[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும்33

மறப்பில் வகைச்"சிங் கடியப்ப" னென்றே தம்மை வைத்தருளி
நிறப்பொற்புடைய விசைபாடி நிறைந்த வருள்பெற்றிறைஞ்சுவார்,

42

3197
ங்கு நின்று மெழுந்தருளி யளவி லன்பி னுண்மகிழச்
செங்க ணுதலார் மேவுதிரு வலிவ லத்தைச் சேர்ந்திறைஞ்சி
மங்கை பாகர் தமைப்பதிகம் "வலிவ லத்துக் கண்டே"னென்
றெங்குநிகழ்ந்த தமிழ்மாலை யெடுத்துத்தொடுத்த விசைபுனைவார்,

43

3198
"நன்று மகிழுஞ் சம்பந்தர் நாவுக் கரசர் பாட்டுகந்தீர்"
என்று சிறப்பித் திறைஞ்சிமகிழ்ந் தேத்தியருள்பெற் றெழுந்தருளி
மன்றி னிடையே நடம்புரிவார் மருவு பெருமைத் திருவாரூர்
சென்று குறுகிப் பூங்கோயிற் பெருமான் செம்பொற் கழல்பணிந்து,

44

3199
றைஞ்சிப் போந்து பரவையார் திருமா ளிகையி லெழுந்தருளி
நிறைந்த விருப்பின் மேவுநா ணீடு செல்வத் திருவாரூர்ப்
புறம்பு நணிய கோயில்களும் பணிந்து போற்றிப் புற்றிடமாய்
உறைந்த பெருமான் கழல்பிரியா தோவா வின்ப முற்றிருந்தார்.

45

3196. (இ-ள்) சிறப்பித்தருளும் திருக்கடைக்காப் பதனினிடை அவ்வாறு கோட்புலியாரைச் சிறப்பித்தருளும் பதிகக் திருக்கடைக்காப்பினிலே; சிங்கடியாரை....பெற்றியினால் - சிங்கடியாரைப் பெற்றெடுத்த பிதாவாகவே தம்மை உட்கொண்டு துணிந்த தன்மையினாலே; மறப்பில் வகை - அத்துணிபு மறவாது நிலைத்திருக்கும்படி; சிங்கடியப்பன்...வைத்தருளி; சிங்கடியப்பன் என்ற தன்மையாலே தம் பெயரைப் பொறித்து வைத்தருளி; நிறப்பொற்புடைய...இறைஞ்சுவார் - நிறம் என்னும் இசைப் பண்பின் அழகு பொருந்தப் பண் இசையினைப் பாடி நிரம்பிய அருளினைப் பெற்று வணங்குவாராகி,

42

3197. (இ-ள்) அங்குநின்றும்....உண்மகிழ - அப்பதியினின்றும் எழுந்தருளிச் சென்று அளவில்லாத அன்பினாலே மனமகிழ்ச்சி பெற்று; செங்கண்...இறைஞ்சி - சிவந்த நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருவலிவலத்தினைச் சென்று சேர்ந்து வணங்கி; மங்கை....என்று - உமையம்மையாரை ஒருபாகத்தில் உடைய இறைவரைப் பாடும் பதிகம் "வலிவலத்துக் கண்டேன்" என்ற முடிபினுடன்; எங்கும்....இசை புனைவார் - எங்கும் விளங்கிய தமிழ் மாலையினைத் தொடங்கித் தொடுத்த இசையினைச் சூட்டுவாராகி,

43

3198. (இ-ள்) நன்று....எழுந்தருளி - "நன்மை விளங்கி மகிழும் திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் என்றிருவருடைய திருப்பாட்டுக்களைக் கேட்டு மகிழ்ந்தருளினீர்" என்று சிறப்பித்து வணங்கி மகிழ்ந்து துதித்துத் திருவருள் பெற்று மேலே எழுந்தருளிச் சென்று; மன்றினிடையே...பணிந்து - திருவம்பலத்தினிடமாகக் கூத்தியற்றும் பெருமான் எழுந்தருளிய பெருமையுடைய திருவாரூரினிற் சென்று சேர்ந்து பூங்கோயிலினுள் எழுந்தருளிய புற்றிடங்கொண்ட பெருமானது செம்பொன் போன்ற திருவடிகளைப் பணிந்து,

44

3199. (இ-ள்) இறைஞ்சி...மேவுநாள் - வணங்கிச் சென்று பரவையாருடைய திருமாளிகையில் எழுந்தருளி நிறைந்த விருப்பினுடனே பொருந்தியிருக்கும் நாட்களிலே; நீடு...போற்றி - நீடிய செல்வத் திருவாரூரின் புறம்பிலே அணுக