278திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  விரியும் மலர்கள் நிறைந்த மகிழமரத்தின் கீழே கொள்வாயாக" என்று குறித்து அருள் செய்ய,
 

251

  3406. (இ-ள்.) மற்றவரும் கைகுவித்து - அதுகேட்ட அச்சங்கிலியாரும் கைகூப்பித் தொழுது; "மாலயனுக் கறிவரியீர்....பெற்றதியான்" என - மாலுக்கும் அயனுக்கும் அறிவதற்கரியவரே! உண்மையாகிய அந்தரங்கத்தை எனக்கு அருளிச் செய்த அதனால் அடியேனாக ஏற்றுக்கொள்ளப் பெற்றேன் யான் என்று கூறி; கண்கள்.....எழுந்தார் - கண்களினின்றும் பெருந்தாரையாக நீர்பெருகி வழிய வெற்றியுடைய இளம் விடையாராகிய இறைவரது சேவடிக்கீழே விழுந்து பணிந்து எழுந்தனர்.
 

252

  இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  3405. (வி-ரை.) முன் போலச் சார்ந்தருளி - முன் வந்த கோலத்திலே கனவிலே சேர்ந்தருளி.
  சூளுறக்கடவன் - சபதம் செய்வான்; சூள் - சபதம்; சூள் உற - சபதம் செய்ய; உறக்கடவன் - செய்வான்; செய்ய இசைந்துள்ளான் என்பது.
  அங்கு நமக்கெதிர் - அங்கு - அப்போது - அவ்விடத்தில் எனக் காலமும் இடமும் குறித்தது.
  நமக்கு எதிர் - நமது எதிரிலே; திருமுன்பில்.
  நமக்கு - நம்முடைய; வேற்றுமை உருபுமயக்கம்.
  எதிர் - ஏழனுருபு விரிக்க.
  இசையாதே - கொள்க - என்று கூட்டுக; இசையாதே - இசையாமல்; வினை எச்சமாயன்றி ஏவல் வினைமுற்றாகக் கொள்ளினுமாம்.
  கொங்கு அலர் பூமகிழ் - மகிழமரத்தின் இயல்பினை விரித்தவாறு, "மகிழினிது கந்தம்" என்றபடி இனிய மெல்லிய மணம் விரிந்து வீசும்பூக்களை "அளவிறப்பக்கொண்டு விளங்குவது மகிழ்; கொங்கு - மணம்; அலர் -விரிந்து வீசுதல். வாளும் பருவத்திலும் வீசுதல்.
  கொள்க - சபதம் செய்யக் கேட்டு ஏற்றுக் கொள்க.
  கொள்வதென - என்பதும் பாடம்.
 

251

  3406. (வி-ரை.) மற்றவரும் - மற்றும் அதுகேட்ட சங்கிலியாரும்; மற்று - என்றது முன்னுரைத்ததனை ஒருவாறு மாற்றும் என்ற குறிப்புடன் நின்றது; இக்குறிப்புப்பட முன்னரும் மற்றவர்தம் (3397) என்றது காண்க.
  அற்றம் - உண்மை - இரகசியம் - அந்தரங்கம்; முன், "அற்றமுறு நிலைமையினால்" (3397) என்றது காண்க.
  அதனில் - அதனால்; அருளிய அச் செயலினால்; அதனில் அடியேனாகப் பெற்றது யான் - அருள்புரிந்த அச்செயலின்மூலம் யானும் ஒருஅடியேனாக ஏற்றுக் கொள்ளப் பெற்றனன் என்பது போதருகின்றது; அதனில் - அற்றம் அருள்புரிந்த அதனினும் - பேற்றினும் - அடியேனாகப் பெற்றது பெரும்பேறு என்ற குறிப்பும் காண்க.
  கண்கள் பெருந்தாரை பொழிந்திழிய - இஃது இறைவரால் அடிமையாக ஏற்றுக்கொள்ளப் பெற்ற அருளின் செயல் கண்டபோது அவரது அளவிறந்த பெருங்கருணையினையும் தமது அளவிறந்த சிறுமையினையும் எண்ண எண்ணப் பெருகும் அன்புக் கண்ணீர்; "எத்தனையு மரியநீ யெளியை யானா யெனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்.....இத்தனையு மெம்பரமோ வைய வையோ