[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும் | 313 |
| பதிகக் குறிப்பு:- ஆசிரியர் முன் (3431 - 3432) காட்டியருளினர். | | பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) திருவு மெய்ப்பொருளும்....எண்ணி - இது நம்பிகள் உட்கொண்டு உலகிற் சரித்த நிலை; இறைவரையே தஞ்சமாகக் கொண்ட உறைப்புடையவர்கள் உலகில் வேறெவரையும் பொருளாக மதித்து ஒழுக வேண்டியதில்லை; "உறையினார் மதயானை நாவலா ரூரன்" (நம்பி - கானாட்டு முள்ளூர் - 10) என்ற கருத்துமிது; "நாமார்க்கும் குடியல்லோம்" "அஞ்சுவ தியாதொன்று மில்லை யஞ்ச வருவது மில்லை" என்பனவாதியாக அரசுகள் அருளியனவும் காண்க. திரு - அருட்டிரு; மெய்ப்பொருள் - ஞானம்; செல்வம் - ஏனைப் பொருள்கள்; கழல்கள் - கழல்களே இவையாகக் கொண்டமையால் கழல்கள் இவற்றையெல்லாந் தருவன; ஒருவரை - வேறொருவரையும்; உறாமைகள்- உலகியலிற் பொருந்தாதன; ஊடுதல் - பிணங்குதல்; உறைத்தல் - பிறர்சார்பின்றித் தம்வயமாய் முனைந்து ஒழுகுதல்; இதனையே "மிகைபல செய்தேன்" (6) என்று மேற் கூறுதலும் காண்க.- (2) இலயம் - சதி. கூத்தின் அங்கங்களாகிய பாகுபாடு; திருப்புகழ் - "இறைவன் பொருள்சேர் புகழ்"- (3) மாதர் - உமையம்மையார்; செண்பகச் சோலைசூழ் - இத்தலம் சண்பகவனம் என்றும் வழங்கப்பெறும்; ஒற்றி மாநக ருடையாய் - திருவொற்றியூரினின்றும் நேரே இங்கு எழுந்தருளியமை குறிப்பு; சங்கிலிக்காவென் கண் கொண்ட பண்ப - இதன் குறிப்பினை ஆசிரியர் பதிகத்தின் உட்குறிப்பாகக் காட்டியருளினர் (3431); பண்ப - அருட் பண்புடையோய்; கண்கொண்ட செயல் கொடியதாகக் காணினும் அஃது உனது அருட்பண்புக்கு மாறுபாடன்று என்பது குறிப்பு;- (4) பொன்னலங் கழனி...செந்நெலங் கழனி - பாலியின் நீர்வளங் குறித்தது; இவ்வளம் பாலியாற்றான் வருவதென்பது மேற்பாட்டிற் கூறுதல் காண்க; விரைமருவி - வண் டிசைபாட - "சுரும்பல்லி குடைநீலத் துகளல்ல பகலெல்லாம்" (65); அலவன் - கண்டு; அந்நலம்...உறங்கும் - கண்டுகளின் அனுபவ நல்லறிவு நுட்பம் காட்டியபடி; பல் நலம் - பலபல திறத்து நலங்களையும்;- (5) சந்தன...பாலி - பாலியாற்றின் நீர்வளம்; திருக்குறிப்புத் தொண்டர் புராணம் பார்க்க; வடகரை. முல்லைவாயில் - பாலியின் வடகரையில் உள்ள தலம்; பந்தனை - வினையின் மூலம்;- (6) மற்று...வல்லார் - சிவனது அருள்பெற்ற இறுமாப்பிற் றிளைத்தல்; "எனக் கருளியவாறார்பெறுவா ரச்சோவே" (திருவா) "இறுமாந் திருப்பன் கொலோ?" (அரசு); கள்ளமே...கொள்கையால் - பித்தனென் றேசிய தனையே துதியாகக் கொண்டமை குறிப்பு; பற்றிலேன் - "மற்றுப் பற்றெனக் கின்றி" (நம்பி);- (7) மணி கெழு...கண்ணார் - ஆடற் பெண்களின் வருணனை; எல்லியும் பகலும் பணி - இரவும் பகலு மிடையறாது சிவனை நினைத்துத் துதிக்கும் பணி; "வாயினா லுன்னைப் பரவிடு மடியேன்" (2); பணி அது - "இன்னும் பல்லாறுல கினினம்புகழ்பாடு" என்று அருள்செய்தான் (222) என்று பணித்த அந்த என்று அது - முன்னறி சுட்டு; இதனை மேல்வரும் பாட்டில் "அன்று...ஆட்கொண்ட" என்று விரிப்பது காண்க;- (8) அன்று....சம்புவே - நம்பிகள் அகச்சான்று; திரிதர்வேன் - திரிந்தலைவேன்; கண்ட - கண்டுகொண்ட; பற்றிய;- (9) மட்டுலா....இட்டனே - மார்க்கண்டேயர் வரலாறு; மட்டுலா....மாணி - மார்க்கண்டேயா; மட்டு - வாசனை; மாணி - பிரமசாரி; வணங்கும் - வழிபாட்டின் உறைப்பு;- (10) "சொல்லரும்...இறைவனே" என்று நல்லவர் பரவும் - இறைவர் இத்தலத்திற் செய்த அருளின் வெளிப்பாடு. தலவிசேடம் பார்க்க. இந்த அருட்பெருமையைக் குறிக்கொள்ள ஆசிரியர் (3432) எடுத்துக் காட்டியருளியமை காண்க; முல்லை (கொடி) தலமரம்; சூழ் கொடி |
|
|
|
|