288திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  கெதிர் செய்வதற்கு இசையாதே மகிழ்க்கீழே கொள்க" என்றதும் இறைவர் தாமே பணித்தவை. ஆதலின் அவர் பணியால் என்றார். இறைவர் பணித்திராவிடின் சங்கிலியாரது அன்பு கனிந்த திருவுள்ளம் இதில் தாழாது என்பதாம். ஆயின், இறைவர் இவ்வாறு கொடிய செயலினை நம்பிகள் செய்யவும், அதனைச் சங்கிலியார் காணவும் பணித்தது அருளுடைய பரமாகிய இறைவர்பா லருளின்மையோ? எனின், அற்றன்று; இருவர்பாலும் வைத்த பேரருளின் றிறத்தாலே இவ்வாறு பணித்தருளினர் என்க; நோயின்றன்மைக் கேற்ப வலிந்த முறை செய்தும் தீர்க்கும் மருத்துவன் போல என்று கண்டுகொள்க; இம்மாபுராணத்தினுள் வருவனவாய் உலகர்க்கு மிகக் கொடியனவாகக் காண்பனவாகிய எத்துணையோ செயல்கள் எல்லாம் இறைவர் பணித்த வழியாகிய அருட்செய்கைகளே யாமாறும் இங்கு நினைவுகூர்க. இக்கருத்தினை மேற்பாட்டில் நம்பிகள் மகிழ்ந்து துதிக்குமாற்றாலும் கண்டுகொள்க.
  அயர்தல் அறிவழிதல். தம்பிரான் பணியென்று கண்டுவைத்தும் அயர்ந்தது பெண்மையின் இயல்பென்க. "மேற்றானீ செய்வனகள் செய்யக் கண்டு வேதனைக்கே யிடங்கொடுத்து நாளு நாளு மாற்றேன்" (தாண் - ஆவடுதுறை).
 

261

3416
திருநாவ லூராளி தம்முடைய செயன்முற்றிப்
பொருநாகத் துரிபுனைந்தார் கோயிலினுட் புகுந்திறைஞ்சி
"அருணாளுந் தரவிருந்தீர் செய்தவா றழகி!"தெனப்
பெருநாம மெடுத்தேத்திப் பெருமகிழ்ச்சி யுடன்போந்தார்.
 

262

  (இ-ள்.) திருநாவலூராளி....முற்றி - திருநாவலூர்த் தலைவராம் நம்பிகள் தமது செயலாகிய சபதவினையினை முடித்து; பொருநாகத்துரி புனைந்தார்....இறைஞ்சி - பொருகின்ற யானையின்தோலை அணிந்த இறைவரது திருக்கோயிலினுள்ளே புகுந்து வணங்கி; "அருள்நாளும்...அழகிது" என - நாளும் அருளேதர இருந்த இறைவரே! தேவரீர் செய்த ஆறு இது அழகாயிருந்தது என்று; பெருநாமம்......போந்தார் அவரது உயர்ந்த நாமமாகிய திருவைந் தெழுத்தினை எடுத்து மிகத் துதித்துப் பெருமகிழ்ச்சியுடனே புறம் போந்தனர்.
  (வி-ரை.) தம்முடைய செயல் - தமக்கு இறைவர் பணித்த சபதவினை. "ஒருசபதம் அவள் முன்பு சென்று கிடைத் திவ்விரவே செய்க" என்ற செயல்; (3399).
  கோயிலினுள் புக்கு - கோயிலினுள்புக நின்ற நம்பிகள், அங்குப் போகாமல் சேடியர் கூறியபடி மகிழின் கீழ்ச் சபதம் செய்ய வந்தணைந்தனராதலின் அச்செயல் முற்றியபின் கோயிலினுள்ளே புகுந்தனர்.
  நாளும் அருள் தர இருந்தீர் இது செய்தவாறு - அழகு! என்க. நாளும் - நாணாளும்; அனுதினமும்; எந்நாளும் என்றதனால் இனி, இச்சங்கட நிலைமையினின்றும் நீங்கப் பெறுதற்கும் என்றது குறிப்பு. தர என்றது மக்குறிப்பு; இது செய்தவாறு அழகு - இவ்வாறு மகிழ்க்கீழே கொள்ளும்படி அவர்களுக்குப் பணித்தது. இதனைக் கருதலளவையால் நம்பிகள் துணிந்து கொண்டனர் என்க. நம்பிகளுக்கும் இறைவர்க்கும் மட்டில் அமைந்த இச்செய்தியினை (மகிழின்கீழ் இறைவர் விளங்க வீற்றிருப்பதும் அங்குச் சபத முடிப்பதுமாகிய செய்தியினைச்) சங்கிலியாரும் தோழியருமறியச் செய்தல்.