|
| 3399. (வி-ரை.) செய்ய நின்ற குறை - செய்யக் கடவதாய் எஞ்சிநின்ற செயல் - கடமை; செய்து நிறைவாக்க நிற்பதாதலின் குறை எனப்பட்டது. |
| ஒன்றி உடனே நிகழ - ஒன்றுதல் - சேர்தல். உடனே நிகழ்தல் - பிரியாது உடனிருத்தல். |
| ஒன்றுதல் - அகமாகிய மனவொருமைப்பாடும், உடனிகழ்தல் புறமாகிய உடனுறைதலும் குறித்தலின் கூறியது கூறலன்மை யுணர்க; இது திருவொற்றியூரில் பிரியாது அமர்தல் குறித்தது; 3414 பார்க்க. |
| அவள் முன்பு சென்று கிடைத்து இவ்விரவே செய்க - அவள் முன்பு - என்றது அவள் நேரில் கண்டும் கேட்டும் நிற்க என்றதாம்; சென்று கிடைத்து என்றது முற்பட்டுச் செல்ல வேண்டியதும் கிட்டுவதும் உன் செயலாக நிகழ்தல் வேண்டுமென்றதாம்; இவ்விரவே என்றதுசபதம் நிகழும் காலம் குறித்தது - "காலமது வாகவே" (3409) என்பது காண்க; மணம் புணர்தற்குச் - சபதம் செய்க என்றது மணம் புணர்தற்கு இன்றியமையாத முற்செயலாக என்றதாம். |
| நிகழ்வ தொரு - என்பதும் பாடம். |
| 245 |
3400 | "என்செய்தா லிதுமுடியு மதுசெய்வ னியா;னதற்கு மின்செய்த புரிசடையீ! ரருள்பெறுதல் வேண்டு"மென, முன்செய்த முறுவலுடன் முதல்வரவர் முகநோக்கி "யுன்செய்கை தனக்கினியென் வேண்டுவ?" தென் றுரைத்தருள, | |
| 246 |
3401 | வம்பணிமென் முலையவர்க்கு மனங்கொடுத்த வன்றொண்டர் "நம்பரிவர் பிறபதியு நயந்தகோ லஞ்சென்று கும்பிடவே கடவேனுக் கிதுவிலக்கா" மெனுங்குறிப்பாற் றம்பெருமான் றிருமுன்பு தாம்வேண்டுங் குறையிரப்பார். | |
| 247 |
3402 | சங்கரர்தாள் பணிந்திருந்து தமிழ்வேந்தர் மொழிகின்றார் "மங்கையவ டனைப்பிரியா வகைசபதஞ் செய்வதனுக் கங்கவளோ டியான்வந்தா லப்பொழுது கோயில்விடத் தங்குமிடந் திருமகிழ்க்கீழ்க் கொளவேண்டு" மெனத்தாழ்ந்தார். | |
| 248 |
| 3400. (இ-ள்.) என் செய்தால்...யான் - எந்தச் செயலைச் செய்தால் இத்திருமணம் முற்றுப்பெறுமோ அதனை யான் செய்வேன்; மின்செய்த புரிசடையீர் - மின்னொளி விளங்கும் புரித்த சடையினையுடைய இறைவரே!; அதற்கு அருள் பெறுதல் வேண்டுமென - அதற்குத் தேவரீரது திருவருளை அடியேன்பெற வேண்டும் என்று சொல்ல; முன் செய்த...முகநோக்கி - முன்னாற் றோன்றும் புன்சிரிப்புடனே முதல்வராகிய இறைவர்அவரது முகத்தினை நோக்கி; உன் செய்கை....வேண்டுமென்று - சபதம் செய்வதாகிய உனது செயலை நீ முடித்தற்கு இனி என்ன வேண்டுவது என்று; உரைத்தருள - வினாவியருள, |
| 249 |
| 3401. (இ-ள்.) வம்பணி....வன்றொண்டர் - கச்சு அணிந்த இளமுலையாராகிய சங்கிலியாருக்குத் தம் மணத்தை ஒப்புக் கொடுத்த வன்றொண்டர்; நம்பர் இவர்....குறிப்பால் - நம்பராகிய இறைவர் இவர் பிறபதிகளிலும் விரும்பி எழுந்தருளியிருக்கும் திருக்கோலங்களை அங்கங்கும் சென்று சென்று கும்பிடுதலே கடனாகவுடைய எனக்கு இது தடையாகும் என்று கொண்ட திருவுள்ளக் குறிப் |