[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்305

  3432. (இ-ள்.) தொண்டைமானுக்கு....பரவி - தொண்டைமானுக்கு முன்னாளில் அருள்கொடுத்தருளிய பழமையாகிய வள்ளன்மையும் புகழுமுடைய திருமுல்லைவாயி லிறைவரைக் "கொண்ட எனது வெவ்விய துயரினைக் களைந்திட வேண்டும்" என்று துதித்து மேற்சென்று; குறித்த....வருவார் - தாம் குறிக்கொண்ட பெருவிருப்பின் வழியே ஒழிச்செல்ல வருவாராகி வண்டுலாம்...வணங்கி - வண்டுகள் மொய்க்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்து மாடமாளிகைகள் நீடி விளங்கும் திருவெண்பாக்கத்தினைக் கண்ட தொண்டர்கள் எதிர் கொள்ள அறிந்து வணங்கி; காயும்...அடைந்தார் - கோபிக்கும் யானையை உரித்தவராகிய இறைவரது திருக்கோயிலினை அடைந்தருளினர்.
 

278

  இந் நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
  3429. (வி-ரை.) செய்வதனை....நெடிதுயிர்ப்பார் - இவை மூர்ச்சை தெளிந்த பின் நம்பிகள் அடைந்த நிலைகள்; மேற்செய்வது தோன்றாமை - திகைத்தல் - நெடிதுயிர்த்தல் என்பவை ஒன்றன்பின் ஒன்றாக வருவன. நெடிதுயிர்த்தல் - பெருமூச்சு விடுதல்; உயிர்ப்பார் - உயிர்ப்பாராகிய நம்பிகள்; வினையாலணையும் பெயர்.
  உயிர்ப்பார் - நினைந்து (3429) உரைப்பார் - பரவி - நினைவார் - (3430) போந்து - பாடி (3431)- வருவார் - அடைந்தார் (3432) என்று இந் நான்கு பாட்டுக்களையும் முடித்துக்கொள்க.
  மைவிரவு...எனநினைந்து - சூளுறவு - சபதம்.
  மறுத்தல் - மீறி நடத்தல்; மறுத்ததனால் இவ்வினைவந்தெய்தியதாம் என நினைந்து - சபதத்தைக் கடந்ததனால் இவ்வாறு கண் மறைந்தது என்று நினைந்து துணிந்து.
  இனி, ஈண்டு, இவ்வாறு, சபதத்துக்கு மாறாக நடந்தபோது கண்மறையுமோ? ஆயின், இந்நாளில் "நான் சொல்வது சத்தியம்; முழுதும் சத்தியம்; சத்தியமன்றி வேறில்லை; கடவுளறியச் சத்தியம்" என்று சூளுரைத்துப் பொய்யேயன்றிச் சிறிதும் மெய்யின் கலப்புமில்லாது மனமாரப் பொய்ச்சான்று கூறுவோர் அதனால் ஒரு துன்பமுமின்றிச் சுகமாய் மிக்கு நிகழும் காலத்தில் இதனை நம்புவார்? என்று கூறி எக்கலிப்போர் பலருளர். அவரெல்லாம் காலத்தினியலும், அவ்வவர் நிலையும், காலமும் பிறவும் சார்ந்து செல்லும் கன்மநியதியும் அறிந்திலர். உண்மையின் விளக்கம் யுகந்தோறும் மாறுபடும் என்பது ஞானநூல்களின் துணிபு மட்டுமேயன்றி அனுபவத்தும் கண்டது. இதுபற்றியே தருமதேவதை முதல் யுகத்தில் நான்கு கால்களாலும், இரண்டாவதில் மூன்று கால்களாலும், மூன்றாவது நான்காவது யுகங்களில் முறையே இரண்டு கால்களாலும், ஒரு காலாலும் நடக்கும் என்பர். நான்காவதாகிய கலியுகத்தில் அதன் தன்மைக்கேற்றவாறு சத்தியத்தின் வெளிப்பாடு மெத்தென நிகழும்; ஆனாலும் எவ்வாற்றானும் நிகழ்ந்தேவிடும்; பிறழாது. உடனே நிகழாமை கண்டு உண்மைக் கிடமில்லை என முடித்து வாய் வேண்டின சொல்லித் திரிதல் அடாது; "செம்பொன் மேனிவே றாகி நாலாம், பொய்யுகத் தவர்க்குத் தக்க பொருந்துருவாகி மன்னும்" (திருவிளை. புரா -இரசவா - 30); "உவாவள ரனைய கானத்துறுகலி யுகத்தை யஞ்சித், துவாபர யுகவந்தத்திற் றொக்கனர் தவங்க ளாற்றும், அவாவறு வசிட்டர் வச்ச ரகத்தியர் வாம தேவர், தவாதநல் லொழுக்கஞ் சான்ற சவுனக ராதியானோர்" (8); "பரவிய வாண்டு நூற்றுப் பத்துற முடிவு செய்யும் பிரம சத்திரயா கத்தைப் பேணினர் வளர்க்க லுற்றார்" (9) என்ற பேரூர்ப் புராணம் நைமிசப்படல வரலாறும், பிறவும் கருதுக. காலத்தினால் உண்மையின்நிலை மாறுமோ?