளங்கும் சோதி; உலகத்தாரைஅறிவு கொளுத்திநன்மையில் தூண்டும் என்ற குறிப்புமாம். இங்கு இறைவராற் றூண்டப்பட்டு இனி விளங்க உள்ள விளக்கு என்பதும் குறிப்பு.
  தம்பாற் கனவில் தோன்றினார் - முன் "தம்பாலெய்தி" (3389) என்றவிடத்துரைத்தவை பார்க்க; இறைவர் உயிர்களுக்கு அருள்புரிய வெளிப்பட்டுணர்த்தும் நிலைகள் பலவகைப்படும்; மூவகைப்பட்ட பசுக்களுக்குத் தன்மை முன்னிலை படர்க்கை (குரு)யிடங்களில் வெளிப்பட்டு உணர்த்தும் நிலைகள் ஞானநூல்களில் விளக்கப்படுவன; இனி "நனவிலுங் கனவிலு நாளுந் தன்னொளி, நினைவிலுமெனக்கு வந்தெய்து நின்மலன்" (பிள் - தேவா. கருக்குடி-1) "உன்னியுன்னியுறங்குகின் றேனுக்குத், தன்னை வாய்மூர்த் தலைவனா மாசொல்லி" (அரசு - வாய்மூர்); "கனவிலுந் தேவர்க் கரியாய் போற்றி, நனவிலு நாயேற் கருளினை போற்றி" (திருவா) என்பன முதலியவை கனாநிலையினும் கனவிலும் இறைவரது வெளிப்பாடு உணர்த்தின; இனி, அசரீரியாக விண்ணில் நிறைந்த ஒலியால் உணர்த்துவதும், வேற்றுக் கோலங்களில் வந்தருளுவது முதலியவையும் உண்டு; இவை அவ்வவர் நிலைகளுக்கேற்ப நிகழ்வன; இவ்வேறுபாடு கொண்டு திருவருணிலையினும், உணர்த்தப்பெறுவோர் நிலையினும் ஏற்றத்தாழ்ச்சி காணுதல் பிழையாம்; "ஆட்பாலவர்க் கரு