[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்29

3192
னா விருப்பின் மற்றவர்தா மருமை யான்முன் பெற்றெடுத்த
தேனார் கோதைச் சிங்கடியார் தமையு மவர்பின் றிருவுயிர்த்த
மானார் நோக்கின் வனப்பகையார் தமையுங் கொணர்ந்துவன்றொண்டர்
தூநாண் மலர்த்தாள் பணிவித்துத் தாமுந் தொழுதுசொல்லுவார்.

38

3193
"அடியேன் பெற்ற மக்களிவ; ரடிமை யாகக் கொண்டருளிக்
கடிசேர் மலர்த்தா டொழுதுய்யக் கருணை யளிக்க வேண்டு"மெனத்
"தொடிசேர் தளிர்க்கை யிவரெனக்குத் தூயமக்க"ளெனக் கொண்டப்
படியே மகண்மை யாக்கொண்டார் பரவை யார்தங் கொழுநனார்.

39

3191. (இ-ள்) செங்கோலரசன்....கோட்புலியார் - செங்கோன்மையுடைய சோழ அரசனது அருள் உரிமையுடைய சேனாதிபதியாகிய கோட்புலியார்; நங்கோமானை...இறைஞ்சி - நமது பரமாசாரியராகிய தலைவரைத் திருநாவலூரின் மன்னவரை நட்புரிமையினாலே தமது அரண்மனையில் திருவமுது செய்வித்து வணங்கி; தலைசிறந்த...போற்றுவார் - பெருகும் கடல் போன்ற மிகச் சிறந்த பெருவிருப்புடையராகி மேலும் துதிப்பாராகி;.

37

3192. (இ-ள்) ஆனா விருப்பின் மற்றவர் - குறையாத அப்பெரு விருப்பினாலே அக்கோட்புலியார்; தாம்...கொணர்ந்து - தாம் அருமையாக முன்னே பெற்றெடுத்த தேன் பொருந்திய மாலையணிந்த சிங்கடியார் என்னும் மகளாரையும் அவர் பின்னே, திருமகள்போற் பெற்ற மான்போலும் மருண்ட பார்வையுடைய வனப்பகையார் என்னும் அம்மையாரையும் அழைத்துக்கொண்டு முன் வந்து; வன்றொண்டர்...பணிவித்து - வன்றொண்டராகிய நம்பிகளது தூய புதிதான தாமரை போன்ற பாதங்களில் வணங்கும்படி செய்து; தாமும் தொழுது சொல்லுவார் - தாமும் வணங்கிச் சொல்வாராகி,

38

3193. (இ-ள்) "அடியேன்...வேண்டும்" என - "இவர்கள் அடியேன் பெற்றெடுத்த மக்கள்; இவர்களை அடிமையாக ஏற்றுக்கொண்டருளித் தேவரீரது மணமுடைய மலரடிகளைத் தொழுதுய்ந்திருக்கும்படி கருணை புரியவேண்டும்" என்று சொல்ல; பரவையார் தங் கொழுநனார் - பரவையாரது கணவனாராகிய நம்பிகள்; தொடிசேர்....எனக்கொண்டு - "தொடிகளை யணிந்த தளிர்போன்ற கையினையுடைய இவர்களிருவரும் எனக்குத் தூய்மையுடைய மக்களேயாவார்கள்" என்று திருவுளம் பற்றி ஏற்றுக் கொண்டு; அப்படியே...கொண்டார் - அவ்வாறே மக்கண் முறைமையாகும்படி கொண்டருளினார்.

39

இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
3191. (வி-ரை) செங்கோல் அரசன் அருள் உரிமைச் சேனாபதியாம் கோட்புலியார் - "ஏயர் கோக்குடிதான், மன்னி நீடிய வளவர் சேனாபதிக் குடியாம்" (3159) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க.
செங்கோல் அரசன்- சோழன்; அரசன் பெருமை கூறியபடி; அருள்உரிமைச் சேனாபதி - அருள் - அரசனது அருளுக்குத் தகுதியுடையராய்; உரிமை - வழி வழி மரபின் வரும் உரிமை பெற்ற சேனாபதித் தன்மை.
உரிமைச் சேனாபதியாம் - இக்குடியினின்றே சேனாபதிகளை அரசர் தேர்ந்தெடுக்கும் உரிமை குறித்தது; ஏனாதிநாதர் மன்னர்க்கு வாட்படை பயிற்றும் தொல்குடித் தாயத்தின் வந்தார் என்ற வரலாறும் ஈண்டு நினைவு கூர்தற்பாலது; அரு