|
| குதல் என்று கொண்டு மின்னும் இடைக்கொப்பாகாது மயங்கும் என்றுரைத்தலுமாம். |
| விதி உடன்பாடு எதிர் விளம்பார்....ஒதுங்கி - இஃது மிக உயர்வாகிய தன்மை நவிற்சியணி; விதி - இறைவரது திருவருள் முறைமை; விதிக்கு என நான்கனுருபு விரிக்க; உடன்பாடு - அதற்குத் தாம் உடன்பட்ட நிலையினை; உடன்பாட்டினை; இரண்டனுருபு தொக்கது; எதிர்விளம்பார் - தமது நாயகராக வரும் நம்பிகளின் எதிரில் வெளிப்படச் சொல்லாதவராகி; விளம்பார் - எதிர்மறை வினை முற்றெச்சம்; சொல்ல மாட்டாதவராய் என்றதும் குறிப்பு. |
| ஒன்றிய...ஒதுங்கி - எதிர் விளம்பாமைக்கும் ஒதுங்குதலுக்கும் காரணம் பெண்மைக்கு குணமாகிய நாணம் என்றதாம்; மடவார் - சேடியர். மடவாருட னொதுங்குதல் - அவர்கள் கூட்டத்தினுடன் ஒதுங்கி மறைந்து கொள்ளுதல். |
| எதிர் விளம்பாமையும் நாணுடன் ஒதுங்குதலும் முதலியன தலைவனைக்கண்ட போது தலைவியர்கள்பால் நிகழ்வன; ஈண்டு மொழிபெற வருந்துதல் - மொழி பெறாதுகூறல் - நாணிக் கண்புதைத்தல் - குறையுற்று நிற்றல் - முதலாக வரும் அகப்பொருட்டுறைகள் நினைவு கூர்தற்பாலன. |
| விதியுடன்பட்டெதிர் விளம்பார் - என்பது பாடமாயின், விதியினை உடன் பட்டாராயினும் அதனை எதிரிற் கூறமாட்டாராய் என்க. இதற்கு இவ்வாறன்றி, விதியாகிய உடன்படுதலும் எதிர்மறுத்தலும் கூறாதவராய் என்று உரைவகுத்தனர் இராமலிங்கத் தம்பிரானார். |
| "விதியுடன்பாட் டெதிர் விளம்பார் - என்பது பாடமாயின் விதிப்படி உடன்பட்டமையால் எதிர் மொழி கொடாராய் என்றுரைக்க" என்பதும் மேற்படி தம்பிரானாருரை. |
| 256 |
3411 | அங்கவர்தம் பின்சென்ற வாரூர "ராயிழையீர்! இங்குநான் பிரியாமை யுமக்கிசையும் படியியம்பத் திங்கண்முடி யார்திருமுன் போதுவீ!" ரெனச்செப்பச் சங்கிலியார் கனவுரைப்பக் கேட்டதா தியர்மொழிவார், | |
| 257 |
3412 | "எம்பெருமா! னிதற்காக வெழுந்தருளி, யிமையவர்கள் தம்பெருமான் றிருமுன்பு சாற்றுவது தகா" தென்ன நம்பெருமான் வன்றொண்டர் நாதர்செய லறியாதே "கொம்பனையீர்! யான்செய்வ தெங்?"கென்று கூறுதலும், | |
| 258 |
3413 | மாதரவர் "மகிழ்க்கீழே யமையு"மென, மனமருள்வார் "ஈதலரா கிலுமாகு மிவர்சொன்ன படிமறுக்கில்; ஆதலினா லுடன்படவே யமையு"மெனத் துணிந்"தாகிற் போதுவீ"ரெனமகிழ்க்கீ ழவர்போதப் போயணைந்தார். | |
| 259 |
| மகிழின் கீழே சபதம் |
3414 | தாவாத பெருந்தவத்துச் சங்கிலியா ருங்காண மூவாத திருமகிழை முக்காலும் வலம்வந்து "மேவாதிங் கியானகலே" னெனநின்று விளம்பினார் மூவார்தண் புனற்பொய்கை முனைப்பாடிப் புரவலனார். | |
| 260 |