|
|  | ளும் வண்ணமு மாதி மாண்பும், கேட்பான் புகிலளவில்லை; கிளக்க வேண்டா" என்பது ஆணையாதலின். | 
  |  | 237 | 
  | 3392 |                       | தோற்றும் பொழுதிற் சங்கிலியார் தொழுது விழுந்து         பரவசமாய் ஆற்ற வன்பு பொங்கியெழுந் "தடியே னுய்ய வெழுந்தருளும்
 பேற்றுக்கென்யான்செய்வ?" தெனப், பெரிய கருணைபொழிந்தனைய
 நீற்றுக் கோல வேதியரு நேர்நின் றருளிச் செய்கின்றார்,
 |  | 
  |  | 238 | 
| 3393 |                       | "சாருந் தவத்துச் சங்கிலிகேள்! சால வென்பா         லன்புடையான்; மேரு வரையின் மேம்பட்ட தவத்தான்; வெண்ணெய் நல்லூரில்
 யாரு மறிய யானாள உரியா; னுன்னை யெனையிரந்தான்;
 வார்கொண் முலையாய்! நீயவனை மணத்தா லணைவாய்மகிழ்ந்" தென்றார்.
 |  | 
  |  | 239 | 
  |  | 3392. (இ-ள்.) தோற்றும்...எழுந்து - அவ்வாறு இறைவர் தமது கனாவிலே தோன்றக் கண்டபொழுது   சங்கிலியார் தொழுது நிலமுறவிழுந்து பரவசராகி மிகவும் அன்பு வெள்ளமாகப் பொங்கி நிகழ எழுந்து;   அடியேன்....என - அடியேன் உய்யும் பொருட்டுத் தேவரீர் எழுந்தருளி வரப்பெற்ற பெரும் பேற்றுக்கு   யான் என்ன கைம்மாறு செய்ய வல்லேன் என்று துதிக்க; பெரிய...அருளிச்செய்கின்றார் - பெரிய   கருணையே மேலே பொழிந்தாற் போல விளங்கும் திருநீற்றுக் கோலத்தினை உடைய வேதியராகித் தோன்றிய   இறைவரும் நேரே நின்று சொல்லியருள்கின்றாராகி; | 
  |  | 238 | 
|  | 3398. (இ-ள்.) வெளிப்படை. "சார்கின்ற பெரிய தவத்தினையுடைய சங்கிலியே! கேட்பாயாக;   என்னிடத்தில் மிகவும் அன்புடையவன்; மேருமலையினும் மேம்பட்ட தவத்தினை உடையவன்; திருவெண்ணெய்   நல்லூரில் எல்லாரும் காண யான் ஆளாகக் கொள்ளும் உரிமைபெற்றவன்; உன்னை வேண்டி என்பால்   இரந்தனன்; வாரணிந்த முலையுடையாய்! நீ அவனை மணஞ் செய்து மகிழ்ந்து அணைவாயாக" என்று   அருளிச் செய்தனர். | 
  |  | 239 | 
  |  | இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. | 
  |  | 3392. (வி-ரை.) தோற்றும்பொழுது....என - இந்நிகழ்ச்சிகளும் மேல் (3393 -   3396; 3405 - 3407;) வருவனவும் சங்கிலியார்பாற் கனாநிலையில் நிகழ்ந்தவை; மேல் "எய்தியபே   ரதிசயத்தா லுணர்ந்து எழுந்து" (3407) என்பது காண்க. | 
  |  | "அடியேனுய்ய எழுந்தருளும் பேற்றுக்கு என் யான் செய்வது?" என - இது சங்கிலியார் கனாவிற்கண்ட   இறைவரை நோக்கிக் கூறியது; யான் என் செய்வது என்க. கைம்மாறு என்பது சொல்லெச்சம்;   "எதிர் செய்குறை யென் கொல்?" (1338). | 
  |  | கருணை பொழிந்தனைய நீற்றுக்கோல வேதியர் - இஃது இறைவர் காட்சிதந்த கோலம்;   ஆளுடைய அரசுகளுக்குத் திருமறைக் காட்டிலும் (1541) திருக்கயிலையிலும் (1628), நம்பிகளுக்குத்   திருவெண்ணெய் நல்லூரிலும், திருவாதவூரடிகளுக்குத் திருப்பெருந் துறையிலும் நனாவிற் காட்டிய திருக்கோலங்கள்   இங்கு நினைவு கூர்தற் பாலன. இஃது அவருக்குக் கைவந்த பழங்கோலம் போலும், |