|
| பினாலே; தம் பெருமான்....இரப்பார் - தமது பெருமான் திருமுன்பில் தாம் வேண்டுகின்ற குறையினை இரப்பாராகி, |
| 247 |
| 3402. (இ-ள்.) சங்கரர்....மொழிகின்றார் - சங்கரராகிய இறைவரது திருவடிகளைப் பணிந்திருந்து தமிழ்வேந்தராகிய நம்பிகள் சொல்வாராய்; மங்கைதனை....வந்தால் - மங்கையாகிய சங்கிலியைப் பிரியாதிருப்பதற்குரிய சபதத்தைச் செய்வதற்காகஅங்கு உமது திருமுன்பு நான் வந்தால்; அப்பொழுது...வேண்டும் என - அப்பொழுது திருக்கோயிலினை விட்டு நீங்கித் தேவரீர் தங்கும் இடம் திருமகிழின் கீழே இடமாகக் கொண்டெழுந்தருள வேண்டும் என்று; தாழ்ந்தார் - வணங்கினார். |
| 248 |
| இம் மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 3400. (வி-ரை.) இது - இத்திருமணம்; முடியும் - நிறைவேறும்; அது - என்ன செய்தால் முடியுமோ அதனை; "ஒரு சபதம் செய்க" என்று இறைவர் பணித்தாராதலின் இதனை முடித்தற்குச் சபதஞ் செய்ய வேண்டுவதுண்டாயின் அதனை என்பதாம்; சபதம் செய்து மணம் பெறுதல் வழக்கில் இல்லையாதலின் இவ்வாறு உடன்பட்டு வினாவிக் கூறினார். |
| அதற்கு....வேண்டும் - சடையீரே! அதனுக்கு உமது அருள் பெற வேண்டும்; சடையீராகிய உமது அருட்செயலின் துணையும் ஒன்று வேண்டும் என்பது. |
| முன் செய்த முறுவல் - முன் செய்த - முன்னே சிறப்பாகத் தோன்றும்; முறுவல் - புன்னகை; பின்னர்ச் சங்கிலியாருக்கு உணர்த்திய (3405) வகையால் நம்பிகள்பாற் செய்யும் இத்திருவருள் நிலை வேறு என்பது குறிப்பு. |
| உன்செய்கை...என்வேண்டுவதுs - இனி அவள்பால் சென்று சபதம் செய்து மணமுடித்துக் கொள்வது உன் கடமையும் பொறுப்புமாம்; அவ்வாறிருக்க மற்றுச் செய்ய வேண்டுவதொன்று மில்லையே என்பது வினாவின் குறிப்பு. |
| முதல்வர் தாம் - என்பதும் பாடம். |
| 246 |
| 3401. (வி-ரை.) வம்பணி மென் முலையவர் - கங்கை சங்கிலியார்; வம்பு - கச்சு; மங்கைப்பருவம் குறித்தது; மனங் கொடுத்தல் - மனமுழுதும் அவர்பால் வைத்துத் தம் வசமறுதல். |
| "நம்பரிவர்....இது விலக்காம்" எனுங் குறிப்பால் - நம்பிகளது திருவுள்ளத்திற் சபதம் செய்வதனால் விளையும் விளைவுபற்றி எழுந்த குறிப்பு. இது - இவ்வாறு சபதம் செய்தல்; விலக்கு - தடை; குறிப்பு - மனநிகழ்ச்சி; "அர்ச்சனை பாட்டேயாகு மாதலான் மண்மே னம்மைச், சொற்றமிழ் பாடு கென்றான்" (216) என்ற சிவனாணையின்படி அங்கங்கும் சென்று பாடிவருவதே கடமையாகவுடையேன்; சங்கிலியாரைப் பிரியாமைக்குச் சபதஞ் செயதல் திருவொற்றியூரினைப் பிரியலாகாது என்றதாகும்; அதனால் ஏனைப் பதிகளிற் சென்று கும்பிடுதலுக்குத்தடையாம் - என்று உட்கொண்டனர்; சங்கிலியாரையும் உடனழைத்துப் பிறபதியும் கும்பிடலாமே எனின்? அற்றன்று; அவ்வாறு செய்தல் உலகவாழ்க்கையிற் கட்டுண்டுழலும் எம்போன்ற கடையேமாகிய ஏனைமக்களுக்கே இயல்வதொரு செயலாம்; முன்னரும், இனியும், பரவையாரையும் நம்பிகள் உடன்கொண்டு; சங்கிலியாரையும் உடனழைத்துப் பிறபதியும் கும்பிடலாமே எனின்? அற்றன்று அவ்வாறு செய்தல் உலகவாழ்க்கையிற் கட்டுண்டுழலும் எம்போன்ற கடையேமாகிய ஏனைமக்களுக்கே இயல்வதொரு செயலாம்; முன்னரும், இனியும், பரவையாரையும் நம்பிகள் உடன்கொண்டு செல்லாமையும் கண்டுகொள்க; நம்பிகள் இவ்விருவர்பால் நேர்ந்த விளைவு கழியும்வகையளவினால் உலகவாழ்விற் சென்றனரேயன்றி மற்றை அவரது வாழ்வெல்லாம் சிவவாழ்வேயாகி உலகுக்குறுதி பயத்தற்கே நிகழ்ந்தன என்பதும் உய்த்துணர்ந்து கொள்க; "மாதவஞ் செய்த தென்றிசை வாழ்ந்திடத், தீதி லாத்திருத் தொண்டத் தொகைதரப், போது |