| கழிவிரக்கங்கொண்டு உண்மையாகக் கசிந்து உருகி உருகி அவனை நோக்கி முறையிடுவரேல் அவன் இரங்கி அவர் தந் துயர் தீர்த்தல் ஒருதலை என்று ஈண்டு விசேட ஆராய்ச்சி செய்வாருமுண்டு. பாவமன்னிப்பு என்பது சைவசமயக் கொள்கைகளுக்கு உடன்பாடன்று; அது கிறித்துவம் முதலிய புறச்சமயிகள் கொள்கையாம்; அதுவே மக்களைத் தீயசெயல்களுட் புகுத்தும் தூண்டுகோலாய் நிற்கும்; ஆனால் சைவசமயங் கண்டவுண்மையாவது இறைவரை எண்ணித் துதித்தலால் அஃது அந்நோய்க்கு மருந்தாக நின்று அதனுள் இறைவர் விளங்கிக் கன்மபரிபாகம் நிகழ அருளிக் கன்மானுபவத்தை உடலூழாய்க் கழியவோ, அன்றி விரைந்து அனுபவித்துக் கழியவோ, அன்றி வேறு அவ்வவர் துன்பம் அறியாமற் கழியவோ, அன்றி வேறெவ்வாறே ஊட்டுவித்து அருள் புரிவன் என்பதாம். "ஆட்பா லவர்க் கருளும் வண்ணமுமாதி மாண்பும், கேட்பான் புகி லளவில்லை கிளக்க வேண்யா!, கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை, தாட்பால் வணங்கித் தலைநின் றிவை கேட்கதக்கார்", என்ற திருப்பாசுரமுமழு, சார்ந்தாரைக் காத்தல் தலைவர் கடனாதல்ழு என்றற் றொடக்கத்த திருவாக்குக்களும் ஈண்டுக் கருத்த்தக்கன. ழுதொழுவார் வினைமாயுமேழு, "வினைஓடுமே" என வருவன எல்லாம் இவ்வா றறியத்தக்கன. ஈண்டும், மேல்வரும் வரலாறுகளிலும் பலபடியும் மனம்போனவாறு பிதற்றும் ‘அறியா வாய்மை எண்டிசை மாக்கள்' இவற்றை யெல்லாம் உணர்ந்து உய்வார்களாயின் நலமாகும். |
| 275 |
| 3430. (வி-ரை.) "அழுக்கு மெய்கொடு" என்று - இது பதிகத் தொடக்கமாகிய முதற்குறிப்பு. |
| நீள் ஆதிபுரி அண்ணல் - என்க; திருவொற்றியூரிறைவர். இப்பதிகம் திருவொற்றியூ ரெல்லையினைக் கடந்து நின்ற இடத்திற் பாடிய குறிப்பு. |
| "இழுக்கு நீங்கிட வேண்டும்" என்று - இது பதிகக் கருத்தாகிய குறிப்புஎன்று ஆசிரியர் காட்டியருளியவாறு. |
| எய்து வெந்துயர்க் கையறவினுக்கும் பழிக்கும் வெள்கி - கையறவு - பற்றுக் கோடிழந்த நிலை; கணணிழந்தமையால் தம்மைப் பாதுகாக்கவும் நெறி காணவும் தம்மால் இயலாது பிறருதவியை நாட நின்ற நிலை; பழி - சபதம் பிழைத்தமையாற் கண்ணிழந்தார் என்றும், மங்கையார்பாற் சூளுறவு பிழைத்த வன்கண்ணர் என்றும், பிறவாறும் உலகர் கூறும் பழிச்சொல். |
| சாலவும் பலபல நினைவார் - பதிகத்துள் வரும் பற்பல வகைக் கருத்துக்களும் பார்க்க. |
| 276 |
| திருவொற்றியூர் |
| திருச்சிற்றம்பலம் | பண் - தக்கேசி |
| அழுக்கு மெய்கொடுன் றிருவடி யடைந்தே னதுவு நான்படப் பாலதொன் றானால், பிழுக்கை வாரியும் பால்கொள்வ ரடிகேள் பிழைப்ப னாகிலுந் திருவடிப் பிழையேன் வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லான் மற்று நானறி யேன்மறு மாற்றம் ஒழுக்க வென்கணுக் கொருமருந் துரையா யொற்றி யூரெனு மூருறை வானே. | |
| (1) |