|
|  | நம்பிகள்பால் அறியாமையாற் பலசொல்லி அபசாரப்படும் மாக்கள் இந்நுட்பங்களைக் கண்டு உய்தி   பெறுவாராக. | 
  |  | 268 | 
  | 3423 |                       | இந்நிலையிற் பேரின்ப மினிதமர்வா ரிறையுறையும் மன்னுபுக ழொற்றியூ ரதனின்மகிழ் சிறப்பினாற்
 சென்னிமதி புனைவார்தந் திருப்பாதந் தொழுதிருந்தார்
 முன்னியகா லங்கள் பல முறைமையினால் வந்தகல.
 |  | 
  |  | 269 | 
  |  | (இ-ள்.) இந்நிலையில்...இனிதமர்வார் - முன் கூறியபடி இவ்வாறுள்ள நிலைமையில் பேரின்ப   நுகர்ந்து இனிதாக விரும்பி எழுந்தருள்வாராகிய நம்பிகள்; இறையுறையும் மன்னுபுகழ்.....தொழுது   - இறைவர் எழுந்தருளியுள்ள நிலைபெற்ற புகழினையுடைய திருவொற்றியூரினில் தங்கி மகிழும் சிறப்பினாலே   சிரத்திற்பிறை சூடிய இறைவரது திருப்பாதத்தினைத் தொழுது கொண்டு; முன்னிய...அகல - எண்ணிய   காலங்கள் பலவும் வருமுறையிலே தொடர்ந்து வந்து செல்ல; இருந்தார் - எழுந்தருளியிருந்தனர். | 
  |  | (வி-ரை.) இந்நிலையில் - முன் இரண்டு பாட்டுக்களிலும் கூறிய இந்தச் சிற்றின்பமாகிய   நுகர்ச்சி நிலைமையிலே; பேரின்பம் இனிது அமர்வார் - பேரின்பத்தினை இனிதாக நுகர்ந்துகொண்டு   விரும்பி எழுந்தருளியிருப்பாராகி; சிற்றின்ப நுகர்ச்சியினுள் பேரின்ப நுகர்தலாவது, "பெற்றசிற்   றின்பமே பேரின்ப மாயங்கு, முற்ற வரும்பரி சுந்தீபற; முளையாது மாயையென் றுந்தீபற" என்ற   திருவுந்தியாரினுள் விளக்கப்பட்ட நிலையின் அனுபவம்; "உடம்புடைய யோகிகடா முற்றசிற் றின்பம்,   அடங்கத்தம் பேரின்பத் தாக்கிற் - றொடங்கி, முளைப்பது மொன்றில்லை முடிவதுமொன்   றில்லை, யிளைப்பதுமொன் றில்லை யிவர்" (76) என்ற திருக்களிற்றுப் படியார் இதனை மேலும்   விளக்குதல் காண்க. "ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே யிடைக்கே யெறிவிழியின் படுகடைக்கே   கிடந்துமிறை ஞானங், கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக் குஞ்சித்த சேவடியுங் கும்பிட்டே யிருப்பர்"   (சித்தி 10-5) என்ற ஞானநூன் முடிபு இதனை நன்குவிளக்குதலும் காண்க. முன்னர் 327 - 328 -   329 பாட்டுக்களின் கீழ் உரைத்தவையும் பார்க்க. அமர்தல் - விரும்புதல்; "பயில்யோகம்   பரம்பரையின் விரும்பினார்" (327) | 
  |  | இனிது அமர்வார் - இருந்தார் - என்று கூட்டுக. | 
  |  | சென்னி மதிபுனைவார் - தொழுது - சென்னியின்கண் மதிபுனைவாரது என்றும், மதிபுனைவார்   பாதம் சென்னியாற் றொழுது என்றும் உரைக்கநின்றது; "சரணாரவிந்தமலர் சென்னியிலுஞ் சிந்தையிலு   மலர்வித்து" (328) என்றது காண்க. | 
  |  | பல - காலங்கள் - வந்தகல இருந்தார் - என்று கூட்டுக. இருந்தார் - அப்போது பலகாலங்கள்   வந்தகல என்று குளகமாக்கி அக்காலத்தில் தென்றல் வந்தணைய என்று மேற்பாட்டுடன் கூட்டிமுடித்தலுமாம். | 
  |  | காலங்கள் பல - பருவகாலங்கள் பலவும்; பல என்றதனால் குறைந்ததுமூன்று   பருவங்களாயினும் குறித்தல் வேண்டும். பருவம் - பெரும் பொழுது என்பர்; "இல்லிருத்தல்   முல்லை" "கூடல் குறிஞ்சி"; என்பவாகலானும், "காரு மாலையுமுல்லை குறிஞ்சி, கூதிர் யாம மென்மனார்   புலவர்" (தொல். பொ. அகத். 6). "பனியெதிர் பருவமு முரித்தென மொழிப" (மேற்படி - 7) என்றும்,   "நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு" (மேற்படி - 9) என்றும் கூறுபவாகலானும், ஈண்டு இல்லிருக்கையும்   - கூடலும் - பிரிவும் உரிப்பொருளாகக் கொண்ட முல்லை, குறிஞ்சி, பாலைத் திணையொழுக்கம் நிகழ்வன   வாதலானும், அவற்றின் முதற் பொருளாகிய கார் |