|
| கண்ணுற முன் - அகக்கண்ணினாலே யன்றிப் புறக்கண்ணாலும் முன் பொருந்த என்பது. |
| போலக் கருதினார் - கருத்தில் ஊன்றிய நோக்கினாலே அக்காட்சி புறக்காட்சி நிகழ்ந்தது போலவே யிருந்தது; உருவெளிப்பாடு முதலிய அகப்பொருட்டுறைகள் காண்க. மேல் இதனைத் தொடர்ந்து பிரிவாற்றா நிலையில் அருளும் திருப்பதிகமும், அதனை ஆசிரியரது "மிக நினைந்து ஏசறவாய்" என்று விளக்கியருளும் நிலையும் காண்க. "எத்தனைநாள் பிரிந்திருக்கே னென்னாரூ ரிறைவனையே" (தேவா). |
| கண்டுகொண்டார் - என்பதும் பாடம். |
| 271 |
3426 | பூங்கோயி லமர்ந்தாரைப் புற்றிடங்கொண் டிருந்தாரை நீங்காத காதலினா னினைந்தாரை நினைவாரைப் பாங்காகத் தாமுன்பு பணியவரும் பயனுணர்வார் "ஈங்குநான் மறந்தே"னென் றேசறவான் மிகவழிவார், | |
| 270 |
3427 | மின்னொளிர்செஞ் சடையானை வேதமுத லானானை மன்னுபுகழ்த் திருவாரூர் மகிழ்ந்தானை மிகநினைந்து பன்னியசொற் "பத்திமையு மடிமையையுங் கைவிடுவான்" என்னுமிசைத் திருப்பதிக மெடுத்தியம்பி யிரங்கினார். | |
| 272 |
| 3426. (இ-ள்.) பூங்கோயில்....நினைவாரை - பூங்கோயிலினுள் விரும்பி வீற்றிருப்பவரைப், புற்றினை இடமாகக் கொண்டு வீற்றிருப்பவரை, இடையறாத பெருவிருப்பத்தினாலே தம்மை நினைந்திருக்கும் அடியவர்களைத் தாம் நினைந்திருப்பவரை; பாங்காக...பயனுணர்வார் - முறைமையாகத் தாம் முன்னாட்களிற் பணிய அதனால் வரும் சிவானந்தமாகிய பெரும்பயனை உணர்ச்சியிற் கொள்பவராகி; ஈங்கு நான்...மிக அழிவார் - இவ்விடத்து நான் மறந்திருந்தேன் என்று வருந்தி மிகவும் மனமழிவாராகி. |
| 272 |
| 3427. (இ-ள்.) மின் ஒளிர்....மகிழ்ந்தானை - மின்போல ஒளிவிடும் சிவந்த சடையினை உடையவரை, வேதங்களின் முதல்வராக உள்ளவரை, நிலைபெற்ற புகழை உடைய திருவாரூரினை மகிழ்ந்தவரை; மிகநினைந்து - (பிரிவாற்றாமையால்) மிகவும் நினைந்து; பன்னிய சொல்....இரங்கினார் - பலமுறையும் அடுக்கிய சொற்களையுடைய "பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்" என்று தொடங்கும் சொல்லும் பொருளுமுடைய பண் பழம்பஞ்சுரத்தின் இசைபொருந்திய திருப்பதிகத்தினை எடுத்துப் பாடி இரங்கினார். |
| 273 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| 3426. (வி-ரை.) பூங்கோயில்...நினைவாரை - ஈண்டுக் கூறியவை மூன்றும் புற்றிடங்கொண்ட பிரானாராகிய திருமூலட்டான நாதரை நினைந்த வகை; மேற்பாட்டிற் கூறும் (3427) மூன்றும் வீதிவிடங்கராகிய தியாகேசரை நினைந்தவகை. மேற்பாட்டில் (3427) வரும் மூன்றும் ஒருமையாற் கூறியது தோழமையால் தம்முடன் ஒன்றித்து நிகழும் தன்மையுடையார் என்ற குறிப்புமாம். பதிகத்துள் "இறைவனையே" என்று ஒருமையாற் போற்றியதும், "துரிசுகளுக்கு உடனாகி" என்றதும், பிறவும் கருதுக. |